தாய் நிராகரித்ததால்.. பொம்மையுடன் சுற்றித் திரியும் குட்டி குரங்கு.. மனதை உருக்கும் சம்பவம்!
டோக்கியோ: கடந்த சில நாட்களுக்கு முன்னர், சோஷியல் மீடியாக்களில் ஒற்றை பென்குயின்தான் ஹாட் டாபிக். இந்த வாரம், அந்த இடத்தை ஜப்பானை சேர்ந்த ஒற்றை குரங்கு பிடித்திருக்கிறது. குரங்கு பொம்மையுடன் வலம் வரும் இந்த குட்டி குரங்கு, அப்படி என்னதான் செய்தது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
சோஷியல் மீடியா முழுவதும் இந்த குட்டி குரங்கு பற்றி வீடியோக்கள்தான் பரவலாக ஷேராகி வருகின்றன. ஆரஞ்சு நிறத்தில் ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் போகும் குட்டி குரங்குக்கு ஆதரவாக சோஷியல் மீடியாக்களில் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

என்ன நடந்தது?
சோஷியல் மீடியாக்களில் வரும் வீடியோவில் இருப்பது, ஜப்பான் நாட்டை சேர்ந்த மக்காக் வகை குரங்கு குட்டியாகும். இந்த வகை குரங்குகள் ரொம்பவும் புத்திசாலித்தனமானவை. பனி பிரதேசத்தில் வாழும் இவை, உணவுகளை கழுவி உண்ணவும், உப்பு சுவைக்காக கடல் நீரை சேர்த்துக்கொள்ளவும் தெரிந்து வைத்திருக்கின்றன. அவ்வளவு ஏங்க, மனிதர்களை போல உடலை சூடாக வைத்துக்கொள்ள வெந்நீர் தொட்டிகளில் குளிக்கவும் கூட செய்யும். ஜப்பான் நாட்டில் இயற்கையாக வெந்நீர் ஊற்றுக்கள் நிறைய இருக்கின்றன.
தனிமையில் குட்டி குரங்கு
ஜப்பானில் இச்சிகாவா எனும் உயிரியல் பூங்காவில் இந்த குரங்குகளில் சில வளர்க்கப்படுகின்றன. அப்படி வளர்க்கப்பட்ட குரங்குகளில் ஒரு பெண் குரங்கு குட்டிகளை பெற்றெடுத்திருக்கிறது. இந்த குட்டிகளில் ஒன்றை அதன் தாய் சேர்த்துக்கொள்ளவே இல்லை. குட்டி நெருங்கி வரும்போதெல்லாம் தாய் குரங்கு அதை தள்ளி விட்டிருக்கிறது. இதனால், அந்த குட்டி கூட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஒராங்குட்டான் பொம்மை
வழக்கமாக இந்த வகை குரங்குகள், முதல் முறையாக பிரசவிக்கும்போது குட்டிகளை கண்டுக்கொள்ளாமல் இருப்பது சகஜமான ஒன்றுதான். எனவே தனித்து விடப்பட்ட குரங்கு குட்டிக்கு 'பன்ச்' என பெயரிட்ட உயிரியல் பூங்கா அதிகாரிகள், குரங்கு குட்டிக்கு தனிமை தெரியாமல் இருக்க ஆரஞ்சு நிறத்தில் ஒராங்குட்டான் பொம்மை ஒன்றை பரிசாக கொடுத்திருந்தனர்.
Lord please take away all of Punch pain away and give it to Diddy instead pic.twitter.com/Vn3tf0I0RB
— kira 👾 (@kirawontmiss) February 19, 2026
தனிமையே துணை
இப்போது இந்த பொம்மையுடன்தான் குட்டி குரங்கு சுற்றி சுற்றி வருகிறது. தனது தாயிடம் நெருங்கும்போது, தாய் குரங்கு குட்டியை துரத்தி விடுவதால், குட்டி குரங்கு எங்கு போனாலும் பொம்மையுடன்தான் போகிறது. அது பொம்மையை விட்டு பிரிவதில்லை. ஓரிரு நாட்களுக்கு முன்னர் இன்னொரு குட்டியுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, அந்த குட்டியின் தாய் 'பன்ச்' குட்டியை தாக்கியிருக்கிறது. இதனால் பயந்து போன 'பன்ச்' பொம்மை பின்னால் வந்து ஒளிந்துக்கொண்டது.
நெட்டிசன்கள் சப்போர்ட்
இது தொடர்பான வீடீயோதான் சோஷியல் மீடிக்களில் பரவலாக ஷேராகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் குரங்கு குட்டியை தத்தெடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். என்னதான் குரங்காக இருந்தாலும் அதற்கும் பாசம், ஏக்கம், தனிமை எல்லாம் இருக்கத்தானே செய்யும் என்று நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications