ட்ரம்ப்பின் முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான நடவடிக்கை.. சுந்தர் பிச்சை, மார்க் ஜுக்கர்பெர்க் அதிருப்தி
வாஷிங்டன்: இஸ்லாமிய நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் குடியேற விதிக்கப்பட்டுள்ள தடை கூகுள் நிறுவன ஊழியர்களை கடுமையாக பாதித்துள்ளது என கூகுள் தேடுதல் இணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஈரான், ஈராக், சிரியா, சூடான், லிபியா, ஏமன் மற்றும் சோமாலியா ஆகிய ஏழு முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் குடியேற கடுமையான சட்டங்களை கொண்டு வந்துள்ளார் அதிபர் டொனால்டு ட்ரம்ப்.

இந்நிலையில் கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியும், இந்தியருமான சுந்தர் பிச்சை டொனால்ட் ட்ரம்ப்பின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், தடை செய்யப்பட்டுள்ள நாடுகளில் பயணம் மேற்கொண்டு இருக்கும் தனது ஊழியர்களை அமெரிக்கா திரும்புமாறு அவசர அழைப்பு விடுத்துள்ளார். தடை செய்யப்பட்டுள்ள இந்த நாடுகளில் மட்டும் 187 கூகுள் நிறுவன ஊழியர்களின் வேலை பாதிக்கப்படும் என்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து சுந்தர் பிச்சை அளித்துள்ள பேட்டியில், டொனால்டு ட்ரம்ப்பின் இந்த உத்தரவு எங்கள் பணியாளர்களை மிகவும் பாதித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து அறிவுசார் பணியாளர்களை கொண்டு வருவதில் தடைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கும், டிரம்ப்பின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா என்பதே ஒரு குடியேறிகளின் நாடுதான். இதற்காக அமெரிக்கா பெருமைப்பட வேண்டும். குறிப்பிடதக்கது. உங்களை போலவே நானும் இதன் பாதிப்புகள் குறித்து யோசித்து வருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications