ஹெலிகாப்டரில் உடலை தொங்கவிட்ட தாலிபான்கள்.. கிளப்பி விட்ட நெட்டிசன்கள்.. ஆனால் உண்மை இதுதான்!
காபூல்: ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர் அங்கு சுமார் 20 ஆண்டுகளாக நிலை கொண்டிருந்த அமெரிக்க ராணுவம் படைகளை விலக்கிக் கொண்டுள்ளது.
அமெரிக்க ராணுவம் அங்கு போருக்கு பயன்படுத்திய பல ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர்கள், பாதுகாப்பு தளவாடங்களை அப்படியே விட்டுச் சென்று விட்டது.

ஹெலிகாப்டரில் உடல் தொங்கியதா?
அமெரிக்க ராணுவம் சென்றவுடன் காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த தாலிபான்கள், அமெரிக்க படைகள் விட்டுச்சென்ற ஹெலிகாப்டர்களை இயக்கி பார்த்தனர். இதேபோல் அமெரிக்கா விட்டுச் சென்ற பிளாக் ஹாக் ராக் ரக ஹெலிகாப்டரை தாலிபான்கள் வானில் இயக்கி பார்த்தனர். அப்போது ஹெலிகாப்டரின் கீழ் மனித உடல் ஒன்று தொங்கி கொண்டு இருப்பதாக கூறி அந்த வீடியோ வைரலானாது.

நெட்டிசன்கள் கருத்து
ஹெலிகாப்டரில் தொங்கவிடப்பட்ட மனிதரின் உடல் அமெரிக்க மொழி பெயர்ப்பாளர் என்று தகவல்கள் பரவின. ''தாலிபான்கள் அமெரிக்கன் பிளாக் ஹாக்கிலிருந்து(ஹெலிகாப்டர்) யாரையோ தொங்கவிட்டுள்ளனர். தாலிபான்களை இந்த கோர செயலை செய்ய விட்டதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பிடனை இந்த உலகம் ஒருபோதும் மன்னிக்காது'' என்று நெட்டிசன்கள் கருத்து கூற ஆரம்பித்தனர். தாலிபான்கள் சொல்வது ஒன்று; செய்வது ஒன்று என்றும் பலர் கருத்து தெரிவித்தனர்.

உயிரோடு இருக்கிறார்
தற்போது இந்த ஹெலிகாப்டர் தொடர்பான ஜூம் செய்யப்பட்ட(பெரிதாக்கப்பட்ட) வீடியோவும், புதிய வீடியோ ஒன்றும் வெளிவந்துள்ளது. அதாவது ஹெலிகாப்டரின் கீழே தொங்கி கொண்டிருக்கும் நபர் உயிரோடு இருப்பதும், அவர் கைகள் அசைவதும் தெரியவந்துள்ளது. இந்த வீடியோவின் ஆதாரத்திற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும் அந்த மனிதர் இறக்கவில்லை; உயிரோடு இருக்கிறார் என்று உறுதியாக தெரியவந்துள்ளது.

தாலிபான்கள் கொடி
இந்த வீடியோ குறித்து பதிவிட்டுள்ள ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர் பிலால் சர்வாரி என்பவர், '' தாலிபான்கள் வானில் இருந்து தங்கள் கொடியை நிறுவ முயற்சிக்கிறார்கள். அந்த வேலையைதான் அதில் தொங்கி கொண்டிருக்கும் மனிதர் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர்களின் முயற்சி இறுதியில் வெற்றிபெறவில்லை. ஹெலிகாப்டரில் இருந்து தொங்கும் மனிதர் ஒரு கொடி கம்பத்திற்கு அருகில் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்'' என்று கூறியுளளார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications