இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திசநாயக வெற்றி.. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், கம்யூனிஸ்ட் அனுர குமார திசநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எந்த வேட்பாளருக்கும் 50% வாக்குகள் கிடைக்காத நிலையில் 2வது விருப்ப வாக்கு எண்ணிக்கை நடந்தது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் அனுர குமார திசநாயக்க 42.31% வாக்குகள் பெற்றார். சஜித் பிரேமதாச 32.76% வாக்குகள் பெற்றார். இதையடுத்து, 2வது விருப்ப வாக்கு எண்ணிக்கையின்படி, அநுர குமார திசநாயக வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இலங்கையில் வரலாறு காணாத வகையில் மிக அமைதியாக ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது. மொத்தம் 60%-க்கும்ன் வாக்குகள் பதிவாகி இருந்தன. பொதுவாக இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வன்முறைகள் அதிகம் நிகழும். இம்முறை அப்படியான வன்முறை எதுவும் இடம்பெறவில்லை.

முதல் சுற்று எண்ணிக்கை: ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று இரவு 9 மணியளவில் தொடங்கியது. அதிகாலை 12 மணியளவில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகின. தற்போதைய நிலையில் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் அனுர குமார திசநாயக்க முன்னிலை வகிக்கிறார். 2-வது இடத்தில் எதிர்க்கட்சித் சஜித் பிரேமதாச, 3-வது இடத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே பின்னடைவை சந்தித்துள்ளனர்.
தமிழர் பகுதிகளில் சஜித் பிரேமதாசவுக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. ஈழத் தமிழர் பகுதிகளில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேந்திரனுக்கு 4-வது இடம்தான் கிடைத்தது. தமிழர் பகுதிகளில் மகிந்த ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சேவுக்கு சொற்பமான வாக்குகளே கிடைத்தன.
50% வாக்குகள் கிடைக்கவில்லை: இலங்கை அதிபர் தேர்தலில் 50%-க்கும் அதிகமான வாக்குகளை பெறுபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். முதல் சுற்று முடிவில் யாருக்கும் 50 சதவீத ஓட்டுகள் கிடைக்கவில்லை. அனுர குமார திசநாயக்க மொத்தம் 56 லட்சத்து 34 ஆயிரத்து 915 வாக்குகள் பெற்று 42.31 சதவீத ஓட்டுகளுடன் முன்னிலை வகித்தார். சஜித் பிரேமதாச 43 லட்சத்து 63 ஆயிரத்து 35 ஓட்டுகள் பெற்று 32.76% வாக்குகளுடன் 2ம் இடம் பிடித்தார். தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே 17 சதவீத ஓட்டுகள் அதாவது 22 லட்சத்து 99 ஆயிரத்து 767 ஓட்டுகளுடன் 3ம் இடம் பிடித்தார்.
2வது விருப்ப தேர்வு வாக்குகள்: இதனால் 2வது விருப்பத் தேர்வு ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் முதலிடத்தில் உள்ள அனுர குமார திசநாயக்க, 2வது இடம் பிடித்த சஜித் பிரதாச இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், 2வது விருப்ப வாக்கு எண்ணிக்கையின்படி, அநுர குமார திசநாயக வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 9வது அதிபராகிறார் அநுர குமார திசநாயக.
யார் இந்த அனுர குமார திசநாயக்க: தற்போதைய நிலையில் முன்னிலை வகிக்கும் அனுர குமார திசநாயக்க, ஜேவிபி எனும் சிங்களப் பேரினவாத கட்சியின் தலைவர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலையை நிகழ்த்தியதில் ஜேவிபிக்கு மிக முக்கிய பங்கு உண்டு. அதேநேரத்தில் தங்களை இடதுசாரிகளாக வெளிப்படுத்திக் கொள்கிற கட்சி ஜேவிபி. இலங்கையில் ஈழத் தமிழர்கள் ஆயுதப்போராட்டம் நடத்திய அதே கால கட்டத்தில் ஜேவிபியும் இலங்கையில் ஆயுதமேந்தி அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியது. பின்னர் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயகப் பாதைக்கு திரும்பியது. அந்த ஜேவிபியின் அனுர குமார திசநாயக்கதான் தற்போது இலங்கை ஜனாதிபதி தேர்தலில் முன்னிலை வகிக்கிறார். இலங்கையில் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த போது அவரது அமைச்சரவையில் இடம்பெற்றவர் அனுர குமார திசநாயக்க.
இலங்கையின் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியும் அதன் பிந்தைய தாக்கமும் புதிய தலைமைத்துவத்தை தேட வைத்திருக்கிறது என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னரே அனுர குமார திசநாயக்க டெல்லிக்கு வரவழைக்கப்பட்டார். இதனால் இந்தியா அவரையே தேர்தலில் ஆதரிப்பதாகவும் கூறப்பட்டது. அதே நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் நேரத்தில் அனுர குமார திசநாயக்க, வெற்றி பெறும் நிலையில் சீனா சார்பு நிலையை எடுக்கக் கூடும் என்கிற தகவல்களும் வெளியாகின. இதனையடுத்து இந்திய தரப்பு சஜித் பிரேமதாசவை ஆதரித்ததாகவும் இலங்கை ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. அனுர குமார திசநாயக்க, ஜனாதிபதி தேர்தலில் வென்றால் இந்தியாவுக்கு நெருக்கடியைத் தருவாரோ? என்கிற சந்தேகமும் அவரது சீனா ஆதரவு போக்கினால் இயல்பாகவே எழுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சஜித் கட்சி குற்றச்சாட்டு: தேர்தல் ஆணைய அதிகாரிகள் அநுரவுக்கு சாதகமாக அவர் பக்கம் சாய்ந்திருப்பதை நாங்கள் பார்க்கிறோம். எங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் இல்லாமலேயே விருப்ப வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி உள்ளது. இது சட்டவிரோதமானது என சஜித் கட்சியைச் சேர்ந்த சுஜீவ சேனசிங்க குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications