"ஏய் ராஜா உன்னைதான் தேடிட்டு இருந்தேன்"! ஏழை பால்ய நண்பரிடம் நலம் விசாரித்த இலங்கை அதிபர்!
கொழும்பு: இலங்கைக்கே அதிபராக இருந்தாலும் தனது பால்ய நண்பனை பார்த்ததும் காரை நிறுத்தி அனுரா குமார திசநாயக்க அவரிடம் நலம் விசாரித்த வீடியோ வைரலாகி வருகிறது.
இலங்கையின் அனுராதபுரத்திற்கு அந்நாட்டு அதிபர் அனுரா குமார திசநாயக்க சென்றார். அவரை பார்க்க ஏராளமான பொதுமக்கள் அங்கு காத்திருந்தனர்.

அப்போது அவர்களை பார்த்து வணக்கம் சொல்லிக் கொண்டிருந்தார் அதிபர். அந்த நேரம் அக்கூட்டத்தில் ஒருவரை பார்த்தார். அவர் யார் என சில நொடிகளே யோசித்த அதிபர், உடனே அவர் தனது பால்ய நண்பர் என்பதை நினைவுகூர்ந்தார்.
உடனே காரை நிறுத்தச் சொன்னார். அந்த நபரை பார்த்து அருகே வரச் சொன்னார். அப்போது அதிபர், "ஏய் ராஜா உன்னைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். நல்லா இருக்கியா" என நலம் விசாரித்தார்.
அந்த நண்பரும் சிங்கள மொழியில் பதிலளித்துக் கொண்டிருந்தார். இலங்கை அதிபரின் இந்த எளிமை, அங்கிருந்த மக்களை மட்டுமல்லாமல் அவரது நண்பரையே திக்குமுக்காடச் செய்தது.
சிலர் எத்தனை உயரத்திற்கு போனாலும் அன்பு மாறாமல், ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் பழகுவார்கள். ஆனால் சிலர் இந்த ஏற்றத் தாழ்வுகளை பார்ப்பர்.
நேருக்கு நேர் பார்த்தாலும் மறந்துவிட்டது போல் நடிப்பார்கள். இப்படிப்பட்ட சூழலில் இலங்கைக்கே அதிபராக இருந்தாலும் பொதுமக்களோடு மக்களாக நின்றுக் கொண்டிருந்த பாமரரான நண்பரை பார்த்து அனுரா பேசியது வைரலாகி வருகிறது. அவரை எல்லோரும் பாராட்டி வருகிறார்கள்.
இலங்கை அதிபரை போல் இந்தியா முழுவதும் அரசியல்வாதிகளில் சிலர் பழசை மறக்காமல் நண்பர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
யார் இந்த அனுரா?
அனுரா கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். "ஏகேடி" என அறியப்படும் அனுரா குமார திசநாயக்க, மாணவராய் இடதுசாரி அரசியலில் இணைந்தபோது, அதிபராகும் எண்ணம் இருக்கவில்லை. அரசு மற்றும் ஆளும் வர்க்கத்தின் மீதான அவரது எதிர்ப்பே, மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனாவின் (JVP) மாணவர் பிரிவில் அவரைச் சேர்த்தது. அவர் அரசியல் ஈடுபாடற்ற ஒரு சிறிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.
அவரது தந்தை அரசு நில அளவைத் துறையில் அலுவலக உதவியாளர்; தாய், ஒரு இல்லத்தரசி. தனது தமையனாகக் கருதிய உறவினர் ஒருவர் ஏற்கனவே கட்சியில் இருந்தார். 1988இல் ஜே.வி.பி-யின் இரண்டாவது கிளர்ச்சியை ரணசிங்க பிரேமதாச அரசு அடக்கியபோது, அந்த உறவினர் கொல்லப்பட்டார். அப்போது திஸாநாயக்கவுக்கு 20 வயது.
அடுத்த ஆண்டு, அநுராதபுரத்தில் இருந்த அவரது பெற்றோரின் வீடு கட்சியுடன் இருந்த தொடர்பால் தீக்கிரையாக்கப்பட்டது. ஜே.வி.பி-யின் இக்கிளர்ச்சி பலரின் கொடூரமான கொலைகளுக்கு வழிவகுத்தாலும், அரசின் பதில் பலமடங்கு வன்மையாக இருந்தது. "அரச பயங்கரவாதத்தின்" இந்த நேரடி அனுபவமே திஸாநாயக்கவை ஜே.வி.பி-யில் நிலைத்திருக்கச் செய்தது.
1980களின் பிற்பகுதியிலிருந்து ஜே.வி.பி-இன் அரசியல் நிலைப்பாடு கணிசமாக மாறியது. 1971ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியில், கட்சி ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோசலிச இலக்குகளுடன் முதலாளித்துவத்தை அகற்றி சமூக மாற்றத்தை நோக்கம் கொண்டது.
ஆனால், 1980களில், ஜே.வி.பி உறுதியான சிங்கள தேசியவாதப் போக்கினை எடுத்தது. 1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிரான கலவரத்தைத் தொடர்ந்து இன மோதல்கள் வெடித்தபோது, தமிழ் அரசியல் சுய-ஆட்சி கோரிக்கைகளையும், இந்தியாவின் மத்தியஸ்தத்தையும் கடுமையாக எதிர்த்தது.
இக்கலவரத்தில், ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் (அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் மாமா) ஐ.தே.க அரசால் ஜே.வி.பி தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு, சில ஆண்டுகள் தடை செய்யப்பட்டது. கிளர்ச்சி அடங்கியதும், கட்சி சட்டபூர்வமாக்கப்பட்டு, 1994இல் நாடாளுமன்றம் நுழைந்து தன் பாதையை மாற்றியமைத்துக் கொண்டது.
திசநாயக்க 2000ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராகி, 2004-2005இல் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசில் விவசாய அமைச்சராகப் பணியாற்றினார். 2014இல் சோமவன்சா அமரசிங்கவுக்குப் பிறகு, அவர் ஜே.வி.பி-யின் தலைவரானார்.
திசநாயக்கவின் தலைமைப் பாணி குறித்து சக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், "எங்கள் கட்சி கலந்துரையாடல் அணுகுமுறையைப் பின்பற்றுகிறது, இது தலைவரை மையப்படுத்தியதல்ல. ஏகேடி ஒரு தெளிவான முடிவெடுப்பவர். பல பார்வைகளையும் உள்வாங்கி, சிறந்த முடிவுகளை விரைவாக எடுப்பதில் அவர் மிகச் சிறந்தவர்" என்றார்.
நீண்டகால சகாக்களான ஹேரத் மற்றும் திஸாநாயக்க ஒரே ஆண்டில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தனர். களனி பொதுப் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்த இவர்கள், திஸாநாயக்க அங்கு இயற்பியல் அறிவியல் துறையில் பட்டம் பெற்றார்.
"ஏகேடி" ஒரு ஈர்க்கக்கூடிய, தகவலறிந்த பேச்சாளராக மதிக்கப்படுகிறார். நாடாளுமன்றத்தில் அவரது தெளிவான சிங்கள உரை, புள்ளிவிவரங்கள் நிறைந்ததாக, கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications