For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேறு எதையும் சொல்ல முடியாது.. பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியபோதும் தில் காட்டிய 'அபிநந்தன்'

Google Oneindia Tamil News

Recommended Video

    பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியபோதும் தில் காட்டிய அபிநந்தன்- வீடியோ

    இஸ்லாமாபாத்: கண்களை கட்டியிருந்ததோ, அல்லது, முகத்தில் ரத்தம் வடிந்ததோ, 'விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான்' தைரியத்தை குலைத்துவிட முடியவில்லை.

    இந்திய விமானி அபிநந்தன் தங்கள் வசம் இருப்பதாக கூறி பாகிஸ்தான் அதிகாரிகள் இன்று மதியம் ஒரு வீடியோவை வெளியிட்டனர். அதில், அபிநந்தனை பாகிஸ்தானை சேர்ந்த சிலர் அடித்து உதைப்பது போன்ற காட்சியும், பிறகு, கண்களை கட்டி, பாகிஸ்தான் ராணுவம் அவரை அழைத்துச் செல்வது போன்ற காட்சிகளும் இருந்தன. அப்போது அவரது முகத்தில் ரத்த காயங்களும் இருந்தன.

    விமானி அபிநந்தனின் பூர்வீகம் திருவண்ணாமலை.. வளர்ந்தது சென்னை.. அதிர்ச்சி தகவல்கள்! விமானி அபிநந்தனின் பூர்வீகம் திருவண்ணாமலை.. வளர்ந்தது சென்னை.. அதிர்ச்சி தகவல்கள்!

    Thats all I can tell you, Abhinandan says with courage

    இதையடுத்து, அவரிடம் பாகிஸ்தான் ராணுவம் விசாரணை நடத்துவது போன்ற காட்சிகளும் இருந்தன. அதில், தனது பெயர், சேவை எண், போன்றவற்றை கூறுவதோடு, தான் ஒரு இந்து என்பதையும் குறிப்பிடுகிறார். கூடுதலாக தகவல்களை பாக். ராணுவம் கேட்டபோது, "வேறு என்ன?" என்று கூலாக பதில் சொல்கிறார் அவர்.

    "ஐயம் சாரி சார்.. இவற்றை மட்டும்தான் என்னால் உங்களிடம் சொல்ல முடியும்" என்று கூலாக ரிப்ளை செய்கிறார். பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கிய பதற்றம் அவரது முகத்தில் தென்படவில்லை.

    பாகிஸ்தான் ராணுவம் விரித்த வலையில் எப்படி சிக்கினார் அபினந்தன்? நடந்தது இதுதான் பாகிஸ்தான் ராணுவம் விரித்த வலையில் எப்படி சிக்கினார் அபினந்தன்? நடந்தது இதுதான்

    இத்தனைக்கும் இது பாகிஸ்தான் வெளியிட்ட வீடியோதான். இந்த பைலட் இந்தியாவின் விங் கமாண்டர் வர்த்தமான் என்கிறது பாகிஸ்தான். இந்த வீடியோவின் நம்பகத்தன்மையை இந்தியா இதுவரை உறுதி செய்யவில்லை.

    அதேநேரம், இவ்வாறு ஒரு வீடியோவை வெளியிடுவதே ஜெனிவா உடன்படிக்கைக்கு எதிரானது என இந்திய வெளியுறவுத்துறை கண்டித்துள்ளது. இதையடுத்து, அபிநந்தன் காபியோ அல்லது டீயோ குடிப்பதை போன்ற ஒரு வீடியோவை பாகிஸ்தான் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

    இருப்பினும், உறுதிப்படுத்தப்படாத நிலையில், அதுபோன்ற வீடியோவை வெளியிடுவது ஜெனிவா உடன்படிக்கைக்கு எதிரானது என்பதால், அந்த வீடியோவை இந்திய அரசு உறுதி செய்யும்வரை, 'ஒன்இந்தியாதமிழ்' இணையதளம் வெளியிடாது.

    English summary
    Neither the blindfold nor the blood masked the dignity in Wing Commander Abhinandan Varthaman's calm, clear voice as he spoke to his captors, on camera.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X