2012-லேயே தோன்றிய கொரோனா.. வவ்வால் கழிவுகளால் சுரங்க ஊழியர்கள் 3 பேர் பலி.. மூடி மறைத்த சீனா
பெய்ஜிங்: கொரோனா தொற்று சீனாவில் 8 ஆண்டுகளுக்கு முன்னர் சுரங்கத் துறை தொழிலாளர்களிடம் இருந்து முதல்முறையாக கண்டறியப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தை சீனா மறைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவி உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நோய் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இந்த கொரோனா பரவல் அதிகமாகவே உள்ளது. இதுவரை உலகில் 7.72 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

கொரோனா
இந்த நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் 8 ஆண்டுகளுக்கு முன்பே பரவியிருக்கலாம் என அறிக்கை ஒன்று கூறுகிறது. சீனாவில் ஒரு சுரங்க தொழிலாளர்களிடம் இருந்து முதல்முறையாக கண்டறியப்பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

நிமோனியா
கடந்த 2012-ஆம் ஆண்டு சீனாவின் யுனான் மாகாணத்தில் மோஜியாங் சுரங்கத்தில் வவ்வால்களின் கழிவுகளை அகற்றும் வேலையை 6 ஊழியர்கள் செய்தனர். இதையடுத்து அவர்களுக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டது. அந்த 6 பேரில் 3 பேர் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகளுடன் இறந்துவிட்டனர்.

முதல் சம்பவம்
இதனால் அதுதான் கொரோனா நோய்த் தொற்றின் முதல் சம்பவமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். 2012-ஆம் ஆண்டு நோய் தொற்றால் இறந்த 3 சுரங்கத் தொழிலாளர்களின் சளி மாதிரியை ஆய்வு செய்ததில் கொரோனா போன்ற ஒற்றுமை உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.

சீனா மூடி மறைத்தல்
இந்த சம்பவத்தையும் சீனா மூடி மறைத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீனா கடந்த டிசம்பர் மாதமே தங்கள் நாட்டில் பரவும் கொரோனா குறித்து ஒரு மருத்துவரின் ஆலோசனையை கேட்டறிருந்திருந்தால் இந்த நோய் பரவியே இருக்காது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications