அடங்காத ஆத்திரம்..லெபனான் மீது கை வைத்த இஸ்ரேல்! தரைவழி தாக்குதலால் நிலைகுலையும் எல்லை! ஐநா கோரிக்கை
பெய்ரூட்: பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக களமிறங்கிய ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலை சீண்டிய நிலையில் லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரபடுத்தி உள்ளது. இந்த நிலையில் தாக்குதல் காரணமாக இதுவரை பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் தொடங்கி இருக்கிறது. இதனால் போர் பதற்றம் அங்கு அதிகரித்துள்ள நிலையில், பேச்சுவார்த்தைக்கு ஐநா கோரிக்கை விடுத்துள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த பேஜர் தாக்குதலில் ஏராளமானோர் பலியான நிலையில், 2500க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்நிலையில் இஸ்ரேல் தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ஹிஸ்புல்லா மீது தாக்குதலை தொடங்கி இருக்கிறது. போர் விமானங்கள், ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்டவை மூலம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று முன் தினம், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த வியாழக்கிழமை முதல் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. நூற்றுக்கணக்கான குண்டுகள், ராக்கெட்டுகள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவின் மகளும் கொல்லப்பட்டார். அதனை ஹிஸ்புல்லாவும் உறுதி செய்துள்ளது.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என கூறப்படுகிறது. மேலும் சிரியாவில் இருக்கும் சில ஆயுத குழுக்களும், ஏமன் நாட்டில் இருக்கும் ஹைத்தி போராளிகளும் இஸ்ரேலுக்கு எதிராக தங்கள் கவனத்தை திருப்பி இருக்கின்றனர். இந்த நிலையில் லெபனானில் வான்வழி தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் அந்நாட்டின் மீது தரைவழி தாக்குதலை தொடங்கி இருக்கிறது. லெபனான் நாட்டின் எல்லைப் பகுதிகள் மற்றும் பெய்ரூட்டை நோக்கி இந்த தரைவழி தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளதாக ராணுவம் அதனை உறுதி செய்திருக்கிறது.
இஸ்ரேல் அரசியல் குழுவின் முடிவின்படி ஹஸ்புல்லா பயங்கரவாத இலக்குகள் குறித்த நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், இதை அடுத்து அந்த பகுதிகளை குறி வைத்து துல்லிய தாக்குதல் மற்றும் இலக்குகள் கண்டறியப்பட்ட பகுதிகளில் தரைவழி தாக்குதலை தாங்கள் தொடங்கி உள்ளதாக கூறி உள்ளது இஸ்ரேல் ராணுவம். இந்த இலக்குகள் அனைத்தும் இஸ்ரேல் எல்லை அருகே உள்ள கிராமங்களில் இருப்பதாகவும், இவை இஸ்ரேல் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இஸ்ரேல் விமானப்படை மற்றும் பீரங்கி படையும் பக்கபலமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தாக்குதலில் உயரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்திருக்கிறது. நேற்றைய தாக்குதலில் மட்டும் 95 பேர் கொல்லப்பட்டதாகவும் 170-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் மத்திய கிழக்கில் பதட்டத்தை தவிர்க்க பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று ஐநாவின் கோரிக்கையை இஸ்ரேல் நிராகரித்து, தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications