Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேரிடி! மேலும் ஒரு தமிழக மீனவருக்கு சிறை தண்டனை விதித்த இலங்கை கோர்ட்- கொந்தளிக்கும் ராமேஸ்வரம்!

Subscribe to Oneindia Tamil

யாழ்ப்பாணம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மேலும் ஒரு தமிழ்நாட்டு மீனவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்திருப்பது ராமேஸ்வரம், புதுக்கோட்டையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியான கச்சத்தீவு அருகே மீன்பிடிப்பது வழக்கம். ஆனால் இலங்கை கடற்படையோ அத்துமீறி உள்ளே நுழைந்து, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களைத் தாக்குவது, கைது செய்வது, சுட்டுக் கொல்வதை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இலங்கை கடற்படையால் இதுவரை 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆனாலும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் தடுத்து நிறுத்தப்படவில்லை.

Srilanka court imprisons one more Tamil Nadu Fisherman

இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 3 பேருக்கு அண்மையில் இலங்கையின் ஊர்க்காவற்றுறை நீதிமன்றம் 3 மாதம் சிறை தண்டனை விதித்தது. தற்போது இந்த 3 மீனவர்களும் சிங்களர் அதிகமாக இருக்கும் வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது ராமேஸ்வரம், புதுக்கோட்டையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தை ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராமநாதபுரம் ஆட்சியை சந்திக்க நடைபயண போராட்டத்தையும் நடத்தி இருந்தனர். மேலும் இம்மாத இறுதியில் நடைபெறும் கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழாவை புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

தற்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட படகு ஓட்டுநர் ஜான்சன் என்பவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது இலங்கை ஊர்க்காவற்றுறை நீதிமன்றம் (ஊர்க்காவல்துறை). அதேநேரத்தில் 18 மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டு மீனவர்களுக்கு அடுத்தடுத்து இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து வருவது போராட்டம் நடத்தி வரும் ராமேஸ்வரம், புதுக்கோட்டையில் கொந்தளிப்பை அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய மத்திய பாஜக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டு தலைவர்களின் தொடர் அழுத்தமும் குரலுமாகும். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு எழுதிய கடிதத்தில், இலங்கை கடற்படையினர் கடந்த 2023-ல் 243 தமிழக மீனவர்களை கைது செய்து, 37 படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 28 நாட்களில் மட்டும் 88 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 12 மீன்பிடி படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கை வசம் உள்ள 77 மீனவர்கள் மற்றும் அவர்களது 151 படகுகளை உடனடியாக விடுவிக்க தேவையான அனைத்து தூதரக முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+