ஈரான், இஸ்ரேலை விடுங்க.. சீனா-தைவானுக்கு இடையே வெடிக்கப்போகும் போர்! வேடிக்கை பார்க்கும் அமெரிக்கா
பெய்ஜிங்: தைவான் தற்போது ராணுவ பயிற்சியை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. திடீரென சீனா தாக்குதல் நடத்தியால் எப்படி சமாளிப்பது என்பதற்கான பயிற்சி ஆண்டு தோறும் 'ஹான் குவாங்' என்கிற பெயரில் நடக்கும். அது இந்த ஆண்டு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் கிழக்காசியாவில் பதற்றம் அதிகரித்திருக்கிறது.
இந்த பயிற்சியில், தகவல் தொடர்பு சாதனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து போர் பயிற்சி ஒத்திகை நடைபெற்றிருக்கிறது. பெரிய போர் சூழ்நிலைகளையும் கவனத்தில் கொண்டு இந்த பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இன்று துப்பாக்கிசூடு பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

"தைவானை சீனாவுடன் இணைப்பதை தவிர்க்க முடியாது" என்று சீன தேசிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருந்தது. இந்நிலையில் தைவான் இன்று தனது பயிற்சியை தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்த பயிற்சி குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சீன ராணுவ செய்தி தொடர்பாளர் கர்னல் ஜியாங் பிங், "ஹான் குவாங் பயிற்சி தைவான் மக்களை ஏமாற்றும் முயற்சி. இதனால் ஒரு தரப்பினருக்கு மட்டுமே நன்மை ஏற்படும்" என்று விமர்சித்திருக்கிறார்.
இந்த ஆண்டு பயிற்சியில், லாக்ஹீட் மார்ட்டின் தயாரித்த HIMARS ஏவுகணை மற்றும் தைவானின் சொந்த தயாரிப்பான ஸ்கை ஸ்வாட் ஏவுகணை முதல்முறையாக பயன்படுத்தப்பட்டன. மேலும், டாங்கிகள் முதல் நீர்மூழ்கி கப்பல்கள் வரை புதிய ராணுவ உபகரணங்களையும் தைவான் வாங்கியுள்ளது. இது பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
சமீப காலமாக தைவான் கடற்படை கப்பல்களை சீனா தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாகவும், இந்த சூழலை சமாளிக்க இந்த பயிற்சி உதவுகிறது என்றும் தைவான் கூறியிருக்கிறது. அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், "சீனாவின் சிறிய தாக்குதல்களையும் முழுமையான போரையும் எதிர்கொள்வதற்காக ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஒருங்கிணைந்து பயிற்சி மேற்கொள்கின்றனர்" என்று தெரிவித்துள்ளது. பயிற்சியில் 22,000 ரிசர்வ் வீரர்கள் பங்கேற்கின்றனர்.
உக்ரைன் போரில் இருந்து பல பாடங்களை தைவான் கற்றுக்கொண்டுள்ளது என்றும் தைவானில் போர் ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பதை தீவிரமாக யோசிக்கிறோம் எனவும் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சீனா தாக்கினால் முதலில் தகவல் தொடர்பு சாதனங்கள் மீது தாக்குதல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை சமாளிக்க ராணுவ கட்டளைகளை மாற்றி அமைக்கும் பயிற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இது தகவல் தொடர்பு முடக்கத்தை எதிர்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தைவானை சீனா தனது பகுதியாகக் கருதுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தைவானை சுற்றி, சீனா தனது ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. ஆனால் தைவான் அரசாங்கம் சீனாவின் உரிமையை ஏற்க மறுக்கிறது. தைவானின் எதிர்காலத்தை அங்கு வாழும் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவிக்கிறது. இதுதான் தற்போது பிரச்சனைக்கு காரணம்.
இந்த பிரச்சனையில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது. ஒரு வகையில் பிரச்சனைக்கு காரணமே அமெரிக்காதான் என்று கூட சொல்லலாம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications