ஷார்ஜாவில் பாதிக்கப்பட்ட தம்பதிக்கு தொடர்ந்து உதவும் தட்ஸ் தமிழ் வாசகர்கள்
ஷார்ஜா: ஷார்ஜாவில் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் சுதீஷின் குடும்பத்தாருக்கு தட்ஸ்தமிழ் வாசகர்கள் தொடர்ந்து உதவி செய்து வருகின்றனர்.
ஷார்ஜாவில் வேன் டிரைவராக உள்ள தஞ்சையைச் சேர்ந்த சுதீஷ் கைது செய்யப்பட்டார். இது குறித்த செய்தி தட்ஸ்தமிழில் வெளியிடப்பட்டது. இதை பார்த்த வாசகர்கள் சுதீஷுக்கு உதவி செய்தனர். இதனால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து சுதீஷ் அமீரகத்தில் தொடர்ந்து தனது பணியின் மூலம் சட்ட ரீதியான மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளில் இருந்து விடுபட அமீரகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தொடர்ந்து உதவிய வண்ணம் உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக உலக நகைச்சுவையாளர் மன்றத்தின் துபாய் கிளை நிர்வாகிகள் அதன் தலைவர் 'ரவணை' முகைதீன் பிச்சை தலைமையில் கமலக் கண்ணன், இத்ரீஸ், கொடிக்கால்பாளையம் அன்சாரி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி சுதீஷ் குடும்பத்தினருக்கு உதவிட தீர்மானித்தனர்.
13.09.2013 வெள்ளிக்கிழமை மாலை சுதீஷ் இல்லத்திற்கு சென்று உதவியினை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் முதுவை ஹிதாயத், பாலா, முதுவை அஹமது இம்தாதுல்லா, மதுரை ரிஸ்வான் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தங்கள் குடும்பத்திற்கு உதவிய உலக நகைச்சுவையாளர் சங்கத்தின் துபாய் கிளை நிர்வாகிகளுக்கும், இதற்கு காரணமாக இருந்த நல்ல உள்ளங்களுக்கும், தட்ஸ் தமிழுக்கும் சுதீஷ் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
சிறைச்சாலையில் இருந்த போது மூன்று மாதத்திற்கும் மேல் எவ்வித கட்டணமும் இன்றி உணவளித்த பெங்களூர் ரெஸ்டாரன்ட் நிர்வாகத்தினருக்கும் சுதீஷ் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications