பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் இன்று இந்தியா வருகிறார் சோட்டா ராஜன்!
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் கைதான சோட்டா ராஜன் இன்று இரவு இந்தியா அழைத்துவரப்படுகிறார். பாதுகாப்பு காரணங்களால் சோட்டா ராஜனை அழைத்துவர குண்டு துளைக்காத கார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொலை, மிரட்டல், போதை மருந்து கடத்தல் என 70க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடர்பாக, இந்தியாவால் தேடப்பட்டுவரும் நிழலுலக தாதா சோட்டா ராஜன், ஒரு வாரம் முன்பு, இந்தோனேஷியாவிலுள்ள பாலி தீவில் இன்டர்போல் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அது முதல் அங்குள்ள கைதிகள் கூடத்தில் சோட்டா ராஜன் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

இவரை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க இந்தோனேஷியா சம்மதித்தது. இதையடுத்து பாலி தீவில் இருந்து இன்று மும்பைக்கு விமானத்தில் ராஜன் அனுப்பி வைக்கப்படுகிறார். இன்று இரவு மும்பை வந்து சேருகிறார் ராஜன். இதற்காக சிறப்பு விமானத்தை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
பாலி விமான நிலையத்திற்கு ராஜன், குண்டு துளைக்காத காரில் அனுப்பி வைக்கப்பட்டார். அவரது காரை சுற்றிலும் அதிரடிப்படை வாகனங்கள் அணிவகுத்து சென்றதை பார்க்க முடிந்தது. தாவூத் கோஷ்டியால் ராஜனுக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மும்பையிலும், ராஜனுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications