கொளுத்தும் வெயில்... மயங்கி விழுந்த யாத்ரீகர்கள்... மினா நகர் நெரிசலை நேரில் பார்த்தவர் தகவல்
துபாய்: லட்சக்கணக்கான மக்கள் ஒரே சாலையில் குவிந்ததாலும், வெயில் அதிகரித்து பலர் மயங்கி விழுந்ததாலுமே மினா நகரில் மக்கள் நெரிசல் ஏற்பட்டு பலர் பலியானதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
சவுதியில் புனித மெக்கா பகுதிக்கு அருகே மினா நகரில் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட மக்கள் நெரிசலில் 700க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்தத் துயரம் சம்பவம் நடைபெற்ற போது என்ன நடந்தது என்பதை, அதனை நேரில் பார்த்த இந்தியா ஃப்ரடெர்னிட்டி ஃபோரம் என்ற அமைப்பின் உறுப்பினர் அமிர் சுல்தான், ‘தி இந்து' நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஹஜ் பயணிகள்...
இந்த ஆண்டு ஹஜ் பயணிகளாக பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மெக்காவுக்கு வந்தனர். இந்த புனித பயணத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் ‘சாத்தான் மீது கல் எறிதல்' என்ற நிகழ்வு ஜம்ரத் என்ற இடத்தில் நடக்கும்.

6 வகை சாலைகள்...
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள மினாவில் இருந்து புறப்பட்டு செல்வார்கள். மினாவுக்கும் ஜம்ரத்துக்கும் இடையே 6 கி.மீ தூரம் உள்ளது. இந்த இடத்துக்கு செல்வதற்கு 6 வகையான சாலைகள் உள்ளன.

ஒரே இடத்தில்...
அதில் 204-ம் எண் சாலையில் நடந்து செல்பவர்கள் நடந்து செல்வார்கள். மற்றொரு பாதையில் ரயில் மூலம் வருவார்கள். இந்த இரண்டு பாதை களில் இருந்தும் ஒரு இடத்தில் வெளியேறும் வகையில் வழி அமைக்கப்பட்டுள்ளது.

சிக்கிக் கொண்ட மக்கள்...
இந்நிலையில், வியாழக்கிழமை மதியம் லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் இந்த வழியில் வந்ததால், பெரும் கூட்டம் ஏற்பட்டது. பலர் இதில் சிக்கிக்கொண்டனர். என்ன செய்வதென்று தெரியாமல் மக்கள் தவித்தனர்.

வெயிலின் உக்கிரம்...
சுமார் 40 டிகிரி செல்ஷியஸ் அளவில் வெயில் சுட்டெரித்ததால், ஏராளமானோர் மயங்கி விழுந்தனர். ஒருவர் மீது ஒருவராக அடுக்கடுக்காக விழுந்தனர். இதில் ஏற்பட்ட நெரிசலில் 700-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

பலி அதிகரிக்கலாம்...
ஆனால், இந்த பெரும் துயர சம்பவத்தில் இறந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். நூற்றுக்கணக்கானவர்கள் மூச்சுத் திணறலால் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.

மீட்புப் பணி...
துபாய் அரசு ராணுவம், போலீஸார், தீயணைப்பு வீரர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் அவர் களை மீட்கும் பணியில் ஈடு பட்டனர். பலியானவர்களில் ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா நாட்டை சார்ந்தவர்களே அதிகம். இந்தியர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications