ரஷ்யா எதிர்பார்த்த நல்ல விஷயம் நடக்க போகுது.. இறங்கி வந்த உக்ரைன் அதிபர்.. அதிரடி அறிவிப்பு
கீவ்: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அடங்கிய உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் விரும்பியது. ஆனால் அமெரிக்காவே ஆகாது என்கிற நிலையில், அந்த நாட்டின் ராணுவத்துடன் சேரும் உக்ரைனின் முடிவு ரஷ்யாவை கோபத்தில் ஆழ்த்தியது. இதனால் உக்ரைன்மீது ரஷ்யா போர்தொடுத்து. ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ராணுவ உதவி செய்த தைரியத்தில் உக்ரைன் போரில் குதித்தது. ஆனால் இன்று அமெரிக்கா ரஷ்யா இடையே மாட்டிக்கொண்டு தவிக்கிறது. இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா மற்றொரு தாக்குதல் நடத்தாது என்று உறுதியளித்தால் நேட்டோ கூட்டமைப்பில் இணையும் முடிவை கைவிட தயாராக இருப்பதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அடங்கிய உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்தது. இது ரஷியா தனக்கு எதிரான அத்துமீறலுக்கு எதிரான மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கும் என உக்ரைன் நினைத்தது. ஏனெனில் ரஷ்யா உக்ரைன் இடையே மோதல்கள் இருந்து வந்தது. இதன் காரணமாக உக்ரைன் நோட்டோவில் இணைவதற்கு, தொடக்கம் முதல் ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால் இந்த முயற்சியை கைவிடாததால் கடந்த 2022-ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது.

4 ஆண்டுகளை நெருங்கியும் இந்த போர் தொடர்ந்து நடந்து வருகிறது. உக்ரைன் ஐரோப்பியா மற்றும் அமெரிக்கா ஆதரவுடன் ரஷ்யாஉடன் சண்டை செய்த வருகிறது. ரஷ்யா உக்ரைன் இடையே மோதல் இன்று வரை முடிவுக்கு வராத காரணத்தால் கோபத்தில் இருக்கிறது அமெரிக்கா.
ரஷ்யா இத்தனை வருடங்கள் கடந்து சண்டை செய்ய, சீனா மற்றும் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்தான் காரணம் என்று அமெரிக்கா நினைக்கிறது. அதனால் தான் இந்தியாவிற்கு 50 சதவீத வரி விதித்தது. இதுஒருபுறம் இருந்தால் சண்டை போதும், பேசி தீர்க்கலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியே அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது போரில் கைப்பற்றிய பகுதிகளை விட்டுக்கொடுப்பது உள்பட 28 நிபந்தனை அடங்கிய ஒப்பந்தத்தை டிரம்ப் முன்மொழிந்தார். ஆனால் தனது நாட்டின் ஒரு துண்டு நிலத்தையும் விட்டுக்கொடுக்க முடியாது என கூறி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதனை நிராகரித்துவிட்டார். இதனால் போர் நிறுத்தம் தொடர்பாக உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. ரஷ்யாவோ அமெரிக்காவின் பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தை ஏற்றாலும், உக்ரைன் ஏற்கவில்லை.. இது தான் போர் முடிவுக்கு வராமல் இருக்க காரணமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்கா கிட்டத்தட்ட உக்ரைனை வைத்து ஆடிய ஆட்டம் முடிவுக்கு வரும்நிலையில் உள்ளது.
இந்தநிலையில் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றிருந்தார். அங்கு அமெரிக்க அதிகாரிகளை சந்திப்பதற்கு முன்பு போர் நிறுத்தம் தொடர்பாக சில கருத்துகளை அவர் சமூகவலைதளத்தில் கூறினார். உக்ரைனை பொறுத்தவரை தொடக்கத்தில் இருந்தே நேட்டோ கூட்டமைப்பில் சேர வேண்டும் என்பது விருப்பமாக உள்ளது. ஆனால் அமெரிக்கா மற்றும் சில உறுப்பு நாடுகள் இந்த முடிவை ஆதரிக்கவில்லை.
இதனால் நேட்டோ கூட்டமைப்பில் சேர வேண்டும் என்று உக்ரைன் இனி அழுத்தம் கொடுக்காது. அதேசமயம் பிராந்திய அமைதி மற்றும் உக்ரைன் மீது ரஷ்யா மற்றொரு தாக்குதலை நடத்தாது என்ற உத்தரவாதத்தை உக்ரைன் விரும்புகிறது. அதேநேரம் ரஷ்யாவிற்கு எந்தவொரு பகுதியையும் உக்ரைன் விட்டுக்கொடுக்காது. இந்த உத்தரவாதங்களை அளித்தால் நேட்டோ கூட்டமைப்பில் இணையும் முடிவை கைவிட தயாராக இருக்கிறேன் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications