அய்யய்யோ சீனாவா? வேண்டவே வேண்டாம்.. இந்தியாவிடம் உதவி கேட்ட வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா! என்ன காரணம்

Subscribe to Oneindia Tamil

டாக்கா: அய்யய்யோ சீனாவா? வேண்டவே வேண்டாம். எங்களுக்கு எப்படியாவது உதவி செய்யுங்க என்று இந்தியாவிடம் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா விடுத்துள்ள கோரிக்கை அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.

நம்நாட்டின் அண்டை நாடாக வங்கதேசம் உள்ளது. இந்த நாட்டின் பிரதமராக ஷேக் ஹசீனா உள்ளார். இவர் இந்தியாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இத்தகைய சூழலில் தான் இமயமலையில் தொடங்கி நீண்டதூரம் ஓடும் நதிகளை நாமும், வங்கதேசமும் பகிர்ந்து கொள்கிறோம்.

bangladesh india china

அந்த வகையில் முக்கியமான நதி தான் டீஸ்டா. இமயமலையில் உருவாகும் இந்த டீஸ்டா நதி என்பது நம் நாட்டின் சிக்கிம் மாநிலத்தின் முக்கிய நதியாக உள்ளது. அங்கிருந்து இந்த நதி வங்கதேசம் செல்கிறது.

இந்நிலையில் தான் டீஸ்டா நதியை மேம்படுத்தும் முயற்சியில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மும்முரமாக உள்ளார். இந்த திட்டத்தை நிறைவேற்ற சீனா தயாராக உள்ளது. இத்தகைய சூழலில் தான் ஷேக் ஹசீனா சமீபத்தில் இந்தியா வந்தபோது இந்த நிதி மேம்பாட்டு திட்டம் பற்றி பேசினார். வங்கதேசத்தை பொறுத்தமட்டில் சிறிய நாடாகும். இதனால் இந்த திட்டத்துக்காக ஷேக் ஹசீனா உதவி கேட்டுள்ளார்.

இத்தகைய சூழலில் தான் வங்கதேச தலைநகர் டாக்காவில் அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: டீஸ்டா நதி மேம்பாட்டு திட்டத்தை இந்தியா மேற்கொள்ள வேண்டும். இதற்கு உதவ சீனா தயாராக உள்ளது.1 பில்லியின் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் டீஸ்டா நதி மேம்பாட்டு திட்டத்தை இந்தியா செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். . இந்த திட்டத்துக்கு சீனாவை விட இந்தியா தான் பொறுத்தமாக இருக்கும்'' என தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் இந்த நிதி என்பது இந்தியா- வங்கதேசம் இடையே பாய்ந்தோடுகிறது. இதில் சீனா உதவி செய்யும்போது அந்த நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான உறவு அதிகரிக்கலாம். இது இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். இத்தகைய சூழலில் தான் சீனாவை விட இந்தியா டீஸ்டா நதி மேம்பாட்டு பணிக்கு உதவி செய்ய வேண்டும் என ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

மேலும் ஷேக் ஹசீனாவின் இந்த முடிவுக்கு பின்னால் முக்கிய 2 காரணங்கள் உள்ளன. ஒன்று டீஸ்டா நதி இந்தியா - வங்கதேசம் இடையே ஓடுகிறது. இதனால் இந்தியாவிடம் உதவி கேட்பது தான் சிறந்தது என்று அவர் நினைக்கிறார். இன்னொரு விஷயம் என்னவென்றால் சீனா உதவ தயாராக உள்ளது. சீனாவிடம் உதவி கேட்டு அந்த பணியை செய்யக்கூறினால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். இதனால் இந்தியாவுடனான, வங்கதேச உறவிலும் விரிசல் ஏற்படலாம்.

மேலும் சீனா என்பது இலங்கைக்கு அதிகளவில் கடன் உள்பட பல சலுகைகளை வழங்கியது. கடைசியில் அந்த நாடு திவால் ஆனது. இத்தகைய சூழலில் தான் சீனா மீது ஷேக் ஹசீனா நம்பிக்கை வைக்காமல் இந்தியாவிடம் உதவி கேட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+