வங்கதேச பிரதமரானார் தாரிக் ரஹ்மான்.. இந்தியாவுடன் உறவு எப்படி இருக்கும்? ஓம்பிர்லா நேரில் வாழ்த்து
டாக்கா: இந்தியா- வங்கதேசம் இடையேயான உறவு மோசமாக உள்ளது. இந்நிலையில் தான் இன்று வங்கதேசத்தின் புதிய பிரதமராக மறைந்த வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்றார். இந்த விழாவில் இந்தியா சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் இந்த தாரிக் ரஹ்மான் யார்? இனி இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவு எப்படி இருக்கும்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த 12ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிட தடை விதிக்கப்பட்டது.

இதனால் மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மானின் பிஎன்பி கட்சியும், ஷபிஹூர் ரஹ்மானின் ஜேஇஐ எனும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிகள் இடையே தான் போட்டி நிலவியது. இதில் தாரிக் ரஹ்மானின் பிஎன்பி கட்சி அமோக வெற்றி பெற்றது.
பிஎன்பி-க்கு மெஜாரிட்டி
வங்கதேசத்தில் மொத்தம் 300 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதனால் ஒரு கட்சி தனித்து ஆட்சியை கைப்பற்ற 151 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தேர்தல் நெருங்கிய நிலையில் ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்தார். இதனால் 299 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தாரிக் ரஹ்மானின் பிஎன்பி கட்சி 209 தொகுதிகளிலும், அவரது கூட்டணி கட்சிகள் 3 இடங்களில் வெற்றி பெற்றன.
பிரதமராக பொறுப்பேற்பு
அதேவேளையில் ஜமாத் இ இஸ்லாமி மற்றும் அதன் கூட்டணி மொத்தம் 77 இடங்களில் வெற்றி பெற்றன. இதில் ஜமாத் இ இஸ்லாமி 68 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் பெரும்பான்மை பலத்துடன் பிஎன்பி கட்சியின் தாரிக் ரஹ்மான் வங்கதேச பிரதமராவது உறுதியானது. இதையடுத்து வங்கதேச பிரதமராக இன்று மாலை 4.15 மணிக்கு தாரிக் ரஹ்மான் பொறுப்பேற்றார்.
மோடிக்கு பதில் ஓம்பிர்லா
இந்த விழாவில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் மும்பையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உடனான சந்திப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்டதால் பிரதமர் மோடியால் அங்கு செல்ல முடியவில்லை. பிரதமர் மோடி சார்பில் பதவியேற்பு விழாவில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா பங்கேற்றார். அவர் தாரிக் ரஹ்மானுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
தாரிக் ரஹ்மான் பின்னணி
புதிய பிரதமராகி உள்ள தாரிக் ரஹ்மான் கடந்த டிசம்பர் மாதம் மறைந்த வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் ஆவார். கலிதா ஜியா, 1991 முதல் 1996 வரையும், 2001 முதல் 2006 வரையும் அவர் பிரதமராக இருந்தார். இந்த வேளையில் முக்கிய முடிவுகளை மகன் தாரிக் ரஹ்மான் தான் எடுத்ததாக சொல்லப்படுகிறது.
அதன்பிறகு ஆட்சி மாற்ற நிகழ்ந்தபோது தாரிக் ரஹ்மான் லண்டன் சென்றார். பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் அவர் மீது வந்ததால் அவர் லண்டனிலேயே வசித்தார். கடந்த 17 ஆண்டுகளுக்கு பிறகு தாய் கலிதா ஜியாவின் உடல்நலம் மோசமான பிறகு கடந்த டிசம்பர் மாதம் கடைசியில் தான் நாடு திரும்பினார்.
நெருக்கம் காட்டும் மோடி
அடிப்படையில் கலிதா ஜியாவும் நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர் தான். அதேபோல் பாகிஸ்தானையும் அவர் கிட்ட சேர்க்கவில்லை. அதேவேளையில் பிரதமர் மோடி, கலிதா ஜியாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். இறுதி சடங்கில் வெளியுறவுத்துறை ஜெய்சங்கர் பங்கேற்று தாரிக் ரஹ்மானுக்கு ஆறுதல் கூறினார்.
அதன்பிறகு தாரிக் ரஹ்மான் வென்ற பிறகு மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அதற்கு தாரிக் ரஹ்மான் நன்றி தெரிவித்தார். இப்போது ஓம்பிர்லா பதவியேற்பு விழாவில் நேரடியாக பங்கேற்றுள்ளார். இதனால் இருநாடுகள் இடையேயான உறவு மேம்பட நல்ல சான்ஸ் உள்ளது.
இந்திய உறவு பற்றி தாரிக் ரஹ்மான்
இதனை தாரிக் ரஹ்மானும் உறுதி செய்தார். இந்தியாவுடனான உறவு எப்படி இருக்கும்? என்று கேட்டபோது, ‛‛நாட்டு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு வெளிநாட்டு கொள்கைகளை உருவாக்குவோம் என்று கூறினார். வங்கதேச மக்கள் பாகிஸ்தான், சீனாவை காட்டிலும் நம் நாட்டில் மருத்துவம், தொழில் உள்பட பல்வேறு துறைகளை சார்ந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி சீனா, பாகிஸ்தானை ஒப்பிடும்போது நம் நாடு நம்பிக்கையான நட்பு நாடாகும். இதனால் நிச்சயம் தாரிக் ரஹ்மான் நம் நாட்டுடன் இணக்கமான உறவை பின்பற்றுவார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
முன்னதாக வங்கதேச பிரதமராக அவாமி லீக் கட்சியின் ஷேக் ஹசீனா இருந்தவைர உறவு சிறப்பாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. இதனால் ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடந்து வருகிறது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டார். இவர் நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவராக இருந்தார். . பாகிஸ்தானுடன் சேர்ந்து நம்மை சீண்டினார்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களுக்கு எதிரான வன்முறையை அவர் தடுக்க தவறினார். மேலும் முகமது யூனுஸின் ஆதரவாளர்கள் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நம் நாட்டின் மீது கூறி வந்தனர். வடகிழக்கு மாநிலங்களை பிரிப்பதாகவும், இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத சக்திகளுக்கு அடைக்கலம் கொடுப்போம் என்று கூறி வருகின்றனர். இப்படியான சூழலில் தாரிக் ரஹ்மான் வங்கதேச பிரதமராக பொறுப்பேற்று இருப்பது நம் நாட்டுக்கு பாசிட்டிவான சைனாக பார்க்கப்படுகிறது
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications