ஜப்பானில் ஒரே நாளில் 155 நிலநடுக்கங்கள்.. கடுமையான பாதிப்பு.. பலி 30 ஆக உயர்வு.. தற்போதைய நிலை என்ன?
டோக்கியோ: ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், பிறகு சுனாமி என அடுத்தடுத்த இயற்கை சீற்றங்களால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இந்த நிலையில், இன்று சுனாமி எச்சரிக்கைகளை ஜப்பான் திரும்ப பெற்றுள்ளது. ஜப்பானில் 155 முறை ஏற்பட்ட நிலநடுக்கங்களால், இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு ஜப்பான். அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களால் ஜப்பான் பாதிக்கப்பட்டு வருகிறது. ஜப்பானில் நேற்று அந்நாட்டு நேரப்படி மாலை சுமார் 4.10 மணியளவில் இஷிகாவா மற்றும் நிகாட்டா மாகாணங்களை மையமாக கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் ஜப்பான் மக்கள் பீதியில் உறைந்தனர்.

அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகள் வரை நிலநடுக்கம் பதிவாகியது. இந்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் குலுங்கின. விரிசல்களும் ஏற்பட்டது. சாலைகளில் பெரிய அளவில் விரிசல் காணப்பட்டது. இஷிகாவா மாகாணத்தில் உள்ள வஜிமா நகரில் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டிருந்த கேஸ் குழாய்கள் உடைந்தது. இதனால் கேஸ் வெளியேறியதால் தீப்பிடித்தது.
சுனாமி எச்சரிக்கை: மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின. தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. 5 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனால் கரையோர மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
30 பேர் பலி: இதைத்தொடர்ந்து கொக்கைடோ தீவு முதல் கியுசு தீவு வரை கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று பிரதமர் புமியோ கிஷிடா உத்தரவிட்டார். எச்சரிக்கை விடுத்த சில நிமிடங்களில் ஜப்பானின் மேற்கு கடற்பகுதிகளை 1.2 மீட்டர் உயரத்தில் சுனாமி அலைகள் தாக்கின. பல இடங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.இதனால் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குறிப்பாக நேற்று ஜப்பானில் 155 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இதேபோல் தொடர் நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதனால், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது: மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றதாகவும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க துரிதமாக செயல்பட்டு வருவதாகவும் ஜப்பான் பிரதமர் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களை மீட்க நேரத்துடன் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுவதாகவும் கூறியுள்ளார். தற்போது ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனால், மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications