Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சோகத்தில் முடிந்த ஈஸ்டர் பயணம்.. பஸ் விபத்தில் 45 பேர் உடல் கருகி பலி! 8 வயது சிறுமி படுகாயம்

Subscribe to Oneindia Tamil

கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவில் நடந்த மிக மோசமான சாலை விபத்தில் ஈஸ்டர் பண்டிகைக்கு சர்ச் சென்ற 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த வாரம் புனித வெள்ளி, ஈஸ்டர் என கிறிஸ்துவர்களுக்கு முக்கியமான வாரமாக இருக்கிறது. இதனால் கிறிஸ்துவர்கள் சர்ச் சென்று வழிபட்டு வருகிறார்கள். இந்தச் சூழலில் மோசமான சாலை விபத்து ஒன்று இப்போது தென் ஆப்பிரிக்காவில் அரங்கேறி உள்ளது.

South Africa bus accident 8 year Girl is the only survivor 45 killed in bus crash

மிக மோசமான விபத்து: தென்னாப்பிரிக்காவின் வடக்கு மாகாணமான லிம்போபோவில் பேருந்து ஒன்று விபத்தில் சிக்கிய நிலையில், அதில் 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே ஒரு குழந்தை மட்டும் பலத்த காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தன. மாமட்லகலா என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் அருகே உள்ள பாலத்தில் உள்ள தடுப்புகளில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

8 வயது சிறுமி: பேருந்து பாலத்தில் இருந்து கழிந்து கிழே விழுந்ததில் தீப்பிடித்து எரிந்து விபத்து ஏற்பட்டு இருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் போட்ஸ்வானாவில் இருந்து லிம்போபோவில் உள்ள மோரியா என்ற நகரத்திற்கு ஈஸ்டர் நிகழ்வுக்காகப் பக்தர்களை அழைத்துச் சென்ற பேருந்து தான் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேரும் அங்கே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே ஒரு 8 வயது சிறுமி மட்டுமே படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்த உடன் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற போக்குவரத்து அமைச்சர் சிண்டிசிவே சிக்குங்கா, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார். உயிரிழந்தோர் உடல்களை அவர்களின் குடும்பத்தினருக்கு அனுப்ப தென்னாப்பிரிக்க அரசு உதவும் என்று கூறிய அவர், விபத்துக்கான காரணம் குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார். ஈஸ்டர் வார இறுதியில் அதிகமான மக்கள் பயணிக்கும் நிலையில், கவனமாக இருக்கும்படியும் அவர் அறிவுறுத்தினார்.

முதல்முறை இல்லை: தென் ஆப்பிரிக்காவில் இதுபோன்ற விபத்துகள் நடப்பது இது முதல்முறை இல்லை. தென் ஆப்பிரிக்காவில் சாலைகள் மிக மோசமாக இருப்பதால் ஏற்கனவே அங்கே பல மோசமான சாலை விபத்துகள் அரங்கேறி உள்ளன. அந்த வரிசையில் இந்த மோசமான விபத்தும் அரங்கேறி உள்ளது. சில உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிக்கப்பட்டன, மற்றவை இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தன அல்லது சம்பவ இடத்தில் சிதறிக்கிடந்ததாக அதிகாரிகள் கூறினர்.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், அது முழுமையாக முடிய சில நாட்கள் வரை ஆகும் என்று அதிகாரிகள் கூறினர். இந்த விபத்திற்கான காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை. இந்த விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+