Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. இந்நிலையில் தான் 'இந்திய மக்களுக்கு நன்றி' என எழுதி இஸ்ரேல் மீதும், அமெரிக்காவிற்கு சொந்தமான பாதுகாப்பு படைகளின் தளங்களின் மீதும் ஈரான் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது. இதுதொடர்பான போட்டோக்கள் வெளியான நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்கா, இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது கடந்த மாதம் 28 ம் தேதி போரை தொடங்கியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

அமெரிக்காவை பழிவாங்கும் வகையில் ஈரான் அதன் நட்பு நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்பட பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த பதிலடி தாக்குதலுக்கு 'ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

83வது முறையாக ஏவுகணை தாக்குதல்

இந்நிலையில் தான் நடப்பு போரில் 83வது முறையாக ஈரான் ஏவுகணைகளை ஏவி தாக்குதலை தொடங்கியது. இதுதொடர்பாக ஈரான் புரட்சிகர காவல் படை சார்பில், '' அஷ்தோட்டில் உள்ள கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்கு, மோடி இன் அருகே உள்ள ராணுவ தளங்கள், அமெரிக்கா ராணுவ தகவல் பரிமாற்ற மையம் உள்ளிட்டவற்றை குறிவைத்து ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவின் அல் தாஃப்ரா, அல் உதேரி, அலி அல் சலிம் விமான தளம், செய்க் இஷா தளம் உள்ளிட்டவற்றின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள், டிரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரான் போர் தொடர்ந்து உக்கிரமாக நடந்து வருகிறது. இப்போதைக்கு போர் முடிவது கேள்விக்குறியாகி உள்ளது.

இந்திய மக்களுக்கு நன்றி

இந்த தாக்குதலுக்காக ஏவப்பட்ட ஏவுகணைகளில் 'இந்திய மக்களுக்கு நன்றி' என எழுதப்பட்டுள்ளது. நீல நிறம் கொண்ட மார்க்கர் பென் வைத்து ஈரானின் ஏவுகணைகளின் மீது ஆங்கிலத்தில் 'தேங்க்யூ பிபிள் ஆஃப் இந்தியா' என்று எழுதப்பட்டுள்ளது. அதேபோல் 'தே்ஙக்யூ ஜெர்மன் பிபிள்' என எழுதப்பட்டுள்ளது. தங்களின் நட்பு நாடுகளுக்கு ஈரான் நன்றி தெரிவிக்கும் வகையில் இத்தகைய செயலை ஈரான் செய்துள்ளது.

இந்தியா - ஈரான் இடையே நல்ல நட்பு உள்ளது. மேலும் இந்த போரில் நம் நாடு இஸ்ரேல் அல்லது அமெரிக்காவின் சார்பு நிலையை எடுக்கவில்லை. 3 நாடுகளும் பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும் என்று கூறி வருகிறது. அதுமட்டுமின்றி மக்களை நோக்கி நடத்தப்படும் தாக்குதலுக்கு மனிதாபிமான அடிப்படையில் அனைத்து நாடுகளின் தலைவர்களிடமும் பிரதமர் மோடி தனது கவலையை பகிர்ந்துள்ளார். ஈரான் பிரதமர் மசூத் பெசெஷ்கியானுடனும் பேசி பிரச்சனையை முடிக்கும்படி கூறியுள்ளார்.

போட்டோ - வீடியோக்கள்

அதுமட்டுமின்றி ஈரானுக்கு உதவி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. பொதுமக்கள் தங்களின் பணம், நகைகளை வழங்கி வருகின்றனர். அதோடு மனிதாபிமான அடிப்படையில் ஈரானுக்கு மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்படியாக ஈரான் - இந்தியா இடையே நல்லுறவு உள்ளது. இந்தியாவின் உதவியை ஈரான் ஒருபோதும் மறக்காது என்று நம் நாட்டுக்கான ஈரான் தூதரகம் அறிவித்து எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்தது.

இதற்கு கைமாறாக தான் நம் நாட்டுக்கு கச்சா எண்ணெய், கேஸ் கொண்டு வரும் கப்பல்களை ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் அனுமதித்துள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக தான் ஈரான் தனது ஏவுகணைகளில் இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்து இருக்கும் போட்டோ, வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+