5 நிமிடத்திற்கு ஒரு ஸ்கிரீன்ஷாட்! அந்த வார்த்தை டைப் செய்தால் உடனே போலீஸ் அலர்ட்! இதுதான் வடகொரியா செல்போன்
சியோல்: வடகொரியா எப்போதும் உலக நாடுகளில் இருந்து தனித்து இருப்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே அங்கிருந்து கடத்தி வரப்பட்ட ஒரு செல்போனை வல்லுநர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதில் நீங்கள் கனவிலும் கூட யோசித்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பல சென்சார் மற்றும் கண்காணிப்புகள் இருக்கிறது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
வடகொரியாவில் இருந்து கடத்தப்பட்ட ஒரு செல்போனை ஆய்வு செய்ததால் அங்கு எந்தளவுக்கு சென்சார் இருக்கிறது என்பதை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கிம் ஜாங் உன் அரசு எந்தளவுக்குத் தனது மக்களைக் கண்காணித்து வருகிறது என்பது குறித்த ஒரு புரிதலையும் இது நமக்குத் தருகிறது.

வடகொரியா செல்போன்
கடந்த 2024ம் ஆண்டு வடகொரியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட செல்போன் ஒன்று பிபிசி செய்தி நிறுவனம் வசம் சென்றுள்ளது. அங்குத் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த செல்பைனை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அதில் கண்டறியப்பட்ட பல விஷயங்கள் நமக்கு அதிர்ச்சி தருவதாகவே இருக்கிறது. செல்போனில் இப்படி கூடச் செய்ய முடியுமா என்று யோசிக்கும் அளவுக்குக் கண்காணிப்பு இருக்கிறது.
பொதுவாக பெரும்பாலான செல்போன்களில் ஆண்ட்ராய்டு ஓஎஸ் தான் இருக்கும். இந்த வடகொரியா செல்போனில் ஆண்ட்ராய்டு ஓஎஸ் போல ஒன்று இருந்தாலும் கூட அது முழுக்க முழுக்க மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நாம் பார்க்கும் செல்போன் ஆபரேடிங் சிஸ்டமும் இதுவும் முற்றிலுமாக வேறு வேறாக இருக்கிறது.
வடகொரியா கொள்கைகள்
செல்போனை ஆய்வு செய்தால் அது முழுக்க முழுக்க வடகொரிய அரசின் கொள்கைகளைப் பரப்புவது போலவே இருக்கிறது. மேலும், தென் கொரியாவிற்கு எதிரான வெறுப்பு கருத்துகளையும் அதில் பார்க்க முடிகிறது. ஆன்லைனில் அதன் குடிமக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நொடிக்கு நொடி கண்காணிக்கும் கருவிகளையும் சாப்ட்வேர்களையும் கொண்டதாக அவை உள்ளன.
இணையம் இல்லை
எது வடகொரியாவில் இணையச் சேவை எல்லாம் இருக்குமா என நீங்கள் யோசிக்கலாம். உண்மையில் அங்கு இணையச் சேவை எதுவும் பொதுமக்களுக்கு இருக்காது. உயர் அதிகாரிகள் மட்டுமே இணையச் சேவையைப் பயன்படுத்த முடியும். பொதுமக்கள் வைத்திருக்கும் செல்போனில் இணையச் சேவை எல்லாம் சுத்தமாக இருக்காது. அதற்குப் பதிலாக குவாங்மியோங் என்று அழைக்கப்படும் க்ளோஸ்ட் இன்ட்ராநெட் அமைப்பை மட்டுமே அந்நாட்டு மக்களால் பயன்படுத்த முடியும்.
இன்ட்ராநெட் என்றால் அது ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் இயங்கும் நெட்வொர்க். இது வெளியே பார்க்க இணையம் போலவே தெரிந்தாலும் அனைத்து கண்டென்டுகளும் இதில் வராது. வடகொரிய அரசு அளிக்கும் கண்டெண்டுகள் மட்டுமே இதில் இருக்கும். வெளி உலகத்துடன் எந்த தொடர்பையும் இது வழங்காது. இந்த செல்போனிலும் கூட பல மாற்றங்களைச் செய்துள்ளனர்.
அடுத்த நொடி வரும் அலர்ட்
நீங்கள் டைப் செய்யும் வார்த்தைகள் கூட தானாகவே மாறுமாம். உதாரணமாக தென்கொரியாவில் காதலைக் குறிக்க 'oppa' என்ற வார்த்தை பயன்படுத்துவார்கள். இந்த வடகொரிய செல்போனில் நீங்கள் 'oppa' என டைப் செய்தால் அது தானாகவே 'தோழர்' என்று மாறிவிடும். அத்தோடு கூடவே போலீஸ் எச்சரிக்கை போல ஒரு மெசேஜ்ஜும் வரும். அதாவது "இந்த வார்த்தையை உங்கள் உடன்பிறப்புகளை விவரிக்க மட்டுமே பயன்படுத்த முடியும்" என்ற எச்சரிக்கை மெசேஜ் வருகிறது.
அதேபோல இந்த செல்போனில் நீங்கள் தென் கொரியா என டைப் செய்தால் அது தானாகவே "பொம்மை நாடு" என்று மாற்றப்படும். தென் கொரியாவுக்கு வடகொரியா அளித்துள்ள அதிகாரப்பூர்வ பெயர் இந்த பொம்மை நாடு என்பதாகும். எனவே, ஒருவர் தென் கொரியா என டைப் செய்தாலும் கூட அது பொம்மை நாடு என்றே மாறிவிடுகிறது.
5 நொடிக்கு ஒரு ஸ்கிரீன் ஷாட்
இந்த செல்போனை வல்லுநர்கள் ஆய்வு செய்ததில், செல்போன் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறைத் தானாக யூசர் அனுமதி இல்லாமல் ஸ்கிரீன் ஷாட் எடுப்பதும் தெரிய வந்துள்ளது. ஆனால், அந்த ஸ்கிரீன் ஷாட்களை வடகொரிய மக்களால் பார்க்கவோ டெலிட் செய்யவோ முடியாது. வடகொரிய அரசு அதிகாரிகள் சோதனை நடத்தும்போது மட்டுமே அந்த ஸ்கிரீன் ஷாட்களை ஆய்வு செய்ய முடியுமாம். மேலும், அந்த செல்போன் பார்க்க எப்படி இருக்கிறதோ அதை அப்படியே பராமரிக்க வேண்டுமாம். எதாவது கூடுதலாக மாற்றினால் அது கடுமையான குற்றமாகக் கருதப்படும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications