உணவு, தண்ணீர் எல்லாம் கட்! காசா மக்களை பட்டினி போட்டு.. இஸ்ரேல் "கொடூர" திட்டம்! பகீர் தகவல்
தெஹ்ரான்: காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்குச் செல்லும் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் தடுக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அங்கு வசிக்கும் மக்கள் ஒன்று சரணடைய வேண்டும் அல்லது பட்டினியால் உயிரிழக்க வேண்டும் என்ற ஒரு ஆபத்தான சூழலே உருவாகும்.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஓராண்டிற்கு மேல் போர் தொடர்கிறது. அதிலும் சமீப காலங்களில் காசா பகுதியில் இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் பிரதமர்: இதற்கிடையே காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து சில தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதாவது வடக்கு காசாவின் ஜபாலியாவில் தங்கள் ராணுவ நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ராணுவ நடவடிக்கை காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் தெற்கு நோக்கி நகருமாறு இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தியுள்ளது.
அந்த பகுதியை இஸ்ரேல் முழுமையாகச் சுற்றி வளைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. அப்படி முழுமையாகச் சுற்றி வளைத்து உணவு மற்றும் தண்ணீரின்றி அங்குள்ள ஹமாஸ் போராளிகளை முடக்க முடக்கும். அதேநேரம் இப்படி அனைத்து மனிதாபிமான உதவிகளையும் முடக்குவது அங்குள்ள பல நூறு அப்பாவி பாலஸ்தீனியர்களையும் கூட பாதிக்கும் என்பதால் இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பகீர் திட்டம்: இஸ்ரேல் நாட்டின் ஓய்வுபெற்ற ஜெனரல்கள் சிலர் இணைந்து இந்த திட்டத்தை நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளனர். அதன்படி வடக்கு காசா பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் பாதுகாப்பாக வெளியேற ஒரு வாரம் கால அவகாசம் அளிக்கப்படும். அதன் பிறகு அந்த பகுதி மூடப்பட்டு ராணுவ மண்டலமாக அறிவிக்கப்படும்.
ஒரு வாரம் கழித்தும் வெளியேறாதவர்கள் அனைவரும் ஹமாஸ் படைகளாகக் கருதப்படுவார்கள். அவர்களுக்கு , உணவு, தண்ணீர், மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட பொருட்கள் நிறுத்தப்படும். மேலும், ராணுவ விதிமுறைகளுக்கு உட்பட்ட அவர்கள் மீது தாக்குதலையும் இஸ்ரேல் நடத்தும்.
வாழவே முடியாத சூழல்: வடக்கு காசாவில் இருக்கும் ஹமாஸ் படையை முழுமையாக அழிக்கவே இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. 'ஜெனரல்ஸ் திட்டம்' எனப் பெயரிடப்பட்ட இந்த திட்டம் ஹமாஸ் தலைமையை அகற்ற உதவலாம் என்ற போதிலும் அதேநேரம் வடக்கு காசாவில் பொதுமக்கள் வாழவே முடியாத சூழலையும் ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஓராண்டிற்கு மேலாகப் போர் தொடர்ந்து வருகிறது. இதில் இஸ்ரேல் கை ஓங்கி இருக்கிறது என்ற போதிலும் ஹமாஸை முழுமையாக அழிக்க முடியில்லை. எனவே, ஹமாஸை முழுமையாக அழிக்க இதுவே ஒரே வழி என்று இந்தத் திட்டத்தைப் போட்டுத் தந்த இஸ்ரேல் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் தலைவரான ஜியோரா எய்லாண்ட் தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரேல் பணய கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் இதுதான் ஒரே வழி என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒரே வழி: அவர் மேலும் கூறுகையில், "கடந்த 9, 10 மாதங்களாகவே வடக்கு காசாவில் இஸ்ரேல் படைகள் உள்ளன. இப்போது நாம் செய்ய வேண்டியது ஒன்று தான். அங்குள்ள அப்பாவி மக்களை உடனடியாக வெளியேற வேண்டும். இதற்கு ஒரு 10 நாட்கள் டைம் தரலாம். இஸ்ரேல் வழங்கும் பாதுகாப்பான வழித்தடங்கள் அவர்கள் வெளியேறலாம். இவ்வளவு டைம் கொடுத்தும் வெளியேறவில்லை என்றால் அவர்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளாகவே கருதப்படுவார்கள். அவர்களுக்கு 2 ஆப்ஷன் இருக்கிறது. ஒன்று சரணடை வேண்டும்.. இல்லை என்றால் பட்டினி கிடைக்க வேண்டும்" என்றார்.
அதாவது அந்த பகுதிக்குச் செல்லும் அடிப்படை விஷயங்கள் எல்லாமே பிளாக் செய்யப்படும் என்பதால் சரணடை வேண்டும்.. அல்லது பட்டினியால் உயிரிழக்க வேண்டும் என்ற நிலையே இருக்கும். இஸ்ரேல் ராணுவம் இந்தத் திட்டத்தை முன்மொழிந்துள்ளது உறுதி. அதேநேரம் இதை இஸ்ரேல் பாலோ செய்யுமா இல்லையா என்பது குறித்துத் தெளிவாகத் தகவல்கள் இல்லை.
-
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி? -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications