Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஸ்திரியா தேர்தலில் வரலாறு படைத்த வலதுசாரி கட்சி.. ஆனாலும் ஆட்சி அமைப்பதில் டிவிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

வியன்னா: ஆஸ்திரியாவின் தீவிர வலதுசாரி கட்சியான எஃப்.பி.ஓ, அந்த நாட்டில் சமீபத்தில் நடந்த தேர்தலில் முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளது. இது ஒட்டு மொத்த ஐரோப்பா யூனியனையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், மறுபக்கம் அந்தக் கட்சி ஆட்சி அமைப்பதற்கும் கடுமையான சவால் நிலவுகிறது.

ஆஸ்திரியாவின் தேசிய தேர்தலில் எஃப்.பி.ஓ 28.8 சதவீத வாக்குகளுடன் முதல் இடம் பெற்றுள்ளது. ஆளும் கட்சியான ஓ.வி.பி 26.3 சதவீத வாக்குடன் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. எஃப்.பி.ஓ கட்சி முன்பு கூட்டணி கட்சிகளுடன் அரசாங்கத்தில் அங்கம் வகித்திருந்தாலும், தேர்தலில் முதல் இடம் பிடித்து வெற்றி பெறுவது இதுவே முதல்முறை. இது ஆஸ்திரியா நாட்டில் மட்டுமல்ல, ஐரோப்பாவில் வலதுசாரி கட்சி வெற்றி பெற்றிருப்பதும் இதுவே முதல்முறையாகும்.

austria election

தேர்தலில் எஃப்.பி.ஓ வெற்றி பெற்றிருந்தாலும் மற்ற எந்த கட்சியினரும், அவர்களுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இல்லை. இதனால் அந்தக் கட்சி ஆட்சி அமைப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. 1950 களில் நிறுவப்பட்ட எஃப்.பி.ஓ கட்சியின் தலைவர் ஹெர்பர்ட் கிக்லை, மற்ற கட்சித் தலைவர்கள் பெரிதாக விரும்பவில்லை.

இந்த வெற்றி குறித்து எஃப்.பி.ஓ கட்தித் தலைவர் ஹெர்பர்ட் கிக்ல் கூறுகையில், தேர்தலில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளோம். புதிய சகாப்தத்திற்கான கதவைத் திறந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். குடிபெயர்வு, கொரோனாவுக்கு பிறகான பொருளாதார சிக்கல்கள், கொரோனா தொற்றின்போது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் ஆளும் கட்சியின் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இது தேர்தலில் எஃப்.பி.ஓ கட்சிக்கு சாதகமாகிவிட்டது.

வலதுசாரி கட்சியின் இந்த வெற்றி, ஆஸ்திரியா அரசியலில் பூகம்பத்தை உருவாக்கியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்வலையில் இருந்து மீண்டு வருவதற்கு சிறிது காலம் ஆகலாம். என்று அரசியல் ஆய்வாளர் தாமஸ் ஹோஃபர் கூறியுள்ளார். 2021 ஆம் ஆண்டு கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற கிக்ல், நாடாளுமன்றத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியுடனும் இணைந்து அரசாங்கம் அமைக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சிக்காக, எல்லா திசைகளிலும் பயணிக்க தயாராக உள்ளோம். என்றும் கூறினார்.

தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்ட ஆஸ்திரிய அதிபர் கார்ல் நெஹம்மர், இந்த தேர்தல் ஒரு பந்தயம்போல இருந்தது. துரதிர்ஷ்டவசமாக நாங்கள் சரியாக திட்டமிடவில்லை. இருப்பினும் நாட்டின் நலனுக்காக மக்களுடன் இணைந்து தொடர்ந்து போராடுவேன் என்று தெரிவித்தார்.

மேலும், எஸ்.பி.ஓ மற்றும் என்.இ.ஓ.எஸ் கட்சிகளுடன் கூட்டணியை உருவாக்குவதன் மூலமாக நெஹம்மர் மீண்டும் அதிபராகும் வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் எஸ்.பி.ஓ 21.1 சதவீத வாக்கும், என்.இ.ஓ.எஸ் கட்சி 2019 ஆம் ஆண்டில் பெற்றதைப் போலவே 9.2 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன. இந்தக் கட்சிகள் கூட்டணி அமைத்தால், ஆஸ்திரியாவில் முதல்முறையாக மூன்று கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பார்கள். அதேசமயம், வலது சாரிகள் ஆட்சியமைக்க மிகவும் போராட வேண்டியிருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2009 ஆம் ஆண்டில் ஓ.வி.பி மற்றும் எஃப்.பி.ஓ கூட்டணியின் முதல் அரசாங்கம் பிரேஸிலில் அமைந்தது. ஆனால், பொதுமக்கள் மத்தியில் பரவலாக எதிர்ப்பை சந்தித்தார்கள். இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் எஃப்.பி.ஓ கட்சி ஊழல் காரணமாக சரிவைக் கண்டது.

ஆஸ்திரியாவில் மொத்தமுள்ள 9 மில்லியன் மக்களில் 6.3 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+