3 நாள் 3 காரணம்.. திகில் படங்களை மிஞ்சும் திருப்பங்கள்.. ஸ்ரீதேவி மரணத்தில் தொடரும் மர்மம்
Recommended Video

துபாய்: நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்த செய்தி, 3 நாட்களில் 3 கோணங்களில் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு நாளும் ஒரு கோணத்தில் ஸ்ரீதேவியின் மர்ம மரணம் குறித்த தகவல் வெளியாகிக்கொண்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணத்திற்கு பிறகு, தேசிய அளவில் விவாதத்தை கிளப்பியுள்ளது ஸ்ரீதேவி மரணம்.
கடந்த சனிக்கிழமை துபாய் நேரப்படி நள்ளிரவில் ஸ்ரீதேவி இறந்த செய்தி வெளியானது. அது அதிகாலையில் இந்திய ஊடகங்களில் பிரேக்கிங் நியூசாக மாறியது.

நோய் என செய்தி
அன்றைய தினம், அனைத்து செய்திகளுமே, ஸ்ரீதேவி 'கார்டியாக் அரெஸ்ட்' நோய் தாக்கி இறந்துவிட்டார் என்று வெளியாகின. ஸ்ரீதேவி குடும்பத்தார் கூறியதாக அந்த செய்திகள் தெரிவித்தன. நேற்று 2வது நாளாக அதே செய்திகள் மதியம் வரை வெளியாகின. ஆனால் மாலை முதல் நிலைமை மாறிவிட்டது. காரணம், ஸ்ரீதேவி உடற்கூறு ஆய்வு முடிவு குறித்து வெளியான தகவல்தான்.

வேறு கோணம்
ஸ்ரீதேவி குளியல் நீர் தொட்டிக்குள் விழுந்து இறந்ததாக உடல்கூறு தகவல் கூறியது. முக்கியமாக, அவர் கார்டியாக் அரெஸ்ட் நோயால் தாக்கப்பட்டதாக எந்த தகவலும் அதில் குறிப்பிடப்படவில்லை. எனவே வழக்கு முற்றிலும் வேறு கோணத்திற்கு போனது. ஸ்ரீதேவி உடலில் ஆல்கஹால் இருப்பது தெரியவந்ததால் மது போதையில் தொட்டிக்குள் விழுந்து இறந்திருப்பார் என நேற்று செய்தி கோணம் மாறியது.

கொலை
இந்த கோணமும் இன்று மதியம்வரைதான். ஏனெனில் ஸ்ரீதேவி உடலில் காயங்கள் இருப்பதாக இன்று துபாய் ஊடகங்கள் வாயிலாக செய்தி வெளியாகியுள்ளது. பாஜக நிர்வாகி சு.சாமியும், ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார். எனவே இன்று செய்தியின் கோணங்கள் மாறிவிட்டன. ஸ்ரீதேவி கணவர் போனிகபூரிடம் போலீஸ் விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கதை கதை
முதல் நாளில் நோயால் மரணம் என்று ஆரம்பித்த செய்தி, 2வது நாளில் மதுவால் மரணம் என மாறி, 3வது நாள் கொலை என்ற அளவுக்கு சென்று நிற்கிறது. விக்ரம் வேதா திரைப்படத்தை மிஞ்சும் வகையில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படுகின்றன. இனி நாளை என்ன கதையோ அதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications