தீவிரவாதிகள் சீனாவைத் தாக்கலாம்... மலேசிய விமானம் மாயமாவதற்கு முன் எச்சரித்த தைவான்
தைபேய்: 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானம் விபத்தில் சிக்கியதா அல்லது சதிகாரர்களால் கடத்தப்பட்டதா என்ற குழப்பம் தொடர்ந்து வரும் நிலையில், விமானம் மாயமாவதற்கு சில தினங்களுக்கு முன்னர் சீன விமான நிலையத்தை தீவிரவாதிகள் தாக்கலாம் என தைவான் எச்சரித்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி 239 பயணிகளுடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த அந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது.

முதலில் விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் எனச் சொல்லப்பட்டது. ஆனால், மாயமான விமானத்தில் இரண்டு பயணிகள் திருட்டு பாஸ்போர்ட்டிலும், இருவர் போலி பாஸ்போர்ட்டிலும் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மாயமான விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்காத நிலையில், இவ்வாறு போலி மற்றும் திருட்டு பாஸ்போர்ட்டில் பயணம் செய்தவர்கள் சதிகாரர்களாக இருக்கலாம், அவர்கள் அவ்விமானத்தைக் கடத்தியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மாயமான விமானத்தை பலவிதங்களில் சீனா தேடி வருகிறது. இந்நிலையில் மலேசிய விமானம் மாயம் ஆகுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் சீனாவின் தலைநகர் பிஜீங் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என தைவான் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தைவான் பயணிகள் விமானத்துறை நிர்வாக அதிகாரி ஜீன் ஷென் அதிகாரிகள் கூறுகையில், ‘எது வேண்டும் என்றாலும் நடந்திருக்கலாம். ஆனால் ஒன்றை சொல்ல விரும்புகிறேன் இப்போதைக்கு நாம் எந்த தீர்மானத்திற்கும் வரவேண்டாம். இது தொடர்பான எந்த தகவலையும் கவனிக்க வேண்டும். நாம் விரைவில் ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும். பிஜீங் விமான நிலையம் தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளியாகின. நாம் இதனை தொடர்ந்து ஆராய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications