ஹமாஸ் போராளிகளால் பிடிக்கப்பட்டதாக கருதப்பட்ட இஸ்ரேல் வீரர் போரில் பலி!
ஜெருசலேம்: ஹமாஸ் போராளிகளால் பிடித்துச் செல்லப்பட்டதாக கருதப்பட்ட இஸ்ரேல் ராணுவ வீரர் போரின்போது ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தற்போது இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்தத் தகவலை இன்று காலை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது. வெள்ளிக்கிழமை காலை நடந்த உக்கிரமான போரின்போது ஹமாஸ் தாக்குதலில் இந்த வீரர் பலியானதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட வீரரின் பெயர் ஹதர் கோல்டின். 23 வயதாகும் இவர் மத்திய இஸ்ரேலின் கபார் சபா பகுதியைச் சேர்ந்தவர்.
இஸ்ரேல் -ஹமாஸ் இடைய ஏற்பட்ட 72 மணி நேர போர் நிறுத்த ஒப்பந்தம் அதிரடியாக இரு தரப்பாலும் மீறப்பட்டு தொடர்ந்து உக்கிரமான தாக்குதல் நடந்து வருகிறது. இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் 1650 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதே போல இஸ்ரேல் தரப்பில் 63 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழப்பு என்னவோ பாலஸ்தீனத்தில்தான் அதிகம். அதிலும் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள்தான் மிக அதிகம். ஆனால் 63 ராணுவ வீரர்களை இழந்து விட்டோம். என்ன செய்கிறார் பிரதமர் பெஞ்சமின் நதாயன்ஹூ என்று இஸ்ரேலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாம். இதனால் ஹமாஸை அழிக்கும் வரை போர் தொடரும், தாக்குதல் உக்கிரமாகும் என்று பெஞ்சமின் நதாயன்ஹு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டிவிக்கு அளித்த ஒரு பேட்டியில் இஸ்ரேல் தனது இலக்குகளை நோக்கி முன்னேறிக் கொண்டுள்ளது. இஸ்ரேலில் மீண்டும் அமைதி திரும்பும். இதுதொடர்பாக அளித்த வாக்குறுதிகளை நான் மறக்கவில்லை. நமது உத்திகளில் மாற்றம் வரும். இலக்கு நிறைவேறும் வரை போர் தொடரும் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications