இலங்கையின் போர்க்குற்றம் குறித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய அறிக்கை... ஜெனீவா மாநாட்டில் இன்று தாக்கல்
ஜெனீவா : இலங்கையின் போர்க்குற்றம் குறித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை இன்று ஜெனிவா மாநாட்டில் தாக்கல் செய்யப்படும் என அதன் தலைவர் ஜெய்ட் ராட் அல் ஹுசேன் அறிவித்துள்ளார்.
ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டதை தொடங்கி வைத்துப் பேசும்போது அவர் இதனை தெரிவித்தார். மேலும், அந்த அறிக்கையின் தகவல்கள் தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும் அல் ஹுசேன் குறிப்பிட்டார்.

இலங்கையில் 6 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது மனித உரிமை மீறல்கள் மற்றும் அப்பாவி மக்களின் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன என்று குறிப்பிட்ட அவர், அந்நாட்டில் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய ஆட்சி நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை அறிக்கை தமக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் தனது பரிந்துரைகளுடன் விரிவான விசாரணை அறிக்கை இன்று அவையில் தாக்கல் செய்யப்படும் என்றும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர் ஜெய்ட் ராட் அல் ஹுசேன் தனது உரையில் குறிப்பிட்டார்.
மேலும், இலங்கையின் பொறுப்பை எடுத்துரைத்தல், மீள்குடியேற்ற மற்றும் சீரமைப்பு நடவடிக்கைள் மீது தீவிர கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே போர்க் குற்றம் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை அறிக்கை இலங்கைக்கு சாதகமாக இருக்கும் என்று இந்தியா வந்த அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications