4 பேரைக் கொன்று விமானத்தைத் திருடிய 67 வயது தாத்தா... மரண தண்டனை!
ஹவுஸ்டன்: அமெரிக்காவில் நான்கு பேரைக் கொன்று விமானத்தை திருடிய வழக்கில் 67 வயது முதியவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஆர்லிங்டனில் ரசாயன விற்பனையாளராக இருந்து வந்தவர் போவர். இவருக்கு சிறிய விமானம் ஒன்றை வாங்க வேண்டும் என்ற ஆசை. அதற்காக சிறிய விமானம் வைத்திருந்த ஒருவரிடம் சென்று பேரம் பேசியுள்ளார். கேட்ட விலைக்கு விமானத்தைத் தர உரிமையாளர் மறுத்ததால், ஆத்திரத்தில் அவரையும், அவருடன் இருந்த மூன்று பேரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் போவர். பின்னர், அந்த விமானத்தையும் அவர் திருடிச் சென்றார்.

இந்தச் சம்பவம் நடந்தது கடந்த 1983ம் ஆண்டு. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் போவரைக் கைது செய்தனர். விசாரணையின் முடிவில் போவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இந்தத் தண்டனையை எதிர்த்து போவர் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவை நேற்று முன்தினம் அமெரிக்க உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் போவரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மரணமடைந்த போவருக்கு தற்போது வயது 67 ஆகும். 32 ஆண்டுகளுக்கு முன்னர் நான்கு பேரைக் கொன்ற வழக்கில் தற்போது அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெக்சாஸ் மாகாண அரசு, 1982ல் அதாவது போவர் குற்றம் புரிவதற்கு முந்தைய ஆண்டுதான், மரண தண்டனை சட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வந்தது. இம்மாகாணத்தில், இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 526 பேரில் போவர் தான் வயது மூத்தவர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications