வட கென்யாவில் "மகளிர்" மட்டும் கிராமம்.. ஒரு ஆம்பளை கூட கிடையாதுங்க!
நைரோபி: கென்யாவின் வட பகுதி ஒன்றில், பெண்கள் மட்டுமே வாழும் கிராமம் ஒன்று உள்ளது. இங்கு வாழும் பெண்கள் சுமார் 25 ஆண்டுகளாக ஆண்களின் துணையின்றி வாழ்ந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
கென்ய நாட்டின் தலைநகரான நைரோபி நகரிலிருந்து 380 கி.மீட்டர் தொலைவில் உள்ள சம்புரு பகுதியில் உள்ளது உமோஜா கிராமம்.
கடந்த 1990ம் ஆண்டு 15 பெண்கள் கூட்டாக இணைந்து இந்தக் கிராமத்தில் வாழத் தொடங்கினர். இவர்கள் அனைவரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், குழந்தைத் திருமணம், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆவர்.

ஒரே தலைவி...
தற்போது இந்தக் கிராமத்தில் 47 பெண்கள் மற்றும் 200 குழந்தைகள் வாழ்ந்து வருகின்றனர். பிரிட்டன் ராணுவத்தினரால் பலாத்காரம் செய்யப்பட்ட ரெபேக்கா லோலோசோலி என்றப் பெண் இந்த கிராமத்தின் தலைவியாக செயல்பட்டு வருகிறார்.

வருமானம்...
நகை செய்து விற்பதின் மூலமாகவும், இந்தப் பகுதியிலேயே கூடாரங்களால் ஆன ஒரு சிறிய சுற்றுலாத்தலத்தை ஏற்படுத்தியுள்ளதன் மூலமாகவும் இப்பெண்கள் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

சுதந்திரமான வாழ்க்கை...
அடிமைப் போல நடத்தும் ஆண்களுக்கிடையே வாழும் பெண்கள் தமது வாழ்வில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. ஆனால், அவர்களைப் போலன்றி தமது வாழ்க்கை சுதந்திரமானதாக அமைந்திருப்பதாக இங்கு வாழும் பெண்கள் கூறுகின்றனர்.

ஆண்களுக்குத் தடையில்லை...
இந்த கிராமத்தைச் சுற்றிப் பார்க்க ஆண்களுக்கு தடையேதும் இல்லையென்றாலும், அவர்களால் இங்குள்ள பெண்களின் அனுமதியின்றி வெகுநாட்கள் தங்க முடியாது.

அத்துமீறும் ஆண்கள்...
தனியாக ரோட்டில் ஒரு பெண் சென்றாலே விடாதவர்கள் இவ்வாறு பெண்கள் மட்டுமே வாழும் கிராமம் என்றால் சும்மா இருப்பார்களா? அக்கம்பக்கத்து கிராமங்களில் உள்ள ஆண்கள் சிலர் அவ்வப்போது இங்குள்ள பெண்களிடம் தவறாக நடக்க முயற்சிப்பது உண்டாம்.

குடும்பங்களாக...
ஆனால், அதற்கெல்லாம் அஞ்சாமல், அனைத்து தடைகளையும் தைரியமாக எதிர்கொண்டு, இந்த கிராமத்தில் வாழும் 247 பெண்களும் பத்து குடும்பங்களாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
சூப்பர்!












Click it and Unblock the Notifications