விரட்டும் தாலிபான்கள்.. ஓடி ஓடி ஒளியும் பெண்கள்.. ஆப்கனில் ரத்தாகும் விவாகரத்து! இது ரொம்ப மோசம்

ஆப்கானிஸ்தானில் பெண்களை குறிவைத்து பல்வேறு கட்டுப்பாடுகளை தாலிபான்கள் அமல்படுத்தி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கானிஸ்தானில் கணவர் துன்புறுத்துவதாக கூறி ஏராளமான பெண்கள் விவாகரத்து பெற்று தனித்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான் விவாகரத்தை ரத்து செய்து அந்த பெண்களை மீண்டும் கணவனோடு சேர்த்து வைக்கும் பணியை தாலிபான்கள் கையில் எடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பெண்கள் ஓடி ஓடி தலைமைறைவு வாழ்க்கை வாழ தொடங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தானை தற்போது தாலிபான்கள் ஆட்சி செய்து வருகின்றனர். உள்நாட்டு போரால் உருக்குலைந்த ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தாலிபான்கள் மீண்டும் அங்கு அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர்.

தாலிபான்கள், மதத்தின் அடிப்படையில் பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகளை விதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் தான் மீண்டும் அங்கு அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

தாலிபான்களின் கட்டுப்பாடுகள்

தாலிபான்களின் கட்டுப்பாடுகள்

இதையடுத்து தாலிபான்கள் துன்புறுத்தல் எதுவும் செய்யமாட்டோம். கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என அறிவித்தனர். இருப்பினும் அடுத்த சில மாதங்களிலேயே இந்த அறிவிப்பை காற்றில் பறக்க விட்டனர். தொடர்ச்சியாக பெண்களை வீட்டிலேயே முடக்கும் வகையிலான கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கினர். பெண்களை மட்டுமே குறிவைத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பொது இடங்களில் ஆண் துணையின்றி நடமாட கூடாது. வெளியே பணி செய்யக்கூடாது. பூங்கா, ஜிம் உள்ளிட்டவற்றுக்கு செல்ல கட்டுப்பாடு, டிரைவிங் லைசென்ஸ் எடுக்கவும், உயர்கல்வி பயிலவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு கருத்தடை மருந்துகளை பெண்கள் பயன்படுத்தவும், விற்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

 புதிய உத்தரவு

புதிய உத்தரவு

தற்போதைய சூழலில் ஏறக்குறைய பெண்களின் முன்னேற்றத்துக்கான அனைத்து வழிகளையும் தாலிபான்கள் அடைத்துள்ளனர். இந்நிலையில் தான் தற்போது தாலிபான்களின் இன்னொரு உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுவும் பெண்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்காத வகையில் தான் உள்ளது. அதாவது கணவர்கள் துன்புறுத்தியதை காரணம்காட்டி விவாகரத்து பெற்று பிரிந்து வாழும் பெண்கள் அனைவரும் மீண்டும் தங்களின் கணவருடன் சேர்ந்து வாழ கட்டாயப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

 ஓடி ஓடி ஒளியும் பெண்கள்

ஓடி ஓடி ஒளியும் பெண்கள்

மேலும் இதுதொடர்பான விவாகரத்தை ரத்து செய்து பிரிந்த கணவன்-மனைவியை ஒன்றிணைக்கும் பணியை தாலிபான்கள் தொடங்கி உள்ளனர். இதனால் பெண்கள் தாங்கள் விரும்பாத முன்னாள் கணவர்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் பல பெண்கள் ஓடி ஓடி ஒளிந்து தலைமைறவு வாழ்க்கை வாழ தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

பற்கள் உடைப்பு

பற்கள் உடைப்பு

இதுபற்றி மர்வா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என பெண் கூறுகையில், ‛‛ என்னை எனது கணவர் துன்புறுத்தினார். அடித்து தாக்கியதில் பற்களை இழந்தேன். இதனால் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ தொடங்கினேன். தற்போது விவாகரத்தை ரத்து செய்து மீண்டும் 8 குழந்தைகளுடன் கணவரோடு சேர்ந்து வாழ வலியுத்துகின்றனர். இதனால் நான் தலைமறைவு வாழ்க்கை வாழ தொடங்கி உள்ளேன். தாலிபான்கள் ஆட்சி பிசாசு போல் உள்ளது. இவர்களின் ஆட்சியில் தினம் தினம் நான் அழுகிறேன்'' என்றார். இதற்கு தற்போது பிற நாடுகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+