ஈரானின் டாப் தலைவர்கள் எல்லாம் காலி.. இஸ்ரேலின் மரணஅடி.. இறந்தது யார் யார் தெரியுமா? முழு லிஸ்ட்
டெஹ்ரான்: ஈரானின் ராணுவ தளம், அணுசக்தி திட்டத்தின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து இன்று அதிகாலையில் இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ஈரான் இப்போது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே தான் இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி காமேனியின் ஆலோசகர், ஈரான் ராணுவ புரட்சிகர படைப்பிரிவின் தலைமை கமாண்டர், ராணுவ ஜெனரல் உள்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலால் யார் யார் கொல்லப்பட்டனர்? அவர்களை இழந்த ஈரான் சந்திக்கும் பிரச்சனை பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் இன்று உச்சத்துக்கு சென்றுள்ளது. இன்று ஈரான் மீது இஸ்ரேல் திடீரென்று ஏவுகணைகளை கொண்டு தாக்கியது. ஈரானில் உள்ள ராணுவதளங்கள், அணுஆயுதம் தயாரிக்க பயன்படும் யுரேனியத்தை செறிவூட்டும் தளம் உள்ளிட்டவற்றை குறிவைத்து இஸ்ரேலின் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலை சற்றும் ஈரான் எதிர்பார்க்கவில்லை. இதனால் இஸ்ரேலின் இந்த தாக்குதலில் ஈரான் படைப்பிரிவில் பணியாற்றும் முக்கிய காமாண்டர்கள் மற்றும் அணு விஞ்ஞானிகள், உயர்மட்ட தலைவர் அயதுல்லா காமேனியின் ஆலோசகர் உள்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:
* ஈரானின் துணை இராணுவப் புரட்சிகரப் படையின் தலைமை கமாண்டராக இருந்த ஜெனரல் ஹொசைன் சலாமி கொல்லப்பட்டுள்ளார். இவர்கடந்த 2019 ம் ஆண்டு முதல் ஈரானின் படைப்பிரிவின் தலைமை கமாண்டராக செயல்பட்ட வந்தார். உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி காமேனியுடன் நெருக்கமானவர். இவர் தான் அந்த பொறுப்பில் ஹொசைன் சலாமியை நியமித்தார். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஐஆர்ஜிசி படைப்பிரிவி்ன தலைமை அலுவலகத்தில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஹொசைன் சலாமி இன்று இறந்தார்.
* ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி காமேனியின் ஆலோசகராக பணியாற்றி வந்த அலி ஷம்கானியும் இறந்துள்ளார். இவர் ஈரான் படைப்பிரிவின் முன்னாள் கமாண்டராக இருந்து அயதுல்லா அலி கமோனியின் ஆலோசகராக செயல்பட்டு வந்தார். மேலும் அயதுல்லா அலி காமேனிக்கு ராணுவ தாக்குதல் தொடர்பான முக்கிய ஆலோசகனைகளை வழங்கி வந்த நிலையில் அவரது இழப்பு ஈரானுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
* அதேபோல் ஈரான் ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பணியாற்றி வந்த முகமது பாகேரி இறந்துள்ளார். இவர் ஈரான் ஆயுதபடைப்பிரிவின் தலைவராக செயல்பட்டு வந்த நிலையில் இஸ்ரேல் கொன்றுள்ளது. ஈரானின் ராணுவ படைப்பிரிவில் அயதுல்லா அலி காமேனிக்கு அடுத்ததாக செல்வாக்கு பெற்ற நபர் திகழ்ந்த நிலையில் அவரது கதையை முடித்துள்ளது இஸ்ரேல்.
* மேலும் ஈரானின் ராணுவத்தில் கதாம் அல் அன்பியா மாகாணத்தின் தலைமையகத்தை வழிநடத்தி வந்த ஜெனரல் கோலம் அலி ரஷித் கொல்லப்பட்டுள்ளார்.
* இவர்கள் தவிர அணுசக்தி தொடர்பான முக்கிய 6 விஞ்ஞானிகள் கொல்லப்பட்டள்ளனர். அப்துல் ஹமித் மினோச்சர், அஹ்மத்ரேஸா சோல்ஃபாகேரி, அமீர்ஹொசைன் ஃபெக்கி, மோட்டலெப்ளிசாதே, முகமது மெஹதி தெஹ்ரான்சி மற்றும் ஃபெரிடவுன் அப்பாசி ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரான் தற்போது அணுஆயுதம் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறது.
இதற்கு தேவையான யுரேனியத்தை செறிவூட்டும் தளம் நடான்ஸ் நகரில் உள்ளது. அதன் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இவர்கள் 6 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். இப்படி இஸ்ரேல் ஒரே நாளில் தாக்குதல் நடத்தி முக்கிய தலைவர்கள், விஞ்ஞானிகளை கொன்றுள்ளதால் ஈரான் அதிர்ச்சியில் உள்ளது. இவர்கள் அனைவரும் ஈரான் பாதுகாப்பு மற்றும் அணுஆயுத தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்த நிலையில் அவர்களின் மறைவு ஈரானுக்கு துயரத்தை கொடுத்துள்ளது.
ஈரான் தற்போது அணுஆயுதம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக யுரேனியம் செறிவூட்டப்பட்டு வருகிறது. ஈரான் அணுஆயுதம் தயாரித்தால் அது இஸ்ரேலுக்கு பிரச்சனையாக மாறும். இதனால் இஸ்ரேல் இன்று திடீரென்று ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான் தற்பாது ட்ரோன்களை அனுப்பி பதிலடி கொடுத்து வருகிறது. இந்த தாக்குதல் தொடர்ந்து நடந்து வருவதால் இஸ்ரேல் - ஈரான் இடையேயான பதற்றம் என்பது அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி இருநாடுகள் இடையே பெரிய போர் ஏற்படும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications