மோதல் ஆரம்பம்.. கொரில்லா போராளிகளின் கிளர்ச்சி ..பஞ்சீர் மலைக்கு ஆயுதங்களோடு புறப்பட்டது தாலிபான்!
காபூல்: தாலிபான்களின் சிம்ம சொப்பனமாக திகழும் பஞ்சீர் மலை பகுதி தற்போது பரபரப்பின் உச்சத்தில் காணப்படுகிறது. தாலிபான்கள் தற்போது ஆயுதங்களோடு பஞ்சீர் மலை பகுதிக்கு புறப்பட்டுள்ளது. நார்தன் அலியன்ஸ் (northern alliance) படைகளை எதிர்த்து தாலிபான்கள் இந்த படையெடுப்பை மேற்கொண்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அடுத்தடுத்து மூன்று சாம்ராஜ்யங்களை கண்டது.. மூன்றுமே நீண்ட காலம் நீடிக்காமல் வீழ்ந்த ராஜ்ஜியங்கள். முதலில் சோவியத் ரஷ்யாவின் படைகள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்து வந்தது. முஜாகிதீன் எதிர்ப்பால் இங்கு ரஷ்யா வீழ்ந்தது. அதன்பின் ரஷ்யாவின் வீழ்ச்சியை பயன்படுத்தி 1995ல் இங்கு தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தது. ஆனால் தாலிபான்களின் ஆட்சியும் வேகமாக வெறும் 6 வருடத்தில் வீழ்ச்சியை சந்தித்தது.
தாலிபான்களை வீழ்த்திய அமெரிக்க படைகள் 2001ல் இருந்து 20 வருடமாக ஆப்கானிஸ்தானில் ஆயுதங்களோடு போர் நடத்தியது . அதோடு தனக்கு ஆதரவான proxy அரசையும் அங்கே அமெரிக்கா நடத்தி வந்தது. இந்த நிலையில்தான் தற்போது அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தாலிபான்கள் மீண்டும் அங்கு ஆட்சிக்கு வந்துள்ளது. சோவியத் ஆட்சியிலும் தற்போது மீண்டும் வந்திருக்கும் தாலிபான் ஆட்சியிலும் வீழ்ச்சி அடையாத ஒரே பகுதிதான் பஞ்சீர் மலை பகுதி. தொடக்க காலத்தில் இருந்து தாலிபான்களை கடுமையாக எதிர்த்து வந்த பகுதிதான் பஞ்சீர் மலை பகுதி.

பஞ்சீர் மலை
இந்த பஞ்சீர் மலை பகுதியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பூர்வகுடி இஸ்லாமிய மக்களின் கூட்டமைப்புதான் நார்தன் அலியன்ஸ் (northern alliance). இந்த நார்தன் அலியன்ஸ் குழுவை வீழ்த்தும் வகையில்தான் பயங்கர ஆயுதங்களோடு தாலிபான்கள் படைகளோடு சென்றுள்ளது. முதலில் முஜாகிதீன் அமைப்பில் இருந்த இந்த குழு தாலிபான்களின் ஆட்சிக்கு பின் 1995ல் பிரிந்து தனி குழுவாக உருவெடுத்தது. தாலிபான்களின் ஆட்சியை கடுமையாக எதிர்த்து, அவர்களுக்கு எதிராக ஆயுத போராட்டங்களை 1995ல் இருந்தே இந்த அமைப்பு முன்னெடுத்து வந்தது. முக்கியமாக தாலிபான்களுக்கு எதிரான அமெரிக்க போராட்டத்தில் அமெரிக்க படைகளுக்கு ஆதரவாக நின்ற அமைப்புதான் நார்தன் அலியன்ஸ் (northern alliance).

யார் இவர்கள்?
சன்னி பிரிவு இஸ்லாமை பின்பற்றும் தஜிக் பிரிவு மக்கள்தான் இந்த மலை பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்கள் மிதவாதிகள். பாரம்பரியமாக ஆப்கானிஸ்தானில் இருக்க கூடிய பூர்வ குடிகள். மூர்கத்தனமான மக்கள் கிடையாது. தாலிபான்களின் மூர்த்தனமான ஆட்சியை இவர்கள் விரும்பவில்லை. தாலிபான்களை கடுமையாக எதிர்த்த இவர்கள் பஞ்ச்சீர் பகுதியில் உருவாக்கிய அமைப்புதான் Northern Alliance. இதை United Islamic Front for the Salvation of Afghanistan என்றும் அழைப்பார்கள். 2001ல் தாலிபான்கள் வீழ்ந்த பின் இவர்களின் குழு அமைதியானது. அமெரிக்க படைகளும் இவர்களிடம் நெருக்கமாக இருந்தது.

போர் பாணி
இவர்களின் போர் பாணி கொரில்லா ஸ்டைல் அட்டாக். இவர்களின் குழுவை சேர்ந்தவர்தான் அம்ருல்லா சாலே. இவரைத்தான் சிஐஏ அமைப்பு உளவாளியாக வளர்ந்துவிட்டது. அதோடு இவரை நாட்டின் ஆட்சி அதிகாரத்திலும் வளர்த்துவிட்ட அமெரிக்காதான். இவர்தான் ஆப்கானிஸ்தான் வீழ்ச்சி பெற்ற அரசில் துணை அதிபராக இருந்தார். அதிபர் கானி நாட்டை விட்டு வெளியேறிய போதும் கூட சாலே நாட்டை விட்டு ஓடவில்லை. தற்போது இவர் பஞ்சீர் மலை பகுதியில்தான் வசித்து வருகிறார். தாலிபான் ஆட்சியை அகற்றுவேன் என்று அறிவித்துள்ளார்.

தாலிபான்
இந்த நிலையில்தான் தற்போது தாலிபான் படைகள் இங்கே போர் தொடுப்பதற்காக ஆயுதங்களோடு சென்றுள்ளது. ஆயுதங்களை ஏந்தி மொத்தமாக பஞ்சீர் மலை பகுதியை கைப்பற்றுவதற்காக தாலிபான்கள் சென்றுள்ளது. இதனால் நாளை முதல் இங்கு தாலிபான்களுக்கும் நார்தன் அலியன்ஸ் குழுவை சேர்ந்த கொரில்லா போராளிகளுக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பகுதியை மொத்தமாக கைப்பற்றாமல் தாலிபான் ஓயாது. அதேபோல் இந்த இடத்தை அவ்வளவு எளிதாக வெல்லவும் முடியாது. நார்தன் அலியன்ஸ் குழுவும் அவ்வளவு எளிதாக வீழ்த்த முடியாத ஒன்று.

ஏன் கஷ்டம்
இந்த பகுதி அதிகமான மலைகளை கொண்ட, வித்தியாசமான இடம். அடர்ந்து காட்டு பகுதியை கொண்ட இடம். இங்கே தாலிபான் படைகள் அவ்வளவு எளிதாக தாக்கு பிடிக்க முடியாது. நார்தன் அலியன்ஸ் குழு இந்த காடுகளிலேயே பயிற்சி பெற்றவர்கள். அவர்களும் பழைய முஜாகிதீன்கள்தான். இவர்கள் எப்போது எந்த மரத்தில் இருந்து வந்து தாக்குவார்கள் என்றே தெரியாது. அதோடு அவர்களிடம் தற்போது தப்பி ஓடிய ஆப்கான் ராணுவ வீரர்களும் தஞ்சம் அடைந்து உள்ளனர். இதன் காரணமாக இவர்களை எளிதாக தாலிபான்கள் வீழ்த்த முடியாது.
Recommended Video

இதுவரை இல்லை
இந்த மலைப்பகுதியில் மோசமான சூழ்நிலை காரணமாகவே இதுவரை எந்த படையெடுப்பிலும் பஞ்சீர் மலை வீழாமல் இருந்தது.இதை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று தாலிபான்கள் திரண்டு சென்றுள்ளனர். ஏற்கனவே இங்கு போராளி குழுக்களின் கொடிதான் பறந்து கொண்டு இருக்கிறது. அதோடு இவர்களின் ஆதரவோடு மூன்று சிறிய நகரங்களை ஏற்கனவே போராளி குழுக்கள் தாலிபான்களிடம் இருந்து மீட்டு வென்றுவிட்டன. இதனால் இங்கே வரும் நாட்களில் மிகப்பெரிய மோதல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போராளி குழுக்கள் மொத்தமாக புதிய பலம் பெறுவதற்கு முன்பாக அவர்களை ஒடுக்க வேண்டும் என்பதற்காக தாலிபான்கள் தற்போது இந்த மலை தொடருக்கு படையெடுப்பை மேற்கொண்டு உள்ளது.












Click it and Unblock the Notifications