தென் கொரிய கப்பல் விபத்து: கேப்டன் கைது
சியோல்: தென்கொரியாவில் கடலில் மூழ்கிய கப்பலின் கேப்டன் லீ கைது செய்யப்பட்டு காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அவர் மீது பணியில் அலட்சியமாக இருத்தல், கடல்சார் சட்டங்களை மீறுதல் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் கொரியாவிற்கு அருகே உள்ள ஜீஜூ என்ற சுற்றுலா தீவுக்கு மிகப்பெரிய சொகுசு கப்பல் ஒன்று கடந்த 15 ஆம் தேதி புறப்பட்டது. அதில் 325 மாணவர்கள் உட்பட 475 பேர் பயணம் செய்தனர். ஆனால், புறப்பட்ட மூன்று மணி நேரத்தில் அந்த கப்பல் விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்தை நெருங்கிய போது, கப்பல் உடைந்து மூழ்கிக் கொண்டிருந்தது. மாயமானவர்களை மீட்கும் பணியில், 169 படகுகளும், 29 ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டுள்ளனர்.

268 பேர் மாயம்
கடல் சீற்றம், மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. எனினும், நீச்சல் வீரர்கள் 500 பேர் காணாமல் போனவர்களை தேடிக்கொண்டிருக்கின்றனர். இதுவரை 179 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 28 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 268 பேரை காணவில்லை.

கப்பல் நிர்வாகம் அலட்சியம்
இந்த சூழ்நிலையில், கப்பல் எப்படி மூழ்கியது என்பது குறித்து கப்பல் நிர்வாகம் உரிய பதில் அளிக்கவில்லை. அந்த கப்பலில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் விபத்திற்கு காரணமான கப்பலின் கேப்டனை கைது செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினர்.

கைது வாரண்ட்
இந்நிலையில், 'கப்பல் நிர்வாகம்' விபத்திற்கான ஆதாரங்களை அழித்திருக்கலாம் என்பதை மேற்கோள் காட்டியுள்ள தென் கொரியாவின் மோக்போ உள்ளூர் நீதிமன்றம், விபத்திற்குள்ளான கப்பலின் கேப்டன் லீ ஜூன் சியோக் மற்றும் அவரது பணிக்குழுவில் இருந்த 2 உதவி கேப்டன்களையும் கைது செய்ய வாரண்ட்களை பிறப்பித்தது.

கேப்டன் கைது
இதையடுத்து, கேப்டன் லீ கைது செய்யப்பட்டு காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அவர் மீது பணியில் அலட்சியமாக இருத்தல், கடல்சார் சட்டங்களை மீறுதல் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தென் கொரியாவின் யான்ஹேப் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

விபத்திற்கு முன்
கப்பல் விபத்திற்குள்ளானதற்கு முன்பாகவே கேப்டன் லீ தனது பொறுப்பை மூன்றாவது உயர் அதிகாரியின் கையில் ஒப்படைத்து விட்டதாக அவரது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications