For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாகிஸ்தானை மூழ்கடித்த வெள்ளம்! காரணமே இதுதானாம்.. வளர்ந்த நாடுகள் மீது பாயும் "உலக சுகாதார மையம்"!

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தற்போது வரலாறு காணாத மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.

இது யதார்த்தமானதல்ல. ஒரு குறிப்பிட்ட பருவநிலையில் பெய்ய வேண்டிய மழை மொத்தமும் சில நாட்களில் மட்டும் பெய்ததால்தான் இவ்வாறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், வெள்ள பாதிப்புகள் குறித்து பாகிஸ்தானில் ஆய்வு மேற்கொண்ட ஐ.நா தலைவர் டெட்ரோஸ் அதானோம், "வளர்ந்த நாடுகளே பசுமை இல்ல வாயு அதிக அளவு வெளியேற்றுகின்றன" என்று கூறியுள்ளார்.

 நீட் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்களில் 35% பேர் தேர்ச்சி..6 மாவட்டங்களில் 100% பேர் தேர்ச்சி நீட் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்களில் 35% பேர் தேர்ச்சி..6 மாவட்டங்களில் 100% பேர் தேர்ச்சி

அதீத வெப்பம்

அதீத வெப்பம்

காலநிலை மாற்றம் காரணமாக சர்வேதச அளவில் தொடர்ந்து சில பிரச்னைகள் உருவாகி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரிட்டனில் 40 டிகிரி அளவில் வெப்பம் சுட்டெரித்தது. நிலநடுக்கோட்டிற்கு மேலே உள்ள பிரிட்டனில் ஆண்டுதோறும் குளிர்ச்சியான சூழல் மட்டுமே நிலவி வரும் நிலையில் இந்த மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது இதனையடுத்து பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளம். ஒரு குறிப்பிட்ட பருவநிலையில் பெய்ய வேண்டிய மழை மொத்தமும் சில நாட்களில் மட்டும் பெய்ததால்தான் இவ்வாறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

வெள்ளம்

வெள்ளம்

இவையனைத்தும் காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் பல் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில் வெள்ள பாதிப்புகள் குறித்து பாகிஸ்தானில் ஆய்வு மேற்கொண்ட ஐ.நா தலைவர் டெட்ரோஸ் அதானோம், "வளர்ந்த நாடுகளே பசுமை இல்ல வாயு அதிக அளவு வெளியேற்றுகின்றன" என்று கூறியுள்ளார். நேற்று பாகிஸ்தானின் தெற்கு சிந்து மற்றும் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணங்களின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்நாட்டு பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் உடன் டெட்ரோஸ் அதானோம் பார்வையிட்டார்.

பாதிப்பு

பாதிப்பு

தற்போது பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக சுமார் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். 12,700க்கும் அதிகமானோர் இந்த வெள்ளத்தில் சிக்சி காயமடைந்துள்ளனர். இதனால் அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5லிருந்து 3 சதவிகிதமாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் மேற்குறிப்பிட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பேட்டி

பேட்டி

உலக வெப்பமயமாதலால் ஏற்படும் காலநிலை மாற்றம் குறித்து டெட்ரோஸ் அதானோம் மேலும் கூறுகையில், "தெற்காசியா போன்ற நாடுகள் இம்மாதிரியான காலநிலை மாற்றத்தால் உயிரிழக்கும் அபாயம் 15 சதவிகிதம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இந்த பாதிப்புகளிலிருந்து தப்பிக்க கடன் வாங்கிய நாடுகளாக இருப்பின் அந்நாடுகள் கடனை திருப்பி செலுத்துவதை விடவும், அதனை இவ்வாறு ஏற்படும் காலநிலை மாற்றங்களிலிருந்து தப்பிக்க புதிய கட்டமைப்புகளை உருவாக்க பயன்படுத்தலாம்." என்று கூறியுள்ளார்.

 வளர்ந்த நாடுகள்தான் பொறுப்பு

வளர்ந்த நாடுகள்தான் பொறுப்பு

மேலும், "தற்போதுள்ள நிலையிலிருந்து பசுமை சார்ந்த நிலைக்கு அந்நாட்டை கொண்டு செல்ல இந்த தொகையை பயன்படுத்தலாம் என்றும் அதனோம் கூறியுள்ளார். உலக வெப்பமயமாதலால்தான் காலநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இந்த மாற்றம்தான் அதீத வெள்ளம், அதீத வெப்பம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த வெப்பமயமாதலுக்கு சில குறிப்பிட்ட நாடுகள்தான் மிக முக்கிய காரணமாக இருக்கின்றன. இது குறித்து ஏராளமான ஆய்வு அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

காரணம்

காரணம்

இதன் அடிப்படையில்தான் அதானோம் வளர்ந்த நாடுகள் மீது குற்றம்சாட்டியுள்ளார். உதாரணமாக உலகின் 10% பணக்காரர்கள் 50% புதைபடிவ எரிபொருள் உமிழ்வுக்கு காரணமாக இருக்கின்றனர். ஏழ்மையான 50% பேர் வெறும் 10% மட்டுமே இதனை வெளியேற்றுகின்றனர். கடந்த 1988 முதல் 70% பசுமை இல்ல வாயு எனப்படும் கிரீன்ஹவுஸ் கேஸ் வெளியேற்றத்திற்கு வெறும் 100 நிறுவனங்கள் மட்டுமே காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த வாயுக்கள் புவியின் வளிமண்டலத்தை பாதித்து அதிகப்படியான சூரிய கதிரிகள் புவியை தாக்க காரணமாக அமைந்துவிடுகிறது. இதனால் புவி வெப்பமயமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Pakistan is currently facing severe impacts due to unprecedented rains and resulting floods. This is not realistic. Such effects have occurred because the total amount of rain that should fall in a particular climate has fallen in just a few days. In this case, UN President Tedros Adhanom Ghebreyesus, who conducted a study on the effects of floods in Pakistan, said, "Developed countries emit the most greenhouse gas."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X