'உங்களுக்கு வைரசை பரப்பு போகிறேன்'.. 3 குழந்தை உட்பட 22 பேருக்கு கொரோனாவை பரப்பிய கொடூரன் கைது
மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 22 பேருக்கு கொரோனா வைரஸை பரப்பிய 40 வயது நபரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
உலகம் இன்னும் கொரோனாவின் கோரப் பிடியில் இருந்து மீளவில்லை. இந்தியாவில் தற்போது கொரோனாவில் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. அதேபோல உலகின் பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் உலகளவில் கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் உள்ளது. தற்போதும்கூட அங்குச் சராசரியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது.

கொரோனா அறிகுறி
இந்நிலையில், 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சுமார் 22 பேருக்கு வேண்டுமென்றே கொரோனாவை பரப்பிய அதிர்ச்சி சம்பவம் ஸ்பெயினில் அரங்கேறியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் மனாக்கோர் நகரைச் சேர்ந்த அந்த நபருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளது. அவரது உடல் வெப்பமும் 40 டிகிரி செல்சிஸாக இருந்துள்ளது. இப்படி கொரோனா அறிகுறிகள் இருந்தும் அவர், வீட்டின் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் பணிக்குச் சென்றுள்ளார்.

வீட்டுக்குச் செல்ல மாட்டேன்
அவரால் மற்றவர்களுக்கும் கொரோனா பரவலாம் என்பதால் அவருடன் பணிபுரிபவர்களை அந்த நபரை வீட்டுக்குச் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், அவர் வீட்டுக்குச் செல்லாமல் தொடர்ந்து அலுவலகத்திலேயே இருந்துள்ளார். அன்று மாலை, அவர் கொரோனா பரிசோனை எடுத்துக் கொண்டுள்ளார். அதன் பின்னரும் அந்த நபர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை.

உங்களுக்கு கொரோனாவை பரப்பு போகிறேன்
மறுநாளும் அவர் வேலைக்குச் சென்றுள்ளார். இத்துடன் நிற்காமல் அங்கு இருந்து ஜிம்மிற்கு வேறு அவர் சென்றுள்ளார். ஜிம்மிலும் அவரது உடல் வெப்பம் அதிகமாக இருந்ததால், அவரை வீட்டுக்குச் செல்லுமாறு ஜிம் உரிமையாளர் கேட்டுக் கொண்டுள்ளார். இதையெல்லாம் அவர் சுத்தமாக மதிக்கவில்லை. மாறாக, 'உங்களுக்கு எல்லாம் கொரோனாவை பரப்பு போகிறேன்' என்று கூறியவாறே மாஸ்க்கை கழற்றிவிட்டுத் தும்மியதாக கூறப்படுகிறது

மூன்று குழந்தைகள் உட்பட 22 பேர்
மறுநாள் அவருக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருடன் பணிபுரியும் மூன்று பேர், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா பரவியது உறுதியானது. அதேபோல ஜிம்மிலும் சிலருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. மொத்தம் மூன்று குழந்தைகள் உட்பட 22 பேருக்கு அந்த நபரின் அலட்சியத்தால் கொரோனா பரவியுள்ளது. இதையடுத்து ஸ்பெயின் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications