சொந்த மக்கள் மீதே குண்டுவீச்சு.. அமெரிக்காவுடன் + தென்கொரியா பயிற்சியில் விபரீதம்.. ஷாக் பின்னணி
சியோல்: வடகொரியாவுக்கு எதிராக போர் பயிற்சியில் அமெரிக்காவுடன் சேர்ந்து தென்கொரியா ஈடுபட்டது. அப்போது தென்கொரியாவின் போர் விமானத்தில் இருந்த வெடிகுண்டுகள் குடியிருப்புகள் மீது விழுந்து வெடித்தன. இதில் 8 பேர் காயமடைந்த நிலையில் சொந்த நாட்டினர் மீது தென்கொரியாவின் விமானத்தில் இருந்து வெடிகுண்டு வீசப்பட்டது எப்படி? என்பது பற்றி திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
வடகொரியாவும் - தென்கொரியாவும் அண்டை நாடுகளாக உள்ளன. இந்த 2 நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் என்பது இருந்து வருகிறது. தென்கொரியாவை ஒப்பிடும்போது வடகொரியா பலம் வாய்ந்துள்ளது. ஆயுத பலம், ஏவுகணை பலம், அணுகுண்டுகளை வடகொரியா வைத்துள்ளது. ஆனால் தென்கொரியாவிடம் நவீன போர் ஆயுதங்களில் பற்றாக்குறை உள்ளது.

இதனால் தென்கொரியாவை, வடகொரியா அதிபர் கிம்ஜாங் உன் மிரட்டி வருகிறது. அதேபோல் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் பஞ்சாயத்து இருக்கிறது. இதனால் தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா உதவி செய்து வருகிறது. அதுமட்டுமின்றி தென்கொரியாவில் அமெரிக்க படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இருப்பினும் வடகொரியா அஞ்சவில்லை. அவ்வப்போது தென்கொரியா எல்லையில் ஏவுகணை சோதனைகளை நடத்தி அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை மிரட்டி வருகிறது. இப்படியான சூழலில் தான் வடகொரியாவை சமாளிக்கும் வகையில் தென்கொரியாவில் கூட்டு ராணுவ பயிற்சி நடந்து வருகிறது. இதில் தென்கொரியா, அமெரிக்காவுடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது.
நேற்றைய தினம் அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டது. வடகொரியா எல்லைக்கு மிகவும் நெருக்கமாக அமைந்துள்ள போச்சியோன் என்ற இருநாட்டு படைகளும் போர் ஒத்திகையில் ஈடுபட்டனர். அமெரிக்கா மற்றும் தென்கொரிய போர் விமானங்கள் வானில் பறந்து போர் பயிற்சி மேற்கொண்டன.
அப்போது தென்கொரியாவின் கேஎப்-16 ரக போர் விமானங்கள் திடீரென சொந்த நாட்டின் குடியிருப்புகள் மீதே குண்டு மழை பொழிந்தன. போச்சியோன் ஊரில் உள்ள சர்ச், வீடுகள் மீது குண்டு விழுந்து வெடித்தது. இதில் அனைத்து கட்டடங்களும் தரைமட்டமாகின. 8 பேர் வரை காயமடைந்தனர். இதில் 6 பேர் லேசான காயமடைந்துள்ள நிலையில், 2 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.
இருப்பினும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது தென்கொரியா தனது சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டு வீசியது என்பது பற்றிய கேள்விகள் எழுந்தன. இதுபற்றி விசாரித்தபோது தான் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. அதாவது தென்கொரியாவின் கேஎப்-16 ரக போர் விமானம் என்பது அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கிய எப்-16 ரக போர் விமானத்தின் மாடலில் தயாரிக்கப்பட்டதாகும்.
இந்த விமானத்தில் எம்கே-82 குண்டுகளுடன் போர் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக 8 குண்டுகள் விமானத்தில் இருந்து திடீரென்று கீழே குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த எதிர்பாராத சம்பவத்துக்கு தென்கொரியா அரசு மன்னிப்பு கேட்டுள்ளது. அதோடு பாதிக்கப்பட்டவர்கள் வேகமாக குணமடைய விரும்புகிறோம் என்று தென்கொரிய விமானப்படை கூறியுள்ளது. வடகொரியாவை மிரட்ட அமெரிக்காவுடன் சேர்ந்து தென்கொரியா விமானப்படை மேற்கொண்ட போர் பயிற்சியில் குடியிருப்புகள் மீது குண்டு விழுந்து வெடித்த சம்பவம் அங்கு பெரும் பீதியை ஏற்படுத்தியது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications