கத்தார் இனி பெட்ரோல் ஏற்றுமதி செய்யாதா?! மனித எதிர்காலத்தை மாற்றும் முடிவு.. பின்னணி என்ன?

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான அமைப்பில் இருந்து கத்தார் வெளியேறுவதாக அறிவித்து இருப்பது உலக நாடுகளுக்கு மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    எண்ணெய் நாடுகளுக்கு அதிர்ச்சி... ஒபெக் அமைப்பிலிருந்து வெளியேறியது கத்தார்- வீடியோ

    டோஹா: பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான அமைப்பில் இருந்து கத்தார் வெளியேறுவதாக அறிவித்து இருப்பது உலக நாடுகளுக்கு மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    நேற்று கத்தார் வெளியிட்ட இந்த அறிவிப்பு பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மிக முக்கியமான ஒரு அங்கத்தில் இருந்து கத்தார் கழன்று கொண்டு வெளியே வந்தது ஏன் என்று எல்லோருக்கும் கேள்விகள் எழுந்துள்ளது.

    இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. இது மக்களின் எதிர்காலத்தையே ஒரு வகையில் மாற்றும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    என்ன அமைப்பு

    என்ன அமைப்பு

    உலகில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் இணைந்து உருவாக்கிய அமைப்புதான் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான அமைப்பு (Qatar To Leave Oil-Exporting Nations' Group - OPEC). மிகவும் வலுவான இந்த அமைப்பில் 15 நாடுகள் உள்ளது. ஒருவகையில் உலகையே இந்த 15 நாடுகள்தான் கட்டுப்படுத்துகிறது என்று கூட கூறலாம். இதில் ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா, கத்தார், அரபு அமீரகம் உள்ளிட்ட 15 எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் உள்ளது.

    அறிவித்தது

    அறிவித்தது

    இந்த நிலையில் இதில் இருந்து வெளியேறுவதாக கத்தார் அறிவித்துள்ளது. 1961ல் கத்தார் இதில் இணைந்தது. இந்த நிலையில் 2019 ஜனவரி 1ம் தேதியோடு இந்த அமைப்பில் இருந்து வெளியேற போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

    இனி செய்யாது

    இனி செய்யாது

    அதன்படி கத்தார் ஜனவரியில் இருந்து பெட்ரோல் டீசல் ஏற்றுமதி செய்வதை நிறுத்திக் கொள்ளும். உடனடியாக மொத்தமாக நிறுத்தாமல் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் உற்பத்தியை குறைத்துக் கொள்ளும். ஏற்கனவே கத்தார் எண்ணெய் உற்பத்தியை குறைத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    கத்தார் சொல்லும் காரணங்கள்

    கத்தார் சொல்லும் காரணங்கள்

    இதற்கு கத்தார் ஒரு காரணம் சொல்கிறது. ஆனால் உலக நாடுகள் வேறு ஒரு காரணம் சொல்கிறது.

    கத்தார் சொல்லும் காரணம் என்னவென்றால், முழுக்க முழுக்க இயற்கை எரிபொருளுக்கு மாற போகிறோம். கச்சா எண்ணெயில் எதிர்காலம் இல்லை, என்கிறது.

    உலக நாடுகள் சொல்லும் காரணம் என்னவென்றால், சவுதி ஒபெக் நாடுகளின் பட்டியலில் செய்த அழுத்தமும், கட்டுப்பாடும்தான் கத்தார் வெளியேற காரணம் என்கிறது.

    முந்திக் கொண்ட கத்தார்

    முந்திக் கொண்ட கத்தார்

    இதில் இயற்கை எரிபொருளுக்கு மாற ஆசைப்பட்டுத் தான் கத்தார் வெளியேறியது என்றால், கண்டிப்பாக கத்தார் இதில் முந்திக் கொண்டது என்றுதான் கூற வேண்டும். ஆம், இப்போதே உலக நாடுகள் பல பெட்ரோல் டீசலுக்கு பதிலாக இயற்கை எரிபொருளுக்கு மாற திட்டமிட்டு வருகிறது. அந்த சந்தையை முதலில் பிடிக்கும் திட்டத்துடன் கத்தார் முதலில் வெளியேறி உள்ளது.

    வெளியேற வாய்ப்புள்ளது

    வெளியேற வாய்ப்புள்ளது

    கத்தார் போலவே ஒபெக் நாடுகளின் பட்டியலில் இன்னும் சில நாடுகள் இருக்கிறது. அந்த நாடுகளும் இந்த பட்டியலில் இருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியேற வாய்ப்பு இருக்கிறது. இயற்கை எரிபொருளுக்கு மாற அந்த நாடுகளும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

    எதிர்காலம் மாறும்

    எதிர்காலம் மாறும்

    இது ஒரு வகையில் மனித குலத்தின் எதிர்காலத்தையே மாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், உலகமே கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை எரிபொருளுக்கு மாற வழிவகுக்கும். அதே சமயம் இயற்கை எரிபொருளை மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமில்லாமல் எல்லோராலும் உருவாக்க முடியும் என்பதால், அந்த நாடுகளும் பெரிய பாதிப்பை சந்திக்கும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+