For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ஸ்மார்ட் பிளே" ஆடிய இந்திய அணி.. கடைசி கட்டத்தில் தலைகீழான மேட்ச்.. கலக்கிய தமிழர்! நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

கேப்டவுன்: நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடைபெறும் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஸ்மார்ட்டாக பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் மிகவும் மெதுவாக ஆடினாலும் கடைசி நேரத்தில் வேகம் காட்டி இந்திய அணி 305 ரன்களை குவித்து உள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. ஈடன் பார்க் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளது.

இரண்டாவது இன்னிங்சில் பிட்ச் பவுலிங்கிற்கு சாதகமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் இன்று பவுலிங் செய்ய முடிவு எடுத்தார். பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தும் கூட இந்திய அணி மிகவும் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது.

அல்வா மாதிரி வந்த சான்ஸை.. தூக்கி வீசிய வீரர்! எத்தனை பேர் இருக்காங்க? பிசிசிஐ சாட்டையை சுழற்றணும்! அல்வா மாதிரி வந்த சான்ஸை.. தூக்கி வீசிய வீரர்! எத்தனை பேர் இருக்காங்க? பிசிசிஐ சாட்டையை சுழற்றணும்!

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இன்று ஆடும் இந்திய அணியில் ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மன் கில், ரிஷப் பந்த் (வி.கே), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து பேட்டிங் இறங்கிய இந்திய அணியில் ஓப்பனிங் இறங்கிய தவான் 77 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் சுப்மான் கில் 65 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இரண்டு பேருமே தொடக்கத்தில் விக்கெட் கொடுக்காமல் நிதானமாக ஆடினார்கள். கிட்டத்தட்ட இரண்டு பேருமே டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார்கள் என்றுதான் கூற வேண்டும். இரண்டு பேருமே 100க்கு கீழ்தான் ஸ்டிரைக் ரேட் வைத்து இருந்தனர்.

தேவையான நேரம் பவுண்டரி

தேவையான நேரம் பவுண்டரி

ஆனாலும் ரன் ரேட் மொத்தமாக சரியாத வகையில் அவ்வப்போது பவுண்டரி அடித்தனர். உதாரணமாக இன்று தவான் 13 பவுண்டரிகளை அடித்தார். சுப்மான் கில் 3 சிக்ஸ், 1 பவுண்டரி அடித்தார். இன்னொரு பக்கம் ஷ்ரேயாஸ் ஐயர் தொடக்கத்தில் நிதானமாக ஆடினார். 76 பந்துகள் பிடித்த அவர் 80 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்ஸ், 4 பவுண்டரி அடக்கம். 105.26 ஸ்டிரைக் ரேட்டில் நிதானமாக ஆடினாலும் தேவையான நேரங்களில் சிக்ஸ், பவுண்டரி அடித்தார்.

டி 20 போட்டிகளில் சொதப்பினாலும் ஒருநாள் போட்டிகளில் இவர் சிறப்பாக ஆடி வருகிறார்.

80(111)
54(57)
63(71)
44(34)
50(37)
113*(111)
28*(23)
80(76)

இதுதான் கடைசியாக 8 ஒருநாள் போட்டிகளில் இவர் அடித்த ரன்கள். இரண்டு போட்டிகளை தவிர மற்ற போட்டிகளில் இவர் அரை சதம் அடித்துள்ளார்.

ஷ்ரேயாஸ் ஐயர் - சஞ்சு சாம்சன்

ஷ்ரேயாஸ் ஐயர் - சஞ்சு சாம்சன்

இன்னொரு பக்கம் ஐயருக்கு உறுதுணையாக சஞ்சு சாம்சன் இருந்தார். அவர் மிகவும் மெதுவாக ஆடினாலும் ஸ்மார்ட்டாக ஸ்டிரைக் ரொட்டேட் செய்து கொண்டு இருந்தார். 38 பந்துகளில் 36 ரன்களை அவர் எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம். இந்திய அணியின் பேட்டிங் இன்று மிகவும் ஸ்மார்ட்டாக இருந்தது. முதல் 40 ஓவர்கள் இந்திய அணி மிகவும் நிதானமாக ஆடியது. பெரிதாக விக்கெட்டுகளை இழக்க கூடாது என்பதால் பொறுமையாக ஆடியது. ஒப்பனர்கள் அடித்தளம் போட்டிக்கொடுத்த காரணத்தால் மிடில் ஆர்டர் வீரர்கள் டென்சன் இன்றி நிதானமாக ஆடினார்கள்.

40 ஓவருக்கு பின்

40 ஓவருக்கு பின்

40 இவருக்கு பின் ஓவருக்கு 12 ரன்கள் எடுக்கும் அளவிற்கு இந்திய அணி வேகம் காட்டியது. அடுத்தடுத்து பவுண்டரிகள், சிக்ஸர்களை அடித்தனர். கடைசியில் வந்த வாஷிங்க்டன் சுந்தர் இன்னும் வேகம் காட்டினார். 37 ரன்களை இவர் வெறும் 16 பந்துகளில் அடித்தார். இந்திய அணியின் ஒட்டுமொத்த ரன்களை சட்டென உயர்த்தியது வாஷிங்க்டன் சுந்தர்தான். 3 சிக்ஸ், 3 பவுண்டரிகளை கடைசி கட்டத்தில் அடித்து அசத்தினார். இதனால் 280 ரன்கள் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி 306 ரன்களை எடுத்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு இந்திய அணி கொஞ்சம் கடினமான இலக்கை நிர்ணயம் செய்துள்ளது .

English summary
The last 10 over changed the match for Team India against the New Zealand series - What happened?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X