"அது"கூட கண்ணை உறுத்திடுச்சே.. ஹய்யோ.. தாலிபன்கள் வந்துட்டாங்களா.. ஆப்கன் பெண்களுக்கு இன்னொரு பகீர்

ஆப்கனில் பல்கலையல் பெண்கள் படிப்பதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

ஆப்கன்: இன்னொரு கொடுமை ஆப்கானிஸ்தானில் அரங்கேறியுள்ளது.. தாலிபன்களின் நாளுக்குநாள் பெருகிவரும் அட்டகாசத்தை பார்த்து உலக மக்கள் அதிர்ந்து போய் உள்ளனர்..

தாலிபன்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும் இன்னும் பள்ளிகள் ஆப்கனில் திறக்கப்படவில்லை.. பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதி கிடையாது. ஆப்கன் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
திரைச்சீலை உதவியுடன் மாணவர்களை தனியாக பிரித்து உட்கார வேண்டும் என்றும், பெண் பிள்ளைகளுக்கு ஆசிரியைகள் தான் பாடம் நடத்துவர் என்றும் தாலிபன்கள் உத்தரவிட்டனர்.

 சவுக்கடி

சவுக்கடி

அதேபோல, மகளிர் மேம்பாட்டுத்துறையில் கூட பெண்கள் வேலைபார்க்கத் தடை விதிக்கப்பட்டது.. ஆறாம் வகுப்பு மேல் கல்வி கற்க தடை, ஆண்கள் துணையின்றி விமானங்களில் பயணிக்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் செல்ல தடை என பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டத்தை அமுல்படுத்தி கடுமையான கட்டுப்பாடுகளையும், தண்டனைகளையும் தாலிபான்கள் நிறைவேற்றி வருகின்றனர். பல்கலைக் கழகங்களில் பெண்கள் பணியாற்ற கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்துவிட்டனர்.

 இடைக்கால தடை

இடைக்கால தடை

இப்போதும் ஒரு கொடுமை நடந்துள்ளது.. ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர்... அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும் என்றம் அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. ஏற்கனவே, இப்படி பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல தடை விதித்து, அவர்களுக்கு கல்வி அளிக்க மறுத்து வருவதற்கு ஐநா கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தது.. இப்போது, ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க தாலிபான்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

 ஒயிட் ஹவுஸ்

ஒயிட் ஹவுஸ்

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு இடைக்கால தடை விதித்துள்ள தலிபான்களின் முடிவை அமெரிக்கா கண்டிக்கிறது. மோசமான முடிவுவானது ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவும், அவர்களின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் தலிபான்கள் தலைமையின் எடுக்கப்பட்ட சமீபத்திய முயற்சியாகும்.

 ஐயோ தாலிபன்கள்

ஐயோ தாலிபன்கள்

ஆப்கானிஸ்தானின் மக்கள்தொகையில் பாதியளவு உள்ள பெண்களின் கல்வியை தடுத்து நிறுத்தும் இந்த ஏற்றுக்கொள்ள முடியாத நிலைப்பாட்டின் விளைவாக, தலிபான்கள் சர்வதேச சமூகத்திலிருந்து மேலும் விலகி அவர்கள் விரும்பும் சட்டபூர்வமான தன்மை மறுக்கப்படும். இந்தப் பிரச்சினையில் எங்களின் கூட்டு நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுடன் அமெரிக்கா தொடர்பில் உள்ளது. ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆதரவாகவும், அந்நாட்டு மக்களுக்கு மனிதாபிமான ஆதரவை வழங்குவதற்கும் எங்களின் முயற்சிகளை முன்னெடுப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று கூறியுள்ளது.

 விழிபிதுங்கிடுச்சு

விழிபிதுங்கிடுச்சு


கடந்த 20 வருடங்களாகத்தான் ஆப்கன் பெண்கள், லேசாக தலைநிமிர தொடங்கினர்.. வீட்டை விட்டு வெளியேறி மெல்ல மெல்ல பெண்கள் படிக்க ஆரம்பித்தனர்.. வேலைக்கும் செல்ல துவங்கினர்.. ஆப்கன் வரலாற்றில் கல்விக்கான பொற்காலம் என்று கடந்த 20 வருடங்களை மட்டுமே சொல்ல முடியும்.. ஆனால் அதற்குள் இந்த தாலிபன்கள் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்.. கல்வியை நோக்கி அடியெடுத்து வைத்து கொண்டிருந்த பெண்களுக்கு, உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதும், கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதும், மீளா துயரில் ஆழ்த்தி வருகிறது... எங்கே போவது, என்ன செய்வது என்றே தெரியாமல் ஆப்கன் பெண்கள் விழிபிதுங்கி கொண்டிருக்கிறார்கள்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+