50 பில்லியன்.. புது எண்ணெய் கிணறை கண்டுபிடித்து 2 மாதம் கூட ஆகவில்லை.. ஈரானை தாக்க அமெரிக்கா ரெடி!

ஈரானில் 50 பில்லியன் பேரல் அளவு கொண்ட புதிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடித்து 2 மாதத்திற்குள் அமெரிக்கா தன்னுடைய கவனத்தை அந்நாட்டை நோக்கி திருப்பி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: ஈரானில் 50 பில்லியன் பேரல் அளவு கொண்ட புதிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடித்து 2 மாதத்திற்குள் அமெரிக்கா தன்னுடைய கவனத்தை அந்நாட்டை நோக்கி திருப்பி உள்ளது.

பொதுவாக ஒரு நாட்டில் கச்சா எண்ணெய் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டால் அந்நாட்டை அமெரிக்கா நட்பாக அறிவிக்கும், இல்லை என்றால் அவர்களுக்கு எதிராக போர் செய்து, அந்நாட்டு மீது கட்டுப்பாடுகளை கொண்டு வரும். மத்திய கிழக்கு நாடுகள் பல இப்படி அமெரிக்காவின் எதிர்ப்பை சந்தித்து இருக்கிறது.

உலகில் மத்திய கிழக்கு நாடுகளிடம் கச்சா எண்ணெய் அதிகமாக இருந்தாலும் கூட, அமெரிக்காதான் இப்போதும் எண்ணெய் வர்த்தகத்தை கட்டுப்படுத்துகிறது. இதனால்தான் கச்சா எண்ணெய் வர்த்தகமும் டாலரில் செய்யப்படுகிறது. எண்ணெய் வர்த்தக அரசியல்தான் பல காலமாக உலகை கட்டுப்படுத்தி வருகிறது.

மிக மோசம்

மிக மோசம்

இதற்கு மத்தியில்தான் ஈரான் அமெரிக்கா இடையே சண்டை விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஈரானின் அணு ஆயுத கொள்கைகளை அமெரிக்கா தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதற்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான விதிகளை விதித்து வருகிறார். அதேபோல் ஈரான் மீது 3 க்கும் மேற்பட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

எண்ணெய் வர்த்தகம்

எண்ணெய் வர்த்தகம்

இதனால் ஈரான் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட தொடங்கியுள்ளது. ஈரானிடம் எண்ணெய் வாங்க கூடாது என்று சீனா, இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளுக்கும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை இந்தியாவும் பின்பற்றி வருகிறது. இதனால் கச்சா எண்ணெயை மட்டும் நம்பி இருக்கும் ஈரானின் பொருளாதாரம் பெரிய அடியை சந்தித்துள்ளது.

தாக்குதல்

தாக்குதல்

தற்போது ஈரான் மீது அமெரிக்கா கடுமையாக தாக்குதலும் நடத்த தொடங்கி உள்ளது. ஈரானில் தொடர்ந்து அமெரிக்கா டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் விரைவில் ஈரான் அமெரிக்கா இடையே போர் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.

என்ன காரணம்

என்ன காரணம்

ஈரானில் 50 பில்லியன் பேரல் அளவு கொண்ட புதிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடித்தது. இதுதான் அமெரிக்காவின் இந்த புது தாக்குதல் நடவடிக்கைக்கு காரணம் என்று கூறுகிறார்கள். ஈரானை தாக்க அமெரிக்காவிற்கு பல காரணங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள். அங்கு ஈரான் எண்ணெய் கிணறை கண்டுபிடித்து 2 மாதத்திற்குள் அமெரிக்கா தன்னுடைய கவனத்தை அந்நாட்டை நோக்கி திருப்பி உள்ளது.

எப்போது நடந்தது

எப்போது நடந்தது

கடந்த 2019ம் அக்டோபர் இறுதியில் ஈரானில் 50 பில்லியன் பேரல் அளவு கொண்ட புதிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்தார். நாட்டின் தென் பகுதியில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. அந்நாட்டு அதிபர் ஹசன் ரௌஹானி இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதில் இருந்து விரைவில் கச்சா எண்ணெய் எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

எப்படி இருக்கும்

எப்படி இருக்கும்

ஏற்கனவே ஈரானில் இருக்கும் மொத்த எண்ணெய் கிணறுகள் மூலம் 150 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் எடுக்க முடியும். தற்போது கூடுதலாக 50 பில்லியன் பேரல் கிடைக்க போகிறது. இது ஈரானில் இரண்டாவது பெரிய எண்ணெய் கிணறு என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் அமெரிக்காவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஈரான் போர்

ஈரான் போர்

இந்த எண்ணெய் கிணறுகளை கைப்பற்ற வேண்டும் என்று அமெரிக்கா இப்படி செய்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த எண்ணெய் கிணறு காரணமாக ஈரானின் மதிப்பு உலக அளவில் உயரும். இதனால் ஈரானிடம் மீண்டும் எண்ணெய் வாங்க சில நாடுகள் முயற்சி செய்யும், தங்கள் முடிவை சீனா உள்ளிட்ட நாடுகள் மறுபரிசீலனை செய்யும். இதை தடுக்கவே இந்த தாக்குதல் என்றும் கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+