இந்த திருமணம் புரூனேவில் நடந்ததா இல்லை தங்க சுரங்கத்தில் நடந்ததா?
பன்டார் செரி பெகவான்: உலகின் பணக்கார மனிதர்களில் ஒருவரான புரூனே சுல்தானின் இளைய மகனின் திருமணத்தை பார்த்தவர்களால் கண்ணை மூட முடியவே இல்லை, அத்தனை பிரமாண்டம்.
உலகின் பணக்கார மனிதர்களில் ஒருவரான புருனே சுல்தானின் இளைய மகன் இளவரசர் அப்துல் மாலிக்(31). புரூனே தலைநகரான பன்டார் செரி பெகவானில் உள்ள 1,788 அறைகள் கொண்ட அரண்மனையில் மாலிக்கின் திருமணம் பிரமாண்டமாக இல்லை இல்லை மிக மிக மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
இப்படியொருக்கு திருமணத்தை நீங்கள் எங்காவது பார்த்து உண்டா?

திருமணம்
இளவரசர் மாலிக் தயாங்கு ராபியத்துல் அதாவிய்யா பென்கிரண் ஹாஜி போல்கியா(22) என்ற பெண்ணை தனது ஆடம்பர மாளிகையில் குடும்பத்தார், நண்பர்கள், ராஜ குடும்பத்தினர், வெளிநாட்டு அதிகாரிகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

உடை
மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் உடை வைரங்கள் பதித்து தங்கத்தினால் செய்யப்பட்டது ஆகும். உடை மட்டும் தான் இப்படியா என்று நினைத்தால் மணமகள் கையில் வைத்திருந்தது பூங்கொத்து அல்ல விலை உயர்ந்த கற்களால் ஆன கல்கொத்து.

நெக்லஸ்
மணமகள் ராபியா அணிந்திருந்த காலணிகள் பிரபல பிரான்சை சேர்ந்த டிசைனர் கிறிஸ்டியன் லோபோட்டின் வடிமைத்தது. ராபியா அணிந்திருந்த வைர நெக்லஸின் டாலர் 3 திராட்சைகளை சேர்த்தால் வரும் அளவுக்கு பெரிய மரகதம் ஆகும்.

ஜொலிக்குதே
திருமணத்தன்று மணமக்கள் மட்டும் அல்ல அந்த அரங்கில் இருந்த நாற்காலி, மேஜை, திரைச்சீலை உள்பட அனைத்தும் தங்க நிறத்தில் பார்ப்பவர்கள் கண்களை கொள்ளை கொள்ளும் அளவுக்கு ஜொலித்தது.
சுல்தான்
புருனே சுல்தானுக்கு மூன்று மனைவிகள். அவர்கள் மூலமாக அவருக்கு 5 மகன்கள் மற்றும் 7 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாலிக்கின் திருமணத்தை பற்றி தான் தற்போது பலரும் வியந்து பேசி வருகிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications