அடுத்த ஆபத்து.. சோஷியல் மீடியாவை குறிவைத்த தலிபான்கள்.. கலங்கும் ஆக்டிவிஸ்ட்கள்.. நீளும் ஆப்கன் துயர்
ஆண்கள் துணையின்றி பெண்கள் வெளியில் செல்வதை குற்றமாகவும், உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்காவுக்கு செல்வதை கலாச்சார மீறலாகவும் தலிபான்கள் பாவித்தனர்.
காபூல்: ஆப்கனிஸ்தானில் முன்னாள் பாதுகாப்பு படை வீரர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், தற்போது சமூக ஊடகத்தில் தலிபான்களுக்கு எதிராக ஆக்டிவாக இயங்கி வந்த முன்னாள் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு ஆப்கனிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், மீண்டும் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இந்த சம்பவத்திற்கு பிறகு முன்னாள் பாதுகாப்புப்படை வீரர்கள் அனைவரையும் தலிபான்கள் தேடி தேடி கைது செய்து வருகின்றனர். அமெரிக்க கட்டுப்பாட்டில் நாடு இருந்தபோது தலிபான்களை வேட்டையாட உள்ளூர் பாதுகாப்புப்படை வீரர்கள் அமெரிக்க வீரர்களுக்கு பெரிதும் உதவினர்.
இப்படி இருக்கையில், இவர்களை பழிவாங்கும் நடவடிக்கையை தலிபான்கள் தொடங்கியுள்ளனர். இதில் முன்னாள் பாதுகாப்புப்படை வீரர்கள் சிலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆப்கன் மக்கள் வேறு எங்காவது போய் பிழைத்துக்கொள்ளலாம், முதலில் நாட்டை விட்டு வெளியே போனால் போதும் என்று அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடியேறி வருகின்றனர். ஆப்கனிலிருந்து துருக்கிக்கும் பின்னர் அங்கிருந்து பல்கேரியா வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

வதந்தியால் வந்த தலைவலி
இந்நிலையில், ஆப்கானியர்களை துருக்கிக்கு அனுப்ப தலிபான்கள் முன்வந்துள்ளதாக கடந்த 16ம் தேதி நாடு முழுவதும் செய்தி பரவியது. இதனால் மக்கள் மூட்டை முடிச்சுகளோடு தங்களது குழந்தைகளை கையில் பிடித்துக்கொண்டு காபூல் விமான நிலையத்தை அடைந்தனர். இதை தலிபான்கள் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் அவர்கள் மேற்குறிப்பட்ட வகையில் எந்த செய்தியையும் கொடுக்கவில்லை. ஆகவே இது வதந்தி என்பது தெரிய வந்தது. எனவே கூடியிருந்த மக்களிடம் 'இது தவறான செய்தி எல்லோரும் அவரவர் வீடுகளுக்கு செல்லுங்கள்' என்று கூறியுள்ளனர். ஆனால் மக்கள் கலைந்து செல்லாததால் தலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு
ஏற்கெனவே உலக நாடுகள் மத்தியில் தலிபான்கள் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அவர்கள் மீதான விமர்சனத்தை மேலும் கூர்மையாக்கியது. இதனால் கடுப்பான தலிபான்கள் இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என தேடி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர்களை கைது செய்தனர். மட்டுமல்லாது தலிபான்களுக்கு எதிராக எழுதுபவர்களையும் இதுதான் சான்ஸ் என கைது செய்தனர். ஃபேஸ்புக்கில் 23,327 ஃபாலோவர்களை கொண்டிருக்கும் அஹ்மத்ஸாய் எனும் நபர் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். இவர் காபூர் விமான நிலையத்தில் சொந்த நாட்டு மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தலிபான்கள் குறித்து விமர்சித்து பதிவிட்டிருந்தார்.

முன்னாள் பாதுகாப்புப்படை வீரர்கள்
அதேபோல சமூக வலைத்தளத்தில் தலிபான்களுக்கு எதிராக ஆக்டிவாக இயங்கி வந்த முன்னாள் பாதுகாப்புப்படையை சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவரையும் தலிபான்கள் கைது செய்துள்ளனர். தலிபான்கள் முதலில் பெண்களை குறிவைத்தனர். அவர்கள் 5ம் வகுப்பு மேல் படிக்க தடைவிதித்தனர். பின்னர் இந்த தடை உயர்கல்வி வரை நீட்டிக்கப்பட்டது. ஆண்கள் துணையின்றி வெளியில் செல்வதை குற்றமாகவும், உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்காவுக்கு செல்வதை கலாச்சார மீறலாகவும் பாவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களின் வேலைவாய்ப்புகளிலும் கை வைத்தனர்.

மர்மம்
தற்போது இவர்களின் கவனம் முன்னாள் படை வீரர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அரசுக்கு எதிராக இயங்குபவர்கள் மீது திரும்பியுள்ளது. இக்குற்றத்தில் கைது செய்யப்படுபவர்களின் நிலை என்ன என்பது வெளியில் தெரிய வருவதில்லை. இவ்வாறு கைது செய்யப்பட்ட சிலர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications