அமெரிக்காவின் 2வது உயரிய கோர்ட்டில் நீதிபதியாக பொறுப்பேற்றார் இந்தியர் சீனிவாசன்
வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீதிபதி சீனிவாசன், அமெரிக்காவின் 2வது உயரிய நீதிமன்றமான கொலம்பியா சர்க்யூட் அப்பீல் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.
இந்திய அமெரிக்கர் ஒருவர், அதிலும் தெற்காசிய அமெரிக்கர் ஒருவர் இந்தப் பதவிக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்கு அடுத்து 2வது உயரிய நீதிமன்றம் கொலம்பியா சர்க்யூட் அப்பீல் நீதிமன்றம் என்பதால் சீனிவாசன் இந்தப் பதவிக்கு வந்திருப்பது இந்தியர்களைப் பெருமைப்படுத்துவதாக அமைந்துள்ளது.
சண்டிகரில் பிறந்தவர் சீனிவாசன். 46 வயதாகும் இவரது பெற்றோர் 70களில் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தனர்.
சீனீவாசனுக்கு நீதிபதி சான்ட்ரா டே ஓ கானர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவரிடம் முன்பு கிளர்க் ஆக பணிபுரிந்தவர் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனிவாசன் பதவியேற்பில் பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி குர் சரண் கெளரும் கலந்து கொண்டார்.
கடந்த மே மாதம்தான் சீனிவாசன் நியமனத்தை அமெரிக்க செனட் சபை 97-0 என்ற அபரிமிதமான ஆதரவுடன் அங்கீகரித்தது என்பது நினைவிருக்கலாம்.
முன்னதாக கடந்த 2012ம் ஆண்டு ஜூன் 11ம் தேதியே சீனிவாசனை இப்பதவிக்கு அதிபர் ஒபாமா நியமித்தார். ஆனால் கடந்த ஜனவரி 2ம் தேதி அமெரிக்க செனட் சபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதால் நியமனம் குறித்த வரைவு அதிபருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
இதையடுத்து ஜனவரி 3ம் தேதி மீண்டும்இந்த வரைவை ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார் ஒபாமா.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications