துபாயில் ஆடல் பாடல் பயிற்சி முகாம்.... உற்சாகத்துடன் பங்கேற்ற குழந்தைகள்
துபாய்: துபாயில் உள்ள ரேகா இசை மற்றும் நடனப் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கான கோடைகால சிறப்புப் பயிற்சி முகாமை நடத்தியது. இதில் ஏராளமான குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்று அசத்தினார்கள்.
துபாயில் ரேணுகா மற்றும் ஹரிதா ஆகிய இரு பெண்கள் ஒன்றாக சேர்ந்து துபாய் ரேகா இசை மற்றும் நடனப் பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகின்றனர். இந்தப் பயிற்சிப் பள்ளியில் மாணவர்களுக்கான கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட சிறுவர் மற்றும் சிறுமியர் ஆடல் பாடலுடன் இசைக்கருவிகளை வாசித்து அரங்கில் இருந்தவர்களை அசத்தியுள்ளனர்.
இந்தப் பள்ளியின் நடன ஆசிரியர்கள் ஹைதர் மற்றும் ரேஷ்மி ஆகியோர் நடனமாடியும், இசை ஆசிரியர்கள் நௌஷத் மற்றும் ரேணுகா ஆகியோர் பாடல்கள் பாடியும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்கள்.

ஆடல் பாடல் நிகழ்வுகளைத் தொடர்ந்து, வீணாகப் போகும் பொருட்களில் இருந்து மாணவர்கள் செய்த கைவினைப் பொருட்களின் கண்காட்சியும் நடைபெற்றது.

இந்த விழாவில் புதிய தமிழ் இசைக்குழுவான "அந்தரா" அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதி பாடல்களை அந்தரா குழுவினர் பாடி மக்களை உற்சாகப் படுத்தினர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications