உயர போகுது பெட்ரோல், டீசல் விலை! உலக வர்த்தகத்தின் உயிர்நாடி.. திடீரென மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி!
தெஹ்ரான்: இஸ்ரேல்- அமெரிக்கா இணைந்து நடத்தும் தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே இப்போது ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுவதாகத் தகவல் கிடைத்துள்ளது. உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் உயிர் நாடியாக இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில், இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல்- அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். ஈரானும் அங்குப் பதிலடி தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில், பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்த பதற்றத்திற்கு நடுவே அரபு வளைகுடாவில் உள்ள வர்த்தக கப்பல்களிலிருந்து சில முக்கிய தகவல்கள் பிரிட்டனுக்குப் போய் இருக்கிறது.

ஹார்முஸ் ஜலசந்தி
அதாவது ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதாகப் பிரிட்டன் கடற்படை வர்த்தக அலுவலகத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது. இது அதிகாரப்பூர்வமாகக் கிடைத்த தகவல் இல்லை என்றாலும் கூட இது சர்வதேச வர்த்தகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரான் நகரங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய சில நேரங்களில் இந்த தகவல் வந்துள்ளது. அமெரிக்க இஸ்ரேல் தாக்குதலுக்குப் பதிலடியாக ஐக்கிய அமீரகம், கத்தார், சவுதி அரேபியா மீதும் ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்கியது. இந்தச் சூழலில் தான் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுவதாகத் தகவல் கிடைத்துள்ளது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தது!
ஈரான் எச்சரிக்கை
கடந்த மாதமே ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் எச்சரித்திருந்தது. இதுபோல அவ்வப்போது தடை விதிப்பதாக அச்சுறுத்தினாலும், ஈரான் இதுவரை அதைச் செயல்படுத்தவில்லை. இருப்பினும், சமீபத்தில் போர்ப் பயிற்சியின்போது பாதுகாப்பு காரணங்களுக்காக ஜலசந்தியை சில மணி நேரம் மூடியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது மறு அறிவிப்பு வரும் வரை மூடினால் அது சர்வதேச வர்த்தகத்தைப் பாதிக்கும்!
ஏன் முக்கியம்
இந்த ஜலசந்தி தான், வளைகுடாவை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கிறது. ஈரான் மற்றும் ஓமான் பகுதிக்கு இடையில் அமைந்துள்ள இந்த ஜலசந்தி 50 கி.மீ அகலம் கொண்டது. இது வெறும் 60 மீட்டருக்கும் குறைவான ஆழத்தைக் கொண்டு இருக்கிறது. இதன் காரணமாகவே சர்வதேச வர்த்தகத்திற்கு மட்டுமின்றி, ராணுவ ரீதியாகவும் இது தவிர்க்க முடியாத இடத்தை பெறுகிறது.
ஹார்முஸ், கெஷ்ம், லாரக் போன்ற முக்கிய ஈரான் தீவுகள் இங்கு தான் உள்ளன. அதேபோல ஈரான் ஐக்கிய அமீரகம் என இரண்டு நாடுகளுமே உரிமை கோரும் கிரேட்டர் துன்ப், லெஸ்ஸர் துன்ப், அபு மூசா தீவுகளும் இங்கே உள்ளன. இவை 1971 முதல் வளைகுடா மீது ஈரானுக்குத் தேவையான கண்காணிப்பை வழங்குகிறது.
மிக முக்கிய ரூட்
எண்ணெய் வளம் மிக்க வளைகுடாவை ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற சந்தைகளுடன் ஹார்முஸ் ஜலசந்தி இணைக்கிறது. இதை "உலகின் மிக முக்கியமான எண்ணெய் நெருக்கடிப் பகுதிகளில் ஒன்று" என்று அமெரிக்காவே குறிப்பிடுகிறது.
மேலும், கச்சா எண்ணெய், பெட்ரோலியப் பொருட்களின் தேவையில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் 20 மில்லியன் பீப்பாய்கள் இந்த ஜலசந்தி வழியாகவே செல்கிறது. மேலும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கும் இந்த ஜலசந்தி வழியாகவே செல்கிறது.
சிக்கல் உருவாகும்
சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அமீரக நாடுகளுக்கு ஜலசந்தியைத் தவிர்க்க மாற்று உள்கட்டமைப்பு இருந்தாலும் கூட இந்த ரூட்டை பயன்படுத்தி ஏற்றுமதி செய்யும் அளவுக்கு மாற்று வழிகளில் ஏற்றுமதி செய்ய முடியாது. அதாவது இந்த ரூட்டில் 20 மில்லியன் பீப்பாய்களை எடுத்துச் செல்ல முடியும் நிலையில், மாற்று வழிகளில் சுமார் 2.6 மில்லியன் பீப்பாய்கள் மட்டுமே கொண்டு செல்ல முடியும். இந்த வழியாக செல்லும் கச்சா எண்ணெய்-எரிவாயுவில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை ஆசிய மார்கெட்டிற்கே செல்கிறது..
ஈரான் ராணுவத்தின் புரட்சிகரப் படை தான் ஹார்முஸ் ஜலசந்தியில் கடற்படை நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துகிறது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ஐந்தாம் கடற்படை, கத்தாரில் உள்ள மிக பெரிய அமெரிக்க மத்திய கிழக்கு தளம் போன்ற வெளிநாட்டுச் சக்திகள் இங்குத் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துவதாக ஈரான் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
உயரும் பெட்ரோல்- டீசல்?
இப்போது இந்த ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில், இதனால் சப்ளை குறையும் ஆபத்து உருவாகியுள்ளது. சர்வதேச சந்தையில் சப்ளை குறைந்தால் கச்சா எண்ணெய் விலை உயரும். இதனால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
இந்தியாவில் இன்னும் 1 மாதத்திற்கான எல்பிஜிதான் இருக்கு.. அப்போ 1 மாசத்திற்கு பின்? என்ன நடக்கும்? -
ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்! -
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம் -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications