இன்று அமைச்சராக பதவியேற்கமாட்டோம்.. முடிவை அறிவித்த ஐயூஎம்எல்.. காரணம் இதுதான்
சென்னை: தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதில் தவெகவிற்கு ஆதரவளித்துள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூட இன்றைய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அமைச்சராக பதவியேற்காது என்று அந்த கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தனியார் தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ''நாங்கள் முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி உள்ளோம். தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி வந்து விடக்கூடாது என்பதற்காக தான் இந்த ஆதரவை கொடுத்தோம். நாங்கள் அவர்களிடம் அமைச்சர் பதவி எதையும் கேட்கவில்லை. ஆனால் அவர்கள் பெருந்தன்மையுடன் ஒரு அமைச்சர் பதவியை கொடுத்துள்ளனர். அதனை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம்.

ஆனால் இன்று காலை 11 மணிக்கு தான் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. எங்களிடம் 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது என்பது பற்றி இந்த ஆலோசனை கூட்டத்தில் தான் முடிவெடுத்து அறிவிக்க உள்ளோம். இதனால் இன்றைய அமைச்சர்கள் பதவியேற்பில் நாங்கள் பங்கேற்கவில்லை'' என்றார். இதன்மூலம் அடுத்தக்கட்டமாக அமைச்சரவை விரிவாக்கத்தின்போது இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்எல்ஏ அமைச்சராக பொறுப்பேற்க உள்ளது உறுதியாகி உள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி திமுக கூட்டணியில் போட்டியிட்டது. மொத்தம் 2 தொகுதிகள் வழங்கப்பட்டது. வாணியம்பாடு, பாபநாசம் தொகுதிகளில் திமுக கூட்டணியில் ஏணி சின்னத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர்கள் களமிறங்கினர்.
இதில் வாணியம்பாடி தொகுதியில் சையத் பாரூக் பாஷாவும், பாபநாசம் தொகுதியில் ஷாஜகான் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். தவெகவிற்கு ஆட்சியை பிடிக்க தேவையான 118 எம்எல்ஏக்கள் இல்லை. இதனால் விசிக, 2 கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வெளியில் இருந்து தவெகவிற்கு ஆதரவு வழங்கியது. ஆனால் தற்போது அந்த கட்சிக்கு விஜய் அமைச்சர் பதவியை ஆஃபராக வழங்கி உள்ளார். இதில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்எல்ஏ ஷாஜகான் அமைச்சராக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றைய ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு தான் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாறுவேடத்தில் நள்ளிரவு ரவுண்ட்ஸ் போகிறாரா முதல்வர் விஜய்? தவெக ஆனந்த்ஜீத் உடைத்த அதிரடி ரகசியம்! -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
தற்குறி கூட்டம், கவர்ச்சி கூட்டம்.. எல்லாத்துக்குமே திமுக காரணமா.. சென்னை மேயர் பிரியா கேள்வி -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
அதிமுகவில் பட்ட கஷ்டம்! தவெகவில் மரியாதை கொடுத்தால் போதும்! பதவிலாம் வேண்டாம்! உடுமலை ராதாகிருஷ்ணன் -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications