1951ல் அரச குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவம்.. சவுதி அரேபியாவில் மதுபானம் தடை செய்யப்பட்டது ஏன்?
ரியாத்: சவுதி அரேபியாவில் மதுபானத் தடை 1952-ல் அமல்படுத்தப்பட்டது. ஆனால் இதன் பின்னணி 1951-ஆம் ஆண்டு ஜெட்டாவில் உள்ள பிரிட்டிஷ் துணைத் தூதர் சிரில் ஓஸ்மான் இல்லத்தில் நடந்த ஒரு மாலை நேர சந்திப்பில் தொடங்கியது. சொந்த மகன் மதுபோதையில் செய்த தவறுக்காக, ஒட்டுமொத்த நாட்டிற்குள்ளும் மதுபானத்தை தடை செய்தார் சவுதி அரேபியா அரசர். தன் மகனை போல் மதுபோதையில் யாரும் தவறு செய்துவிடக்கூடாது என்பதற்காகவே அவர் எடுத்த முடிவு தான் சவுதி அரேபியாவின் வளர்ச்சிக்கும் ஒரு காரணமாக உள்ளது.
சவுதி அரேபியா தற்போது மதுபானம் தொடர்பான விவகாரத்தில் புதிய முடிவு எடுத்துள்ளது. 70 ஆண்டுகளுக்கு மேலான முழுமையான தடைக்குப் பிறகு, சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் மதுபானத்தைப் பயன்படுத்தும் சட்டப்பூர்வ அனுமதியை அந்நாடு வழங்க தொடங்கி உள்ளது. முஸ்லீம் அல்லாத தூதரக அதிகாரிகளுக்காக அரசு நடத்தும் கடைகள் திறக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, பிரீமியம் குடியிருப்புத் திட்டங்களின் கீழ் உள்ள அதிக வருமானம் ஈட்டும் முஸ்லீம் அல்லாதவர்களுக்கும் கடுமையான ஒழுங்குமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது

மேலும், எக்ஸ்போ 2030 மற்றும் 2034 பிபா உலகக்கோப்பை போன்ற சர்வதேச திருவிழாவை முன்னிட்டு, குறிப்பிட்ட சுற்றுலா மண்டலங்களிலும் மது விற்பனைக்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. எனினும், இந்த மாற்றங்கள் ஆரம்பத்தில் விதிக்கப்பட்ட தடையை முழுமையாக நீக்கிவிடவில்லை. சவுதி அரேபியாவில் மதுபானம் ஏன் இவ்வளவு கடுமையான கட்டுப்பாட்டில் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள, நாம் மதத்தைத் தாண்டி, அந்நாட்டின் வரலாற்றையே மாற்றிய ஒரு சம்பவம் தான் காரணம்.
சவுதி அரேபியாவில் மதுபானத் தடை 1952-ல் அமல்படுத்தப்பட்டது. ஆனால் இதன் பின்னணி 1951-ஆம் ஆண்டு ஜெட்டாவில் உள்ள பிரிட்டிஷ் துணைத் தூதர் சிரில் ஓஸ்மான் இல்லத்தில் நடந்த ஒரு மாலை நேர சந்திப்பில் தொடங்கியது. ஓஸ்மான் அங்கு ஒரு விருந்தளிப்பவராகவும், மது அருந்துபவர்களுக்கு நல்ல தோழராகவும் அறியப்பட்டார். அன்றைய மாலை விருந்தில், அதிகப்படியாக மது அருந்திய சவுதி இளவரசர் மிஷாரி பின் அப்துல் அஜிஸ், அங்கிருந்த ஒரு ஆங்கிலேயப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
வரம்பு மீறிய சவுதி இளவரசர்
சவுதி இளவரசர் மிஷாரியின் நடத்தை வரம்பு மீறியபோது, ஓஸ்மான் அவருக்கு மேற்கொண்டு மது வழங்க மறுத்து, அவரை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியிருக்கிறார். இதனால் அவமானமடைந்தும் ஆத்திரமடைந்தும் 19-வயது இளவரசர் அங்கிருந்து வெளியேறினார். அடுத்த நாள், மது போதை இன்னும் தெளியாத நிலையில், ஆவேசத்துடன் ஓஸ்மானின் வீட்டிற்குத் திரும்பிய மிஷாரி, அந்தப் பெண்ணையும் மதுவையும் தருமாறு மிரட்டினார். மீண்டும் ஓஸ்மான் அவரை வெளியேற்ற முயன்றபோது, மிஷாரி தனது துப்பாக்கியால் சுட்டார். இதில் துணைத் தூதர் ஓஸ்மான் கொல்லப்பட்டார், அவரது மனைவி காயமடைந்தார்.
மன்னர் அப்துல் அஜிஸின் அதிரடி முடிவு
இந்தக் கொலைச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது ஒரு தூதரகச் சிக்கல் மட்டுமல்லாமல், அரச குடும்பத்திற்குப் பெரும் அவமானத்தையும் ஏற்படுத்தி தந்தது. மதுபானம் எவ்வாறு மனிதர்களைக் கட்டுக்கடங்காமல் ஆக்குகிறது என்பதையும், அது வெளிநாட்டு உறவுகளை எப்படிப் பாதிக்கிறது என்பதையும் இச்சம்பவம் சவுதி மன்னருக்கு உணர்த்தியது.
மன்னர் கடும் கோபம்
இளவரசர் மிஷாரியின் செயலால் மன்னர் அப்துல்அஜிஸ் (இபின் சவுத்) கடும் கோபமடைந்தார். அவர் தனது மகனைக் கைது செய்ய உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட ஓஸ்மானியின் மனைவியிடம் இளவரசருக்கு என்ன மாதிரியான மரண தண்டனை வழங்க வேண்டும் என்பதை நீங்களே தீர்மானியுங்கள்; அவனது தலையைத் துண்டித்து பிரிட்டிஷ் தூதரகத்தின் முன்னால் கம்பியில் குத்தி வைக்கிறேன்" என்று உறுதி அளித்திருக்கிறார். ஆனால் அவர் அதை மறுத்துவிட்டு, 70,000 டாலர் இழப்பீட்டை மட்டும் ஏற்றுக்கொண்டார்.
மாதம் 20 சவுக்கடி
காலப்போக்கில், மரண தண்டனையைச் சிறைத்தண்டனையாகவும், மாதம் 20 கசையடிகளாகவும் மன்னர் மாற்றினார். இந்தத் தவறுக்குத் தன் மகனை விட, மேல்தட்டு மக்களிடையே ஊடுருவிய 'மேற்கத்தியப் பழக்கவழக்கங்கள்' (குறிப்பாக மது அருந்துதல்) தான் காரணம் என்று மன்னர் முடிவு செய்தார்.
முற்றிலும் மறைந்தன
ஓராண்டுக்குள், சவுதி அரேபியா முழுவதும் மதுபான இறக்குமதி, விற்பனை மற்றும் நுகர்வுக்குத் தடை விதிக்கும் ஆணையை அவர் பிறப்பித்தார். 1952-ஆம் ஆண்டின் இறுதியில், அந்நாட்டில் மதுபானங்கள் முற்றிலும் மறைந்தன. அரேபிய-அமெரிக்க எண்ணெய் நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் மாதம் மூன்று பாட்டில்கள் என வழங்கப்பட்டு வந்த மதுபானமும் நிறுத்தப்பட்டு, சவுதி அரேபியா முழுமையான மதுவிலக்கு நாடாக மாறியது.
மதுபானம் 1952-க்கு முன்பு முன்பு புழக்கத்தில் இருந்ததா?
பலரும் நினைப்பது போல, சவுதி அரேபியாவில் 1952-க்கு முன்பு அந்தப் பிராந்தியத்தில் மதுபானம் முற்றிலும் இல்லாமல் இல்லை. இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியாவில், நகர்ப்புறங்களிலும் சில குறிப்பிட்ட சமூகத்தினரிடமும் (குறிப்பாகக் கிறித்தவ மக்கள்) மதுப் பயன்பாடு இருந்தது. அக்காலக் கவிதைகள் மற்றும் வரலாற்றுப் பதிவுகள் மது அருந்தும் கலாச்சாரம் பற்றி உள்ளன.
சவுதி அரேபியாவில் மதுபானம் மீண்டும் நுழையும்
இஸ்லாத்தின் எழுச்சிக்குப் பிறகு, குர்ஆன் போதைப்பொருட்களைத் தடை செய்தது. இருப்பினும், வெவ்வேறு காலகட்டங்களில் மது தடை அமலாக்கம் மாறுபட்டது. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சவுதி அரேபியா ஒருங்கிணைக்கப்பட்டு வெளிநாட்டு உறவுகள் மேம்பட்டபோது, தூதரகங்கள் மற்றும் வெளிநாட்டு எண்ணெய் நிறுவன ஊழியர்கள் வசிக்கும் பகுதிகளில் மதுபானம் மீண்டும் நுழையத் தொடங்கியது. இது அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டும் சகித்துக் கொள்ளப்பட்டது.
மது இறக்குமதி
1952க்கு பிறகு கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக, சவுதி அரேபியா உலகின் மிகக் கடுமையான மதுவிலக்குச் சட்டங்களைப் பின்பற்றியது. மதுவுடன் பிடிபடும் சவுதி குடிமக்களுக்குச் சிறைத்தண்டனை மற்றும் கசையடிகள் வழங்கப்பட்டன; வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்.
இருப்பினும், கள்ளச்சந்தை தொடர்ந்து இயங்கியது. மதுபானங்கள் கடத்தப்பட்டன அல்லது வீடுகளிலேயே தயாரிக்கப்பட்டன. 2024-ல், தூதரகங்கள் தங்களுக்குத் தேவையான அளவு மதுவை இறக்குமதி செய்துகொள்ளும் நீண்டகால ஓட்டையை சவுதி அரேபியா அரசு முற்றிலும் அடைத்தது. இது சீர்திருத்தங்கள் ஒருபுறம் இருந்தாலும், கட்டுப்பாடுகள் இன்னும் கடுமையாகவே இருக்கிறது.
2034 பிபா உலகக்கோப்பை
இந்த சூழலில் எக்ஸ்போ 2030 மற்றும் 2034 பிபா உலகக்கோப்பை போன்ற சர்வதேச திருவிழாவை முன்னிட்டு, குறிப்பிட்ட சுற்றுலா மண்டலங்களிலும் சவுதி அரேபியா அரசு மது விற்பனைக்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதற்காகவே சவுதி அரேபியா தற்போது மதுபானம் தொடர்பான விவகாரத்தில் புதிய முடிவு எடுத்துள்ளது.
முஸ்லிம் அல்லாதவர்கள்
70 ஆண்டுகளுக்கு மேலான முழுமையான தடைக்குப் பிறகு, சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் மதுபானத்தைப் பயன்படுத்தும் சட்டப்பூர்வ அனுமதியை அந்நாடு வழங்க தொடங்கி உள்ளது. முஸ்லீம் அல்லாத தூதரக அதிகாரிகளுக்காக அரசு நடத்தும் கடைகள் திறக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, பிரீமியம் குடியிருப்புத் திட்டங்களின் கீழ் உள்ள அதிக வருமானம் ஈட்டும் முஸ்லீம் அல்லாதவர்களுக்கும் கடுமையான ஒழுங்குமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது
முழுவிலக்கு இல்லை
இன்று சட்டங்கள் தளர்த்தப்பட்டாலும், அது நாட்டின் தார்மீக நிலையில் மாற்றத்தைக் குறிக்கவில்லை. சவுதி குடிமக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மதுபானம் இன்றும் சட்டவிரோதமானதுதான். தற்போதைய புதிய கொள்கைகள் கலாச்சார மாற்றமாகப் பார்க்கப்படாமல், பொருளாதாரத் தேவைகளுக்காகச் செய்யப்படும் விதிவிலக்குகளாகவே பார்க்கப்படுகிறது..
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications