தாய்லாந்து குகைக்குள் மாட்டிய சிறுவர்கள்... துவங்கியது மீட்பு பணி.. களமிறங்கிய கடல் ஜாம்பவான்கள்!
தாய்லாந்து குகைக்குள் காணமால் போன 12 பள்ளி கால்பந்து அணி வீரர்களும், 1 பயிற்சியாளருக்கு மீட்கும் பணி தற்போது துவங்கி இருக்கிறது.
பாங்காக்: தாய்லாந்து குகைக்குள் காணமால் போன 12 பள்ளி கால்பந்து அணி வீரர்களும், 1 பயிற்சியாளருக்கு மீட்கும் பணி தற்போது துவங்கி இருக்கிறது.
சிக்கலான குகைகளில் ஒன்றான தாய்லாந்தில் இருக்கும் தி தம் லுஅங் குகை என்ற மிகவும் குறுகலான குகைக்குள் தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள். கடந்த 10 நாட்களாக அவர்கள் உள்ளேயே இருக்கிறார்கள்.
நேற்றுதான் அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர்களுக்கு புதிய பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளது.

கடல் சாகச வீரர்கள்
இதற்காக தற்போது கடலில் சாகசம் செய்ய கூடிய 13 வீரர்கள் களமிறங்கி உள்ளனர். இவர்கள் கடலுக்கு அடியில் டைவ் அடித்து எவ்வளவு கனமான பொருட்களையும் மீட்டு கொண்டு வரக்கூடிய திறன் கொண்டவர்கள். இதற்காக தற்போது அந்த 13 பேரும் தாய்லாந்து குகையின் பக்கத்தில் வந்துள்ளனர். இன்னும் சில மணி நேரத்தில் இவர்கள் பணியை தொடங்குவார்கள்.

இன்று முதல் நபர்
இன்று அவர்கள் முதல் நபரை மீட்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. குழுவில் இருக்கும் மிகவும் உடல் நலம் குன்றிய சிறுவன் ஒருவனை முதலில் மீட்க முடிவெடுத்து இருக்கிறார்கள். அதன்பின் நாளை மற்ற மாணவர்களை மீட்பார்கள். பயிற்சியாளரை கடைசியாக மீட்பார்கள் என்று கூறப்படுகிறது.

த்ரில்
அவர்கள் இப்போது குகைகள் மொத்தம் 4 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அதற்கு எதிர்திசையில் மீட்க வேண்டும் என்றால் மிகவும் கடினமான செயல். இதற்காக அவர்கள், பழைய வந்த பாதையிலேயே கொண்டு வரப்படுவார்கள். மொத்தம் இரண்டு மீட்பு பணியாளர்கள் சேர்ந்து வந்து, ஒரு சிறுவனை அழைத்து வருவார்கள்.

கடைசியில் என்ன நடக்கும்
குகையில் பாதி வரை இவர்கள் கொண்டு வருவார்கள். தண்ணீர் குறைவாக இருக்கும் இடம் வந்த பின் அங்கு தாய்லாந்து மீட்பு படையினர் இடம் அந்த சிறுவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள். இப்படி ஒரு ஒரு சிறுவனாக மீட்கப்படுவான். நாளை மாலைக்குள் மீண்டும் மழை பெய்யும் என்பதால் இந்த பணியை வேகமாக முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications