For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கம்பீரமாய் நிமிருகிறது தலைமுறை.. தாலிபனின் கட்டுப்பாட்டுக்கு நடுவே.. பிள்ளைகளுக்கு கல்வி தரும் பெண்

ஆப்கன் குழந்தைகளுக்கு இலவச கல்வி கற்பித்து வருகிறார் இளம்பெண் ஒருவர்

Google Oneindia Tamil News

காபூல்: இத்தனை நாளும் ரத்தக்கண்ணீர் வடித்து கொண்டிருந்த ஆப்கன் மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில் ஒரு சம்பவம் ஆப்கானிஸ்தானில் நடந்து கொண்டிருக்கிறது..!

ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே தாலிபான்களை, அந்த நாட்டு பெண்கள் இதுவரை நம்பவுமில்லை... பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பில், உரிமைகள் எதுவும் தரப்படவுமில்லை.

உ.பி : 3-ம் கட்ட தேர்தல் நடைபெறும் 58 தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் ஓய்வு- 135 கிரிமினல் வேட்பாளர்கள்!உ.பி : 3-ம் கட்ட தேர்தல் நடைபெறும் 58 தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் ஓய்வு- 135 கிரிமினல் வேட்பாளர்கள்!

எதிர்பார்த்தபடியே ஆடைக் கட்டுப்பாட்டையும் கொண்டு வந்துவிட்டனர்.. பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதி இல்லை..

 பெண் பிள்ளைகள்

பெண் பிள்ளைகள்

திரைச்சீலை உதவியுடன் மாணவர்களை தனியாக பிரித்து உட்கார வேண்டும் என்றும், பெண் பிள்ளைகளுக்கு ஆசிரியைகள் தான் பாடம் நடத்துவர் என்றும் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல, மகளிர் மேம்பாட்டுத்துறையில் கூட பெண்கள் வேலைபார்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.. பல்கலைக் கழகங்களில் பெண்கள் பணியாற்ற கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்துவிட்டனர்.. இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு தாலிபான்கள் ஒரு அரசாணையை வெளியிட்டிருந்தனர்.

 ஆறுதல் விஷயம்

ஆறுதல் விஷயம்

அதில், ''பெண்களை ஒரு சொத்தாகக் கருதக்கூடாது... பெண்களைத் திருமணத்துக்கு கட்டாயப்படுத்தக் கூடாது... அவர்களின் சம்மதம் பெற்ற பின்புதான் திருமணம் நடத்தப்பட வேண்டும்.. ஒரு பெண்ணை அமைதிக்கு ஈடாகவோ அல்லது பகைமையை முடிவாகவோ யாரும் பயன்படுத்தக்கூடாது.. பெண்களை சொத்தாகக் கருதி அவரை கைமாற்றுவதோ, அல்லது விற்பனை செய்வதோ கூடாது... கணவரை இழந்த பெண்களுக்குக் கணவரின் சொத்தில் பங்கு வழங்கிட வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

 கல்வி

கல்வி

இந்த அறிவிப்பினால், ஓரளவு தாலிபன்கள் இறங்கி வந்ததாகவே பார்க்கப்பட்டாலும், பெண்களுக்கு கல்வி உரிமை வழங்குவது குறித்தோ, வெளியே சென்று வேலை பார்ப்பது குறித்தோ எந்தவிதமான அறிவிப்பும் வழங்கப்படவே இல்லை.. கடந்த 20 வருடங்களாகவே கல்விதான் முக்கிய சக்தியாக ஆப்கன் பெண்களுக்கு கிடைத்து வந்த நிலையில் அதை பற்றி எதையுமே சொல்லாதது அந்நாட்டு பெண்களை மட்டுமல்லாமல், சர்வதேச நாடுகளை மறுபடியும் கவலைக் கொள்ள வைத்துள்ளது.

 பெண் குழந்தைகள்

பெண் குழந்தைகள்

ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியும் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.. போதாக்குறைக்கு அந்த நாட்டில் பட்டினி, வறுமையும் சேர்ந்துவிடவும், பெண் குழந்தைகளால் பள்ளிக்கு செல்ல முடியாத சிக்கலும் ஏற்பட்டுவிட்டது.. இப்படிப்பட்ட சூழலில்தான், ஒரு பெண் குழந்தைகளுக்கு பாடம் நடத்த முன்வந்துள்ளார்.. அந்த பெண் பெயர் சோடா நஜந்த்.. காபூலை சேர்ந்தவர்..

வறுமை

வறுமை

பிள்ளைகள் வறுமையால் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதை எண்ணி வேதனைப்பட்ட சோடா, அவர்களக்கு இலவச பாடம் நடத்த முன்வந்துள்ளார்.. அதுவும் தெருவில் வியாபாரம் செய்து வரும் குழந்தைகளுக்கு பாடங்களை கற்று கொடுக்க தொடங்கி உள்ளார்.. இந்த பெண் உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆவார்.. தெருவில் வியாபாரம் செய்து வரும் பிள்ளைகளை, காபூல் பூங்காவிற்கு அழைத்து சென்று, அங்குதான் உட்கார வைத்து பாடம் சொல்லி தருகிறார்.. 3 மணி நேரம் பாடம் நடத்துகிறார்.

குரான்

குரான்

இதை பற்றி சோடா சொல்லும்போது, சிறுவர்களுக்கு முதலில் தாரி எனப்படும் ஆப்கானிஸ்தானில் பேசப்படும் பாரசீக மொழியைதான் கற்று கொடுக்க ஆரம்பித்தேன்... அதன்பிறகு எப்படி படிக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்தேன்.. அதற்கு பிறகு கணக்கு சொல்லி தந்தேன்.. அதன்பிறகு குரான் படிக்க வைத்தேன்.. இப்போது பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்று கொள்ள வேண்டுமாம்.. ஆர்வமாக இருக்கிறார்கள். 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து படிக்கின்றனர்..

Recommended Video

    DRDO Good News! நடுங்க வைக்கும் Astra MK2 | வெளியானது J10C | Oneindia Tamil
    பிச்சை

    பிச்சை

    இந்த குழந்தைகள் எல்லாம் தெருவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள்... ஆனால் நான்தான் அவர்களை தடுத்து நிறுத்த செய்து, படிப்பு பற்றி சொல்லி ஊக்கப்படுத்தினேன்.. இந்த நேரத்தில் ஊக்குவிப்பதுதானே மிகச்சிறந்த விஷயமாக இருக்க முடியும்" என்கிறார் இளம்பெண் சோடா.. தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் என்னாகுமோ என்று ஏங்கி கொண்டு பசியால் வாடிக் கொண்டுமிருக்கும் பெற்றோர்கள் அங்கு ஏராளம்.. எனினும், சில பிள்ளைகளாவது படிக்க நேர்ந்துள்ளதும், கல்வியை நோக்கி கவனம் திரும்பி உள்ளதும் மகிழ்ச்சியை தந்து வருகிறது.

    English summary
    taliban restrictions kabul young woman teaches street children for free in the parks
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X