அந்த 3 மேஜர் கேள்விகளுக்கு பதிலில்லை! தென் கொரியா விமான விபத்து! உண்மையில் என்ன நடந்தது! பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

சியோல்: தென்கொரியாவில் இன்று ஏற்பட்ட மோசமான விமான விபத்தில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே இந்த விபத்து எப்படி நடந்திருக்கலாம் என்பது தொடர்பாக சில மேஜர் தகவல்கள் வெளியாகியுள்ளது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவாக விமான போக்குவரத்து தான் பாதுகாப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால், சமீப காலமாக விமான விபத்துகள் குறித்து வெளியாகும் செய்திகள் நம்மை அச்சுறுத்துவதாக இருக்கிறது.

south korea flight accident

விமான விபத்து:

சமீபத்தில் தான் அஜர்பைஜான் நாட்டிற்குச் சொந்தமான விமானம் விபத்தில் சிக்கியது. ரஷ்யா இந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்தியிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவம் நடந்து சில நாட்களில் தென்கொரியாவில் இன்று மற்றொரு மிக மோசமான விபத்து அரங்கேறியது. அதாவது தென் கொரியாவின் முவான் என்ற இடத்தில் அந்நாட்டின் ஜெஜு ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 140க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடரும் நிலையில், உயிரிழப்பு என்று அஞ்சப்படுகிறது.

போயிங் 737-800 விமானம் பெல்லி லேண்டிங் முறையில் தரையிறங்க முயன்ற போது, விமானம் சுவரில் மோதியதில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து முவான் நோக்கி வந்த இந்த விமானத்தில் 181 பேர் இருந்துள்ளனர். இதுவரை ஒருவரை மட்டுமே உயிருடன் மீட்டுள்ளதாகத் தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எப்படி நடந்தது:

இதற்கிடையே இந்த விபத்து எப்படி நடந்தது.. இதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதாவது விமானம் பறக்கும் போதே அதன் லேண்டிங் கியரில் பிரச்சினை இருந்தது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே பெல்லி லேண்டிங் முறையில் தரையிறங்க முடிவு செய்துள்ளனர். பெல்லி லேண்டிங் முறையில் தரையிறங்கிய சில நொடிகளில் விமானத்தின் ஒரு பகுதி அங்கிருந்த சுவரில் மோதியதில் தீப்பிடித்துள்ளது.

இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், "முதலில் வழக்கமான முறையில் தான் தரையிறங்க முயற்சி நடந்தது. ஆனால், லேண்டிங் கியரில் பிரச்சினை இருந்ததால் தரையிறங்க முடியவில்லை. இதன் காரணமாகவே பெல்லி லேண்டிங் முறையைப் பின்பற்ற முடிவு செய்யப்பட்டதது. விமானத்தின் மீது பறவை மோதியதால் இதுபோல நடந்து இருக்கலாம்" என்றார்.

3 முக்கிய கேள்விகள்:

அதேநேரம் முன்னாள் விமானிகள் உள்ளிட்ட பலரும் இந்த விபத்து தொடர்பாகப் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதாவது அங்கிருந்த ஓடுபாதையின் நீளம் வெறும் 3 கிமீ தான். அப்படியிருக்கும் போது விமானம் அதிவேகமாகத் தரையிறங்க முயன்றது ஏன்? பெல்லி லேண்டிங் முறையில் விமானம் தரையிறங்குகிறது என்றால் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.. ஆனால், அவர்கள் யாரும் இல்லாதது ஏன்? என்ற கேள்விகளை எழுப்புகின்றனர்.

மேலும், பொதுவாக விமானத்தில் எதாவது தொழில்நுட்ப கோளாறு இருந்தால்.. அதற்கான தீர்வை கண்டறியக் கொஞ்ச நேரம் எடுத்துக் கொள்வார்கள். அப்போது விமானத்தை ஏர்போர்ட்டை சுற்றி வட்டமடிப்பார்கள். அந்த நேரத்தில் தீர்வு குறித்து அதிகாரிகள் ஆராய்வார்கள். ஆனால், விமானத்தின் டேட்டாவை ஆய்வு செய்ததில் பெல்லி லேண்டிங் முறைக்கு முன்பாக விமானம் வட்டமிடவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இதுவும் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக இருக்கிறது.

அதிகாரிகள் சொல்வது என்ன

அதாவது பறவை மோதியதில் விமானத்தின் லேண்டிங் கியர் சேதமாகியிருக்கிறது. இதனால் பெல்லி லேண்டிங் முறையில் தரையிறங்க முயன்ற நிலையில், அப்போது இருந்த மிக மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என்று விமான நிலைய அதிகாரிகள் கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+