Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அழிவு நெருங்கிடுச்சு.. தென்னாப்பிரிக்காவில் நடக்கும் மிகப்பெரிய மாற்றம்! அடுத்து இந்தியா தான்!

Subscribe to Oneindia Tamil

கேப் டவுன்: உலகம் வேகமாக வெப்பமாகி வருவதால், வானிலையில் தீவிர மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா காலநிலை மாற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள விஞ்ஞானிகள், அந்நாடு கடல் மட்டத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மேலே எழும்பி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

காலநிலை மாற்றம் நிச்சயமற்ற வானிலையை ஏற்படுத்தும். ஆனால் இது எந்த நாட்டை எப்போது பாதிக்கும் என்று சொல்ல முடியாது. அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாக தென்னாப்பிரிக்காவை காலநிலை மாற்றம் பதம் பார்க்க தொடங்கியுள்ளது. இந்த நாட்டை சுற்றியுள்ள கடல் நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே, இந்த நாடு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 மி.மீ என்கிற அளவில் உயரமடைந்து வருகிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

South Africa ocean Climate change

கடுமையான வறட்சி, போதுமான மழை இல்லாததுதான் இதற்கு காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தென்னாப்பிரிக்காவுக்கு மேல் இயங்கி வரும் GNSS செயற்கைக்கோள் மூலமாக இந்த விஷயம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வகை செயற்கைக்கொள்கள் வளிமண்டலம் குறித்த ஆய்வு செய்யும். அதேபோல உயரம் தொடர்பான தகவல்களையும் துல்லியமாக வழங்கும். கடந்த 2012 முதல் 2020 வரை இந்த செயற்கைக்கோளின் டேட்டாவை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது, தென்னாப்பிரிக்கா தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது இந்த 8 ஆண்டுகளில் தென்னாப்பிரிக்கா மொத்தம் 6 மி.மீ என உயர்ந்திருக்கிறது என்று, பான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியல் நிபுணர் கரேகர் கூறியுள்ளார். இது குறித்த அவர் மேலும் கூறுகையில், "புவியின் மேலோட்டில் ஏற்படும் மாற்றங்கள் இதுபோன்று நிலப்பரப்பை உயர்த்தலாம். மலைகள் கூட இப்படி உருவானதுதானே? ஆனால், எங்களுக்கு இன்னொரு சந்தேகமும் இருந்தது. வெப்பமயமாதல் காரணமாக கடல்நீர் மட்டம் குறைந்திருக்கலாம் என யோசித்தோம்.

நாங்கள் யோசித்தது பின்னர்தான் சரி என்பதை உணர்ந்துக்கொண்டோம். இதற்காக நாங்கள் நாடு முழுவதும் உள்ள பகுதிகளில் பனிப்பொழிவு நிலைமையை கண்காணித்தோம். ஏரி, குளம், குட்டை என மற்ற நீர்நிலைகளையும் கண்காணித்தோம். இந்த தரவுகளை பகுப்பாய்வு செய்து, இறுதியில் வெப்பம் காரணமாக நீர் ஆவியாகியிருப்பதே நிலத்தடி உயர்வுக்கு காரணம் என்பதை தெரிந்துக்கொண்டோம். இதற்கு முன்னர் கூட இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

2015-2019ம் ஆண்டும் இதேபோன்று வறட்சி அதிகமாக இருந்தது. அப்போதும் கூட நிலத்தடி மட்டம் அதிகரித்து வந்திருக்கிறது. இந்த சமயத்தில் தண்ணீர் இல்லாத 'பூஜ்ஜிய நாளை' தென்னாப்பிரிக்கா எதிர்கொண்டது. நாங்கள் மேற்கொள்ள ஆய்வு சரியானதா? என்பதை தெரிந்துக்கொள்ள நாசா மற்றும் ஜெர்மனி நாட்டின் செயற்கைக்கோள்களின் உதவியையும் நாடியிருந்தோம். இறுதியாக, காலநிலை மாற்றம்தான் வறட்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வறட்சிதான் தென்னாப்பிரிக்காவின் எழும்பலுக்கு காரணம் என்பது உறுதியாகியிருக்கிறது" என்று கூறியுள்ளனர்.

காலநிலை மாற்றம் என்றால் என்ன?:

உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரிபொருட்களை நாம் பயன்படுத்துகிறோம். இதிலிருந்து வெளியாகும் கரியமில வாயுக்கள் வளிமண்டலத்தின் அடர்த்தியை இழக்க செய்கிறது. மறுபுறம் வளிமண்டலத்தில் கரியமில வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்கிறது. இதனால் சூரியனின் வெப்பம் பூமிக்குள் வந்து, வெளியேற முடியாமல் இங்கே தங்கிவிடுகிறது. இது தொடர்ந்து நடக்க, பூமி இயல்பான வெப்பநிலையை விட அதிக வெப்பநிலையை எட்டுகிறது.

எனவே துருவ பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுகின்றன. இது கடல் நீர் மட்டத்தை அதிகரிக்கிறது. ஆனால் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் வெப்பம் அதிகமாகி கடல்நீர் மட்டம் குறைந்துவிடுகிறது. இப்படி ஒரு பகுதியில் வேறு மாதிரியும், மற்றொரு பகுதியில் வேறு மாதிரியும் கடல்நீர் மட்டம் உயர்வது, திடீர் வெள்ளம், வறட்சி உள்ளிட்டவை ஏற்படுவது என எல்லாவற்றிற்கும் இந்த காலநிலை மாற்றம்தான் காரணம்.

இன்று தென்னாப்பிரிக்காவில் நடந்தது நாளை, இந்தியாவிலும் நடக்கலாம். இந்தியாவில், கடற்கரை நகரங்கள்தான் பொருளாதாரத்திற்கு முக்கிய காரணியாக இருக்கிறது. இது அடுத்த 50 ஆண்டுகளில் ஒரேயடியாக மூழ்கலாம் என்றும் விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+